வல்லினம், மெல்லினம், இடையினம்
Posted October 29, 2010
on:- In: Books | Ideas | IT | Poster | Serial | Uncategorized
- 6 Comments
நம்முடைய ஊடகங்களில் ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறைபற்றி இரண்டுவிதமான பிம்பங்களே உள்ளன. ஒன்று, ‘இங்கே நுழைந்தால் லட்சங்களில் சம்பளம் அள்ளலாம், உலகைச் சுற்றிவரலாம், கோடிகளில் சேமித்து ’பில் கேட்ஸ்’ மாதிரியோ ‘சிவாஜி’ ரஜினிமாதிரியோ சமூக சேவை செய்யலாம். எட்ஸட்ரா எட்ஸட்ரா’. இன்னொன்று ‘ஐடில நுழைஞ்சுட்டா ராத்திரி, பகல் கிடையாது, பொண்டாட்டி, புள்ளயோட நேரம் செலவிடமுடியாது, கண்ணு கெட்டுப்போகும், தூக்கமில்லாம உடம்பு கெட்டுப்போகும், உட்கார்ந்த இடத்தில வேலை பார்க்கறதால முப்பது வயசுல ஹார்ட் அட்டாக் வரும், அப்புறம் மூச்சு முட்டி ரிடையராகவேண்டியதுதான்.’
வழக்கம்போல், நிஜம் இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கிறது. அதைப் பதிவு செய்யும் எழுத்துகள் (தமிழில்) அதிகம் இல்லை.
சில வருடங்கள்முன் விகடனில் வெளிவந்த எனது ‘வல்லினம், மெல்லினம், இடையினம்’ தொடர் சிலருக்கு நினைவிருக்கலாம். ஐடி துறைபற்றிய ஒரு ‘behind-the-screens’ பார்வையாக வந்த அந்தத் தொடர் வெளியானபோதும் பின்னர் புத்தகமானபோதும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
’வ-மெ-இ’ எழுதி முடிந்தபிறகு ஐடி துறையில் நிறைய மாற்றங்கள். அவற்றைத் தொட்டுச்செல்லும்வகையில் இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தை இன்னொரு பத்திரிகையில் எழுத உத்தேசித்திருக்கிறேன். முதல் பாகம் படித்தவர்கள் அதில் எதெல்லாம் விடுபட்டது என்று யோசனை சொன்னால் இந்தமுறை சரி செய்துவிடலாம். நீங்கள் இதில் இடம்பெறவேண்டும் என்று நினைக்கிற தலைப்புகள், யோசனைகளையும் இங்கே பின்னூட்டத்தில் சொல்லலாம். அட்வான்ஸ் நன்றிகள்!
ஒரு ‘த்ரில்’லுக்காக ’வ-மெ-இ’ முதல் பாகத்தில் இடம்பெற்ற அத்தியாயத் தலைப்புகள்மட்டும் இங்கே – எந்த அத்தியாயத்தில் என்ன மேட்டராக இருக்கும் என்று ஊகித்துப் பாருங்கள் 😉
01. கண்ணாடிக் கூண்டு
02. கோடி ரூபாய்க் கேள்வி
03. ‘மேனியாக்’தனம்
04. ரகசியம், பரம ரகசியம்
05. சின்னச் சின்னப் படிக்கட்டுகள்
06. வன்பொருள், மென்பொருள்
07. திறமைக்கு(மட்டுமே) மரியாதை
08. ஜாலியாக ஒரு பரீட்சை
09. பெஞ்ச் வாசம்
10. நிரந்தர கிராக்கி?
11. டிஜிட்டல் ஊழல்
12. உற்சாகக் கவசம்
13. வெல்லுவதே இளமை
14. ஈ-குப்பைகள்
15. கணினிக் கல்வி
16. பூங்கா நகரம்
17. சில சில்மிஷங்கள்
18. சமூகப் பொறுப்பு
19. கண்ணாடிக் கூரை
20. காகிதக் கத்தி
21. திருடாதே, ப்ராஜெக்ட் திருடாதே
22. ஆளுக்கொரு கம்ப்யூட்டர்
23. மூக்கை நுழைக்காதே
24. எல்லாம் எல்லோருக்கும்
25. பதினைந்து பைசா சம்பளம்
26. நவீன ஏமாற்றுகள்
27. மூர்த்தி பெரிது
28. ஆதலினால், காதல் செய்வீர்
***
என். சொக்கன்
29 10 2010
’வல்லினம், மெல்லினம், இடையினம்’ புத்தகம்பற்றிய மேலதிக விவரங்களுக்கு –> https://www.nhm.in/shop/978-81-8368-179-7.html
6 Responses to "வல்லினம், மெல்லினம், இடையினம்"

