மனம் போன போக்கில்

சேர்த்தலும் பிரித்தலும்

Posted on: September 8, 2011

மதியம் சாப்பிடச் செல்லும்போது வழக்கமான ராஜா கலெக்ஷனைக் காதில் ஓடவிட்டிருந்தேன். அதில் ஒரு பாட்டு, தர்மதுரை படத்திலிருந்து ‘சந்தைக்கு வந்த கிளி’.

இதுவரை இந்தப் பாடலைக் குறைந்தபட்சம் நூறு முறையாவது கேட்டிருப்பேன். ஆனால் இந்தமுறை அனுபல்லவியில் வரும் ‘குத்தாலத்து மானே, கொத்துப் பூ வாடிடும் தேனே’ என்ற வரி கொஞ்சம் உறுத்தியது.

அதென்ன ‘பூ வாடிடும் தேனே’? பூ வாடினால் அதில் ஏது தேன்?

அநேகமாக அந்த வரி ‘பூ ஆடிடும் தேனே’ என்றுதான் இருந்திருக்கவேண்டும். பூவில் ஊறுகிற தேன் என்ற பொருளில். புணர்ச்சி விதிப்படி அது ‘பூவாடிடும் தேனே’ என்ற மாறியிருக்கும், ட்யூனிலும் அழகாக உட்கார்ந்திருக்கும். அதனால் அர்த்தம் கொஞ்சம் மாறுவதைப் பாடியவரோ அவருக்கு உதவியவரோ கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்.

இதேமாதிரி இன்னோர் உதாரணம், ’ராஜகுமாரன்’ படத்தில் வருகிற ‘என்னவென்று சொல்வதம்மா’ என்ற பாடலில் உண்டு. அந்த வரி:

அந்தி மஞ்சள் நிறத்தவளை,

என் நெஞ்சில் நிலைத்தவளை

’மாலை நேர வானத்தின் மஞ்சள் நிறம் கொண்டவள், என் மனத்தில் நிலைத்தவள்’ என்கிற நல்ல அர்த்தத்தில் எழுதப்பட்ட இந்த வரிகள் மெட்டில் உட்காரும்போது ‘நிறத் தவளை’, ‘நிலைத் தவளை’ என்று ஒரு சின்ன pause உடன் விழுந்திருக்கும். பாடகரும் அப்படியே அட்சரசுத்தமாகப் பாடிவைத்திருப்பார். இதனால் சம்பந்தப்பட்ட கதாநாயகி மஞ்சள் கலர் தவளை, நெஞ்சில் உட்கார்ந்திருக்கும் தவளை என்று ஒரு விபரீத அர்த்தம் வந்துவிடுகிறது.

’இதையெல்லாம் யாரு உன்னை வேலை மெனக்கெட்டுக் கவனிக்கச் சொன்னாங்க?’ என்கிறீர்களா? அதானே!

***

என். சொக்கன் …

08 09 2011

24 Responses to "சேர்த்தலும் பிரித்தலும்"

”ஒருத்தி
யாருஇவ வெடிச்சு நிக்குற
பருத்தி தாவி வந்து சண்டையிடும் அந்த முகமா”

//வேலை மெனக்கெட்டுக் // ஹி.ஹி..

நல்லவேளை இருக்கிற டென்ஷன்’ல வரிக்கு வரி… அடிக்கு அடி … யோசித்து கேக்கிற பழக்கம் இல்லே…!! (ஆனா படிக்கிற பழக்கம் இருக்கே..!!)

எப்படி எல்லாம் யோசிகீறீங்க!

பம்மல் கே சம்மந்தம் படத்துல ஒரு வசனம் “பழமொழி சொன்னா அனுபவிக்கணும் ஆராய கூடாது”.அதுபோல
பாட்டு கேட்டா ரசிக்கணும்.ஆராய கூடாது.

Pinrengalae bosss…

Mano?

நீங்க சொன்ன பிறகு ‘சந்தைக்கு’ கேட்டேன். என் காதில் ’ஆடிடும்’ மட்டுமே விழுந்தது. ஆனால், அது தோன்றி விட்டால், அந்தப் பதம் மட்டுமே ஒலிப்பதை தடுக்கவியலாது? ஹிந்தி ரெஹ்மானை (குரு மாதிரி படங்களில்) கேட்டுவிட்டு, தமிழில் கேட்கும்போது கூட இந்தி வரிகள் மட்டுமே முணுமுணுக்கும்; அந்த மாதிரி இது?

நன்றி அற்புதம். மிக உன்னிப்பாக கவனித்து உள்ளீர்கள். எடுத்து கொடுத்தமைக்கு மீண்டும் நன்றி.

ஒரு பாடலா இரு பாடலா.:)
தவளை!!!!!

தவளையாவது பரவாயில்லை. டிஷ்யூம் படத்தில் “நெஞ்சான்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே” என்ற வரியில் “ஆய் பெண்ணே” என்று நீட்டி முழக்கியிருபார் பாடகர்.

தவளை, ஆய் பெண்ணே – இது ரெண்டையுமே கவனிச்சு சிரிச்சிருக்கேன்🙂

http://tamillyrics.hosuronline.com/ProductsD.asp?pID=5004&PCat=1131
Note the line (kadalakkaattukkulla… ).. ஒரு விபரீத அர்த்தம் வந்துவிடுகிறது. enna seiya?

:>

பாஸ், இதிலென்ன சேர்த்தல், பிரித்தல்? புரியலீங்களே🙂

:)))) அது இருக்கும்வரை எல்லாக் கொழப்பமும் வந்துடும் :>

🙂 பொழுது போகணும்ல? :>

🙂 ரசிப்பதும் உண்டு, ஆராய்வதும் உண்டு :>

:)))

வாடிடும்ன்னுதான் வருது. நீங்க ஆடிடும்ன்னு நினைச்சுக் கேட்கறீங்க, அல்லது மூளை ஃபில்டர் செஞ்சுடுது🙂

நன்றி கிருஷ்ணகுமார்

:))

ஐயே :-))))

🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 492 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 417,175 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

September 2011
M T W T F S S
« Aug   Oct »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
%d bloggers like this: