டாட்’டூ’
Posted June 10, 2011
on:- In: Creativity | Kids | Learning | Travel | Uncategorized
- 17 Comments
ஊர் சுற்றித் திரும்பினோம். வழியில் ஒரு பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்கினோம்.
எனக்கு இரண்டு மகள்கள்: நங்கை மற்றும் மங்கை. இருவருக்கும் பிடித்த சாப்பாட்டுப் பண்டம், அடுத்தவர் கையில் இருப்பது. பிடித்த உடை, அடுத்தவர் அணிந்திருப்பது. ஆகவே எதை வாங்கினாலும் அச்சு அசல் ஒரேமாதிரியாக இரண்டு வாங்கிவிடுவேன். மனிதனால் சாத்தியமாகக்கூடிய அதிகபட்ச டெசிபல் * 2 சத்தத்தில் சண்டை ஒன்றைக் கேட்பதைவிட, கொஞ்சம் கூடுதலாகச் செலவழித்துவிடுவது உத்தமம்.
ஆக, இந்தக் கடையில் நான் ரெண்டு பாக்கெட் சிப்ஸ் வாங்கி ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தேன். ரெண்டும் ஒரே கலர், ஒரே எடை, ஒரே சுவை, பாக்கெட் ஓரத்தில் பிசிறு தட்டியிருந்ததுகூட ஒரேமாதிரி இருந்தது. எந்தவிதத்திலும் அவர்கள் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது. நிம்மதி!
நங்கை தனக்குக் கிடைத்த சிப்ஸ் பாக்கெட்டை உடனே பிரித்துச் சாப்பிட ஆரம்பித்துவிட்டாள். மங்கை அதைக் கையில் வைத்து அழகு பார்த்துக்கொண்டிருந்தாள்.
திடீரென்று, நங்கை கையில் ஏதோ சிக்கியது. ‘2’ என்ற எண்ணுக்குக் கண், காது, மூக்கு, கை, கால் வரைந்த ஒரு டாட்டூ.
அதைப் பார்த்ததும் நங்கை குஷியாகிவிட்டாள். ‘நான் ரெண்டாங்கிளாஸ் படிக்கறதால எனக்கு ‘2’ வந்திருக்கு’ என்றாள்.
‘நோ சான்ஸ்’ என்றேன் நான். ‘இது ஏதோ ரேண்டமா வர்றது.’
‘இல்லவே இல்லை. இதெல்லாம் லக்கி(?) டாட்டூ, நாம என்ன க்ளாஸ் படிக்கறோம்-ன்னு தெரிஞ்சுகிட்டுக் கரெக்டா வருமாம், என் ஃப்ரெண்ட் அனன்யா சொல்லியிருக்கா.’
எனக்குச் சிரிப்புதான் வந்தது. கூடவே, ’அவள் நினைப்பது தவறு, நான் சொன்னதுதான் கரெக்ட்’ என்று நிரூபிக்கிற ஈகோவும். மங்கை கையில் பிரிக்கப்படாமல் இருந்த சிப்ஸ் பாக்கெட்டைப் பார்த்தேன். ஒரு நல்ல ஐடியா கிடைத்தது.
‘ஒருவேளை நீ சொல்றது உண்மை-ன்னா, இப்ப மங்கையோட பாக்கெட்ல என்ன டாட்டூ இருக்கும்?’ என்று கேட்டேன்.
நங்கை சில விநாடிகள் யோசித்துவிட்டு. ‘எல்.கே.ஜி. டாட்டூ’ என்றாள்.
அந்த விநாடியில், என் ‘வெற்றி’ உறுதியாகிவிட்டது. ரெண்டாம் நம்பரைக் கார்ட்டூன் ஆக்கலாம், எல்.கே.ஜி.யை ஆக்கமுடியாதே!
பரபரவென்று மங்கை கையில் இருந்த பாக்கெட்டை வாங்கிப் பிரித்தேன். சிப்ஸ்களை ஒதுக்கிவிட்டு டாட்டூவைத் தேடினேன்.
வெற்றி! வெற்றி!! அந்த டாட்டூவில் ‘எல்.கே.ஜி.’ இல்லை. நங்கைக்குக் கிடைத்த அதே ‘2’, அதே கண், காது, மூக்கு, கை, கால்… ‘நீ சொல்றபடி பார்த்தா மங்கையும் ரெண்டாங்கிளாஸ் படிக்கறாளா என்ன? This is not lucky tattoo, pure random choice’ என்றேன்.
நங்கை சில விநாடிகள் யோசித்தாள். ‘இதுவும் லக்கி டாட்டூதான்’ என்றாள் உறுதியான குரலில்.
‘எப்படி?’
‘எனக்கப்புறம் இவ ரெண்டாவது பொண்ணுதானே? அதான் கரெக்டா 2 வந்திருக்கு.’
நீதி: பெண்களோடு பேசி ஜெயிக்கமுடியாது.
***
என். சொக்கன் …
10 06 2011
17 Responses to "டாட்’டூ’"

//நீதி: பெண்களோடு பேசி ஜெயிக்கமுடியாது.//
பெண்களோடா இல்லை குழந்தைகளோடா?
இந்த கால குழந்தைகள் மிகவும் சுட்டீ!


சுவாரசியமான பகிர்வு. பெண்களை சமாளிப்பதை விட குழந்தைகளை சமாளிப்பது இன்னமும் கஷ்டம்… எப்போதும் குழந்தைகள் தானே ஜெயிக்கிறார்கள்…


ஆமாம் அவள் சொல்வதும் சரிதானே!


//பெண்களை சமாளிப்பதை விட குழந்தைகளை சமாளிப்பது இன்னமும் கஷ்டம்//
அதுவே பெண் குழந்தைகளை சமாளிப்பது இன்னமும் இன்னமும் கஷ்டம்


நபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநபநப.


oNCE i TOLD MY SON WHEN HE WAS 4 YEARS OLD THAT THERE IS BELIEF THAT SON OF AN INTELLIGENT WOULD BE A ‘MAKKU’ THEN HE IMMEDIATELY ASKED ME WHETHER I AM OR MY FATHER WHO IS INTELLIGENT; AND MADE ME NOT GIVE ANY ANSWER TO HIM
SUPPAMANI


chanceless!


Beautiful. smartest of the lot are the children.


சிப்ஸ் மேட்டரை ஸ்வீட்டா எழுதிட்டீங்க :))


Very nice post. Brought a nice smile to my face. Such simple joys of parent hood makes it all worthwhile!
amas32


LOL 🙂 Your daughter is very smart


நல்ல பதிவு.
இப்போது குழந்தைகள் நன்கு யோசிக்கிறார்கள். நன்கு பேசுகிறார்கள்.
வாழ்த்துக்கள்.

1 | priyakathiravan
June 10, 2011 at 11:45 am
Brilliant.