வ.ம.இ: ரசித்துப் படித்தது (அப்போது) – இப்போ மறந்து விட்டது 🙂
இருந்தாலும் சில விஷயங்களை விரிவாக தொடலாம் – இதோ சில ஏரியாக்கள்
– மொழி கலப்பு திருமணங்கள் – அதனால் ஏற்படும் அடுத்த ஜெனரேஷன் வாழ்க்கை முறை மாற்றம் – இதனால் குழந்தைகள் தந்தை/தாய் எந்த மொழியிலும் ஒட்டுதல் இல்லாமை
– குழந்தைகள் + அலுவலக வேலைப்பளு இரண்டையும் ஏற்று விழிபிதுங்கும் 30+ பெண்கள்
– அதிக சம்பளங்கள் பெற ஆரம்பித்துவிட்ட மிடில்கிளாஸ் பெண்களின் பெற்றோர் சிலர், அதில் குளிர்காய்வதால், தாமதமாகும் பெண்களின் திருமணங்கள் – 30வயதைத் தொடும், தாண்டிய முதிர் கன்னிகளின் அதிகரிப்பு
– ஈமெயிலும், இண்டர்நெட்டும் இல்லாவிட்டால் வாழ்வே சூனியமாய்ப் போய்விட்ட மனப்பாங்கு
– – கல்லூரிமுடித்துவிட்டு ஐடி கம்பெனிகளில் எப்படியோ சேர்ந்துவிட்டாலும், திறமைகளை மென்மேலும் வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டாமை
– கம்பெனிக்கோ, க்ளையண்டுக்கோ உண்மையாக, நேர்மையாக உழைப்பதில் சுணக்கம் காட்டுவது, ‘பரவாயில்லை’ ‘சல்தா ஹை’ முறையில் செய்யும் வேலைகளை முழுமையில்லாமல் செய்வது
– திறமை வளர்த்து, வேலையை நன்கு முடித்து பெயர் (+ சம்பளம்) வாங்குவதை விட, அதிக சம்பளம், வெளிநாட்டு உலா, இணையத்தில் உலா என்பதே வாழ்க்கை என இருப்பது
நன்றி
– அலெக்ஸ் பாண்டியன்


அடடே! திரும்ப இங்க எழுத ஆரம்பிச்சாச்சா! சூப்பர்!
வல்லினம், மெல்லினம், இடையினம் படிச்ச ஞாபகம் இருக்கு..அதை எழுதியது நீங்கதான்னு இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன்..
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me


it would have sound just right if a note about “shameless plug” was written at the beginnig of the article.


[…] பாகத்தை எழுதவிருப்பதாக ஏற்கெனவே இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ’மென்னுலகம்’ […]

1 | Tweets that mention வல்லினம், மெல்லினம், இடையினம் « மனம் போன போக்கில் -- Topsy.com
October 29, 2010 at 12:57 pm
[…] This post was mentioned on Twitter by nchokkan, சங்கமம். சங்கமம் said: வல்லினம், மெல்லினம், இடையினம்: நம்முடைய ஊடகங்களில் ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறைபற்றி இரண்டுவிதமான பிம்பங்… http://bit.ly/aewDMo […]