சென்னை புத்தகக் கண்காட்சி 2011 – புது வெளியீடுகள்
Posted December 27, 2010
on:- In: Book Fair 2011 | Books | Chennai | Uncategorized
- 5 Comments
பல்வேறு பதிப்பகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சி 2011ல் வெளியிடவிருக்கும் புதுப் புத்தகங்களைப்பற்றிய தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவை ஒரே இடத்தில் தேடும் வசதியோடு இல்லை என்பது ஒரு பெரிய குறை.
நான் புத்தகக் கண்காட்சிக்குக் கிளம்பும்போதே இந்த வருடம் வாங்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலை அச்சிட்டு எடுத்துக்கொண்டு செல்வதுதான் வழக்கம். அப்போதுதான் நேரம் வீணாகாமல் இருக்கும் – முக்கியமான எந்தப் புத்தகத்தையும் தவறவிட்டுவிடமாட்டோம் – பட்டியலின்படி வாங்கவேண்டியதை வாங்கியபிறகு கண்ணில் படுபவை, கவனம் ஈர்ப்பவை என்று இன்னும் பலவற்றை அள்ளுவது தனிக்கதை 🙂
என்னைப்போல புத்தகக் கண்காட்சிக்கு விருப்பப் பட்டியலோடு செல்ல விரும்புகிறவர்கள் பலர் இருக்கலாம். அவர்களுக்கு ஒரு தக்கனூண்டு டேட்டாபேஸ் எழுதி யாராவது உதவினால் புண்ணியமாகப் போகும்.
இப்போதைக்கு, சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகும் புதுப் புத்தகங்களைப்பற்றி எனக்கு அவ்வப்போது கிடைக்கும் விவரங்களை இந்த கூகுள் ஸ்ப்ரெட்ஷீட்டில் சேர்க்கப்போகிறேன். இது முழுமையான பட்டியல் அல்ல. நான் எதையாவது தவறவிட்டிருந்தால் (அல்லது தவறான விவரத்தைச் சேர்த்திருந்தால்) nchokkan@gmail.com என்ற முகவரிக்கு எழுதிச் சொல்லவும். நன்றி.
***
என். சொக்கன் …
27 12 2010
5 Responses to "சென்னை புத்தகக் கண்காட்சி 2011 – புது வெளியீடுகள்"

என்னைப்போல் பலரும் நினைக்கிறார்கள்.உங்களைப்போல ஒருசிலர்தான் செயல்படுத்துகின்றார்கள்.ஸ்ப்ரெட்ஷீட்க்கு நன்றி.


நல்ல முயற்சி சொக்கன்… பகிர்விற்கு நன்றி….

1 | natbas
December 28, 2010 at 4:40 am
பயனுள்ள பதிவு. நன்றி.
பரிந்துரைகள்?