மனம் போன போக்கில்

காலி நோட்டுகள் (அல்லது) காலிப் பள்ளிகள்

Posted on: March 26, 2011

ட்விட்டரில் எழுதியது, சில மாற்றங்களுடன் இங்கே சேமித்துவைக்கிறேன்:

நங்கைக்குப் பள்ளி முடிந்தது. அத்தனை நோட்டுகளிலும் அவள் மீதம் வைத்திருக்கும் காலிப் பக்கங்களைப் பார்த்தால் கண்ணில் ரத்தம் வருகிறது.

அநேகமாக எல்லா நோட்டுகளிலும் 20 பக்கங்களே எழுதப்பட்டுள்ளன. மீதம் காலி. ஆனால் அடுத்த வருடம் கட்டாயம் புது நோட்டுகள் வாங்கணும். ரஃப் நோட்கள் உள்பட.

அதுவும் வெளியே வாங்கக்கூடாது – அவர்கள் தரும் நோட்டுகளைதான் வாங்கவேண்டும் – அவர்கள் சொல்லும் அதே விலையில்.

யூனிஃபார்ம் கிழியாமல் அளவு மாறாமல் நன்றாகவே இருந்தாலும், புதுசு வாங்கியாகவேண்டும். No Choice.

நான் பள்ளியில் படித்தபோது ஒரே நோட்டை மூன்றாகப் பிரித்து மூன்று பாடங்களுக்குப் பயன்படுத்துவோம். ஒரு பக்கம் வீணாகியது இல்லை.

விளம்பர நோட்டீஸ்கள், காலண்டர் தாள் பின்பக்கங்கள்தான் ரஃப் நோட் ஆகும். வருடம் ஒரு புது யூனிஃபார்மெல்லாம் கிடையாது.

செலவழிப்பதுபற்றிப் பிரச்னையில்லை. அது நியாயமாக இருக்கவேண்டும்.

ஒவ்வொரு பெற்றோரிடமும் வருடம் இத்தனை ரூபாய் பிடுங்கியே தீரவேண்டும் எனப் பள்ளிகள் திட்டம் போட்டுச் செயல்படுவதாகத் தோன்றுகிறது.

பேசாமல் அடுத்த மகளை அரசுப் பள்ளியில் சேர்த்துப் பரிசோதனை எலியாக்கலாமா என்று (சீரியஸாக) யோசிக்கிறேன்.

பாழாய்ப்போன பயம் தடுக்கிறது. ஒருவேளை செலவு செய்தால்தான் படிப்பு வருமோ? அபத்தமான சிந்தனை,ஆனால் பயம் உண்மை. நீரோட்டத்தோடு போகிறேன்.

***

என். சொக்கன் …

26 03 2011

9 Responses to "காலி நோட்டுகள் (அல்லது) காலிப் பள்ளிகள்"

The trend is changing now, if you feel it is not changing, then let us change the trend :). Technology is helping a lot, so it is not necessary that you have to go to school to get education.
I feel school will not be the only education medium for the next generation, you have to provide additional education
say if she is interested in music concentrate on that not on the main stream education
so after 10 years she will be focusing on her passion instead of following the crowd.
I would be doing this to my kids in future 🙂
Find their interest or passion early and help them to achieve that not to follow the main stream education simple example AR Rahman. So they will became masters in their field of interest.
Then they will find opportunity to excel, if they cant find they will be skilled enough to create new opportunity.
My view is “Either take chances or follow the crowd, choice is with us”
-Dhanasekar S

PS : Sorry for reply in English, I am very slow in Tamil typing 🙂

அருமையான பதிவு திரு சொக்கன்.
நாம் ஏதாவது முயற்சி செய்தால் நமது பிள்ளைகளை பழி வாங்குவார்கள்.
நான் அனுபவப்பட்டிருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

//பேசாமல் அடுத்த மகளை அரசுப் பள்ளியில் சேர்த்துப் பரிசோதனை எலியாக்கலாமா என்று (சீரியஸாக) யோசிக்கிறேன்.??

+1.

ஆனால், அரசுப் பள்ளியில் சேர்ப்பதோடு நமது கடமை முடிந்து விடக்கூடாது. ஒரு பெற்றோராக இயன்ற விதத்தில் எல்லாம் அந்தப் பள்ளியின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குப் பங்களிப்பதன் மூலமே அதன் தரத்தை உறுதிப்படுத்த முடியும். ஊர்ப்புறங்களில் உள்ள மக்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க முயற்சிகளால் பல சிறப்பான பள்ளிகள் இயங்குவது உண்டு.

கம்யூனிட்டி மனது வைத்தால் படித்தவர்கள் துணையுடன் அந்தந்த பகுதி அரசு பள்ளிகளில் செயலூக்கமிக்க பெற்றோர் – ஆசிரியர் கழகம் உருவாக்கி தனியாருடன் போட்டி போட வைக்க இயலும். ஆனால் ஒரு முன்மாதிரி நிகழும் வரை எல்லோரும் அஞ்சவே செய்வார்கள்.

hi,
If you admit your second child in govt school. it will definitely create psychological problem between your children. If you are damn sure in that, then admit both of them. on the other hand , the elder one must accept the new environment, which is highly different from the previous school.

ரொம்பச் சரி!

நான் +12விற்கு செலுத்தியது ஒரு வருடத்திற்கு ரூ.600

இயந்திரவியல் படிப்புமுழுவதுமே ரூ. 50,000தை தாண்டவில்லை. இங்கு LKGயில் சேர்க்க சுமார் 75,000 ஒருவர் கொடுத்ததாகச் சொன்னார்.

இது, இன்னும் வேறு சில காரணங்களை யோசித்தால், ஒரு விரிவுரையாளர் வேலை வாங்கிக் கொண்டு நெல்லைக்கே போய்விடலாம் என்று தோன்றுகிறது. திங்கிங்!

உலகின் தலைசிறந்த ஆட்சி முறையாம் “ஜனநாயகம்”, அதன் மாபெரும் குடையின் கீழ் மகோன்னத வாழ்வு வாழும் நாம இது போல ஜனநாயகப் புலம்பல் மட்டும்தான் பண்ண முடியும்.

உங்க வாசகர்கள்’ல தனியார் பள்ளி ஆசிரியர்கள் யாரும் இல்லையா? யாருக்கும் பதில் தர ஆவல் இருக்கா?

தனசேகர், Rathnavel Natarajan, இரவி, SRK, balaji, நடராஜன் வெங்கடசுப்பிரமணியன், கிரி ராமசுப்ரமணியன்,

நன்றி 🙂

//it is not necessary that you have to go to school to get education//

True. But the acceptance for such a system is yet to come. We need to make it happen instead of waiting

//நாம் ஏதாவது முயற்சி செய்தால் நமது பிள்ளைகளை பழி வாங்குவார்கள்//

ஆமாம். நானும் அனுபவப்பட்டிருக்கிறேன் – இந்தப் பதிவில் சொல்ல மறந்த விஷயம் அது!

//ஆனால், அரசுப் பள்ளியில் சேர்ப்பதோடு நமது கடமை முடிந்து விடக்கூடாது. ஒரு பெற்றோராக இயன்ற விதத்தில் எல்லாம் அந்தப் பள்ளியின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குப் பங்களிப்பதன் மூலமே அதன் தரத்தை உறுதிப்படுத்த முடியும்//

கண்டிப்பாக. அதற்குப் பயந்துதான் பலர் தனியார் பள்ளியில் சேர்த்துவிடுகிறோமோ? (just pay fees one time and forget it, no need to get involved!)

//ஒரு முன்மாதிரி நிகழும் வரை எல்லோரும் அஞ்சவே செய்வார்கள்//

உண்மை. அப்படி முன்மாதிரி நிகழ்ந்தாலும் (இந்தியாவில்) அதை ஒடுக்கவே பார்ப்பார்கள். சிவாஜி படக்கதை மாதிரிதான் 🙂

//If you admit your second child in govt school. it will definitely create psychological problem between your children//

Yes. அதனால்தான் ‘நீரோட்டத்தோடு போகிறேன்’ என்று முடித்தேன். I don’t think I can make that decision today!

//நான் +12விற்கு செலுத்தியது ஒரு வருடத்திற்கு ரூ.600
இயந்திரவியல் படிப்புமுழுவதுமே ரூ. 50,000தை தாண்டவில்லை. இங்கு LKGயில் சேர்க்க சுமார் 75,000 ஒருவர் கொடுத்ததாகச் சொன்னார்.//

அத்தனை கணக்கும் எனக்கும் பொருந்துகிறது 🙂

– என். சொக்கன்,
பெங்களூரு.

அநேகமாக இது எல்லாமே நானும் அனுபவிப்பது.

ஸ்கூலில் கொடுத்த நோட்டுகளில் பக்கங்கள் இன்னும் மீதியிருக்க, மேலும் வேறு சில பாடங்களுக்காக வெளிக்கடைகளில் மேலும் நோட்டுகள் வாங்க நேரிடுவது..

ஸ்கூலில் கொடுக்கப்படும் நோட்டுகள், புத்தகங்களின் மதிப்பு அதற்காக நாம் செலுத்தும் தொகைக்கு பாதிகூட இல்லாதது…

நிறைய சொல்லலாம்.

கல்வி என்பது பிஸினஸ் ஆகி வெகு காலம் ஆகிவிட்டது. ப்ரீகேஜிக்கு அறுபதினாயிரம் கேட்கிறார்கள். பெற்றோர்களும் கொடுக்கிறார்கள். பிறகு புலம்புகிறார்கள்.

///My view is “Either take chances or follow the crowd, choice is with us”
-Dhanasekar S//

சரியாகத்தான் சொல்கிறார். ஆனால் போட்டிகள் நிறைந்த உலகில் “take chances” என்பது சரியாக வருமா? விவாதத்திற்கு உரிய விஷயம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,745 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2011
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
%d bloggers like this: