மனம் போன போக்கில்

RTE வேண்டுமா?

Posted on: April 27, 2011

RTE எதிர்ப்புச் செய்தி பற்றி என்னுடைய நேரடி அனுபவம் ஒன்று.

சில தினங்களுக்கு முன் என் மகள் நங்கையின் 2ம் வகுப்புப் புத்தகங்கள் வாங்குவதற்காக அவளுடைய பள்ளிக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த அம்மையார் ‘RTE பற்றித் தெரியுமா?’ என்றார்.

‘தெரியாது, சொல்லுங்கள்’ என்றேன். படபடவென்று ஏதோ விளக்கினார்.

எனக்கு அவர் பேசியதில் பாதிக்குமேல் புரியவில்லை poor students, lack of confidence, quality of education என்று ஏதேதோ.

கடைசியாக ‘RTEக்கு எதிராக வாதாடுவதற்காக, இந்தியாவில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் சேர்ந்து டெல்லியில் ஒரு வழக்கறிஞரை நியமித்திருக்கிறோம்’ என்றார். ’இதற்காக நீங்கள் பைசா தரவேண்டாம். ஆனால் RTE வந்தால் எங்கள் குழந்தைகளுக்குக் கெடுதல் என்று அரசாங்கத்திடம் சொல்லவேண்டும்’ என்றார்.

அப்போதும் எனக்கு விளங்கவில்லை. ’ஏதாவது அச்சு வடிவில் இருந்தால் கொடுங்கள், படித்துப் புரிந்துகொள்கிறேன்’ என்றேன்.

அவர் கொஞ்சம் தயங்கிவிட்டு ஒரு சீட்டைக் கொடுத்தார். அது ஏதோ வக்கீல் நோட்டீஸ்மாதிரி இருந்தது. தலைகீழாக நின்று படித்தாலும் புரியப்போவதில்லை.

’மன்னிக்கவும். எனக்குச் சரிவரப் புரியாத விஷயத்துக்கு ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிப்பது நியாயமில்லை’ என்று கையெழுத்திட மறுத்துவிட்டேன்.

அவர் முகத்தில் லேசான கோபம். ‘உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தின்மீது உங்களுக்கு அக்கறை இல்லைபோல’ என்று நேரடியாகவே சொன்னார். நான் கடுப்பாகிக் கிளம்பிவிட்டேன்.

வாசலில் ஒரு parent அதே வக்கீல் நோட்டீஸை வைத்துக்கொண்டு நின்றிருந்தார். ‘இது என்ன?’ என்றார் என்னிடம்.

’எனக்குத் தெரியவில்லை’ என்றேன்.

‘சரி பரவாயில்லை, எங்கே கையெழுத்துப் போடணும்ன்னாவது சொல்லுங்க’ என்றார். பதில் சொல்லாமல் திரும்பினேன்.

அதன்பிறகு RTEபற்றி யோசிக்கவே இல்லை. பல நாள் கழித்து நேற்று இந்தச் செய்தி படித்தபின் விஷயம் புரிகிறது –> http://goo.gl/hGbO2

அன்று கையெழுத்துப் போடாததற்காகச் சந்தோஷப்படுகிறேன். நங்கை எல்லாவகை மாணவர்களுடனும் கலந்து பழகிப் படிப்பதையே விரும்புகிறேன்.

தனியார் பள்ளிகள் RTEக்கு எதிராகப் பேசுவது business sense. அதன்மூலம் அவர்களுடைய நிஜமுகம் வெளிப்படுவது சந்தோஷம்.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் RTEக்கு எதிராக விவரம் புரியாமல் கையெழுத்திட்டால், அதுபற்றிக் கொஞ்சம் படித்துவிட்டு முடிவுசெய்ய சொல்லுங்கள். அதன்பிறகு கையெழுத்திடுவது அவர்கள் விருப்பம் – ஆனால் பள்ளிகளின் மிரட்டலுக்குப் பயந்துவிடவேண்டாம், RTE நிஜமாகவே அவசியமா, இல்லையா என்று நாமே யோசித்துத் தீர்மானிக்காமல் கையெழுத்திடுவதும், வெற்றுப் பத்திரத்தில் கைநாட்டு வைப்பதும் ஒன்றுதான்.

***

என். சொக்கன் …

27 04 2011

8 Responses to "RTE வேண்டுமா?"

அனுபவம் & செய்தி பற்றி தெரியவருகையில் கருத்து சொல்ல எதுவும் தோன்றவில்லை.

ஆனால் அரசு ஆரம்பபள்ளியில் நான் படித்த காலத்தில் பள்ளிக்கூடத்தின் சுற்றுவட்டாரம் முழுவதும், எந்தவித பாகுபாடும் பாராது,பள்ளியின் தொடர்பால் அங்கு படித்த மாணவர்/மாணவியரின் குடும்பத்தோடு உறவாய் பழகிய என் வகுப்பு ஆசிரியர்கள் நினைவுக்கு வந்தனர் !

தனியார் நிறுவனம் கொள்ளை அடிக்க பகடைக்காயாக நாம் ஏன் இருக்க வேண்டும்

//Admitting poor students may bring down discipline and the quality of education and also demoralize teachers// (from the link)

— அடப்பாவிங்களா…

நீங்களும் இடம் குடுக்க மாட்டீங்க.. அரசாங்கம் பாத்து குடுக்க சொன்னாலும் விடமாட்றீங்களே….

தனியார் பள்ளிகள் செய்யும் அராஜகங்கள் நாம் அறிந்ததே. ஆனாலும் இவ்விசயத்தில் அவர்கள் சொல்லும் காரணங்கள்தான் தவறே ஒழிய இதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

பள்ளிகளை ஏற்படுத்தி தரமான கல்வியை உறுதி செய்யவேண்டிய அரசாங்காம் தன் கடமையிலிருந்து விலகி தனியார் பள்ளிகளை மிரட்டுவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை.

ஏழைக்குழந்தைகளின் மீது தனியார் பள்ளிகள் கரிசனம் காட்டினால் நல்லதுதான். ஆனால் அதை எப்படி திணிக்க முடியும்? இது போல் ஒவ்வொரு தனிமனிதன் மீதும் அரசாங்கம் திணித்தால் ஏற்பீர்களா? மாதம் 25000 க்கு மேல் சம்பளம் வாங்கும் ஒவ்வொருவரும் ஒரு ஏழை மாணவனின் கல்விச்செலவை ஏற்க வேண்டும் என்றால்?

>> ஆனால் பள்ளிகளின் மிரட்டலுக்குப் பயந்துவிடவேண்டாம் << உண்மை. இந்த விஷயத்தில் பள்ளிகள் சுயநலத்துடன் (எப்பதான் அப்படி இல்லையாம்) 'குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலம்' என்ற துருப்புசீட்டை வைத்து பெற்றோர்களை பகடை காய்களாக ஆக்குகின்றன.

RTE அமல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் அரசு / பள்ளிகள் தரப்பில் இருக்கலாம். ஆனால் அதற்காக அதன் நோக்கத்தை கொச்சைபடுத்துவது தவறான முன்னுதாரணம்.

இதே போல் இந்திய மருத்துவதுறையிலும் சில மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

This is a silly act. Instead of forcing private schools, the govt must increase quantity and quality of public schools.

PS:I know, i must have said this during the legislation was passed for this act.

Sorry for replying in English. I second Chanakkyan and venkat in this. The government run schools have had several decades to improve the quality of education. The government, with the exception of Kamaraj and MGR has primarily ignored education. After enormous investment and processes incorporated by the private sector, it is completely unacceptable that the government now wants the private sector to do what it should have done in the past decades. RTE is noble in intentions only. Not in the way it is purported to be implemented. Once again the government is trying to shirk its duties and impose it on the private sector.

Though I’m not in agreement with the other reasons, I completely agree with the schools’ view that “it would be under constant legal threat and harassment from government”. And this will in turn only bring more moolah into the pockets of the regulating agencies by taking in bribes. Let the government invest money into government schools and implement RTE. Do NOT force your job on others.

Thanks for your detailed comments 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,479 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2011
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
%d bloggers like this: