மனம் போன போக்கில்

உருகிய கிளி(கள்)

Posted on: September 17, 2011

இன்றைய Random பாடல், ’ஒரு கிளி உருகுது, உரிமையில் பழகுது, ஓ மைனா, மைனா.’ (படம்: ஆனந்தக் கும்மி, இசை: இளையராஜா, எழுதியவர்: வைரமுத்து)

இந்தப் படத்தை நான் பார்த்ததில்லை. யார் நடித்தது, என்ன கதை என்று எந்தத் தகவலும் தெரியாது. ஆனால் இந்தப் பாட்டின்மீது படுமோசமான மயக்கம் உண்டு. இதுவரை கிட்டத்தட்ட ஐநூறு தடவையாவது கேட்டிருப்பேன். ஒருமுறைகூட ‘ஒன்ஸ்மோர்’ கேட்காமல் அடுத்த பாடலுக்குச் சென்றது கிடையாது.

பாடலின் தொடக்கத்தில் வருகிற முன்னிசையிலேயே ராஜ வைத்தியம் ஆரம்பமாகிவிடுகிறது. கொஞ்சம்போல் ‘பாடும் பறவைகள்’ படத்தில் வரும் ‘கீரவாணி’ பாடலின் முன்னிசையை நினைவுபடுத்தும். அந்த ராகமாகக்கூட இருக்கலாம். கண்டுபிடிக்குமளவு எனக்கு ஞானமில்லை.

எஸ். ஜானகி, எஸ். பி. ஷைலஜா கொஞ்சம் வித்தியாசமான கூட்டணிதான். யார் இந்த இரண்டு பெண்கள்? பாடல் வரிகளை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் கிராமத்திலோ ஒரு மலைப் பிரதேசத்திலோ வளர்ந்த தோழிகள் என்று தோன்றுகிறது. ராஜா பயன்படுத்தியிருக்கும் தாளக் கட்டமைப்பும் இடையிசையும் இதை உறுதிசெய்வதுபோலவே இருக்கிறது.

ஆனால் ‘உரிமையில் பழகுது’ என்று அவர்கள் பாடுவது என்னமாதிரியான உரிமை? ‘இருமனம் இணையுது, இரு கிளி தழுவுது’ என்றெல்லாம் தோழிகள் பாடுவதுபோல் கேட்டதில்லையே? ஒருவேளை தோழி #1 ஒருவனைக் காதலிக்க அவர்களுடைய ரகசியத்தைத் தெரிந்துகொண்ட தோழி #2 அவளைக் கிண்டலடித்துப் பாடுகிறாளோ?

பல்லவி தாண்டிச் சரணம் வந்ததும் முதல் வரி, ‘நிலவெரியும் இரவுகளில் மணல்வெளியில் சடுகுடுதான்’. கற்பனை செய்துபார்க்கச் சுகமான காட்சி.

அடுத்து வரும் ‘கிளிஞ்சல்களே உலை அரிசி’ என்பதும் அழகான வரிதான். ஆனால் எனக்கு அதன் அர்த்தம் சரிவரப் புரிந்ததில்லை. சின்னப் பிள்ளைகள் சொப்பு (அல்லது கொஞ்சம் modernஆகச் சொல்வதென்றால் Kitchen Set) வைத்து விளையாடுவதுபோல் கிளிஞ்சல்களை வைத்துச் சமையல் விளையாட்டா? அப்போது அது ‘கிளிஞ்சல்களில் உலை அரிசி’ என்றல்லவா இருக்கவேண்டும்? ஒருவேளை கிளிஞ்சலையே உலை அரிசியாகச் சமைத்துச் சாப்பிடுவதா? அதன்மூலம் ‘வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாகளா’ ரேஞ்சுக்கு வெள்ளை நிறம் கிடைக்கும் என்பது உட்பொருளா? குறிஞ்சி மலை நிலத்தில் நெய்தல் கிளிஞ்சல் எப்படி வந்தது?

இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன்பாக வரும் இடையிசை மிகவும் அற்புதமானது. மிக எளிய வாத்தியங்களின்மூலம் ஒரு ஊர்கோலம்மாதிரியான காட்சியைக் கொண்டுவருவார் ராஜா. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், கார், பஸ் மாதிரியான தொடர்ச்சியான பயணமாக இல்லாமல், பல்லாக்குபோல், அல்லது ஊஞ்சல்போல் ஆடி அசைந்து செல்லும் ஊர்வலம் – ‘இலைகளிலும்… கிளைகளிலும்… ஓ மைனா… ஓ மைனா’ என்று தொடங்கும் சரணத்தின் ஒவ்வொரு வரியும்கூட இந்தப் பல்லாக்கு அசைவைப் பார்க்கமுடியும்.

முத்தாய்ப்பாக, ‘மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது’ என்ற வரிகள் இதனை மீண்டும் ஒரு ‘தோழிமார் கதை’யாகவே கொண்டுவந்து நிறுத்துகிறது. அதே பெயரில் அமைந்த வைரமுத்துவின் கவிதை ஒன்றையும் நினைவுபடுத்துகிறது. அதிலிருந்து பொருத்தமான சில வரிகள்மட்டும் இங்கே. மீதத்தைக் கீழே உள்ள வீடியோவில் கவிஞர் குரலிலேயே கேட்கலாம்:

ஆத்தோரம் பூத்த மரம், ஆனை அடங்கும் மரம்
கிளையெல்லாம் கூடு கட்டிக் கிளி அடையும் புங்க மரம்
புங்க மரத்தடியில், பூ விழுந்த மணல் வெளியில்,
பேன் பார்த்த சிறு வயசு, பெண்ணே நினைவிருக்கா?
*
ஒண்ணா வளர்ந்தோம், ஒரு தட்டில் சோறு தின்னோம்,
பிரியாதிருக்க ஒரு பெரிய வழி யோசிச்சோம்.
ஒரு புருஷங்கட்டி, ஒரு வீட்டில் குடி இருந்து
சக்களத்தியா வாழ சம்மதிச்சோம் நெனைவிருக்கா?

பின்குறிப்பு: இந்தப் பாடலை எத்தனையோ முறை கேட்டும்கூட, இதன் காட்சியமைப்பை வீடியோவாகப் பார்க்கவேண்டும் என்று இதுவரை தோன்றியதில்லை. பாடலைக் கேட்கும்போது, வரிகளை யோசிக்கும்போது கிடைக்கும் மனப் பிம்பம் அதனால் படுமோசமாகக் குலைந்துபோய்விடக்கூடும் என்பது என் அனுபவம். ஆகவே, ஒருவேளை உங்களிடம் இந்தப் பாடலின் யூட்யூப் வீடியோ இருந்தால், கொடுத்துவிடாதீர்கள்!

***

என். சொக்கன் …
17 09 2011

19 Responses to "உருகிய கிளி(கள்)"

தல எனக்கும் ரொம்ப பிடித்த பாடல்…;-) பின்குறிப்புக்கு ஒரு ரீப்பிட்டேய் 😉

சில பிடித்த பாடல்கள் இப்படியாக ஆராய்ந்து எழுத தோன்றியதில்லை , பிரமாதம்

அருமையான பதிவு.
நல்ல விளக்கங்களும், விமர்சனமும்.
வாழ்த்துக்கள்.

Listen this, only audio no Video
Awesome singing by Adithi & Sowmya

The lyric best part is- vayal veliyil pala kanavai vidhaikkirathe siru paravai

http://www.muziboo.com/adithi100/music/oru-kili-uruguthu-with-sowmyar/

பின்குறிப்பால தப்பிச்சுட்டீர் 🙂

– சென்ஷி

“கொஞ்சம்போல் ‘பாடும் பறவைகள்’ படத்தில் வரும் ‘கீரவாணி’ பாடலின் முன்னிசையை நினைவுபடுத்தும். அந்த ராகமாகக்கூட இருக்கலாம்.”

கீரவாணியேதான் சார்…
http://www.thiraipaadal.com/playlistirsongs.php?PLID=Keeravani%20&lang=en

Love the song! Like it better in Telugu though (don’t know why)

The Tamizh video here

Telugu

Phd வாங்கிடுவீங்க போல.

சூப்பர். நம்ம கட்சிக்கு இன்னொருவர் :))))

நன்றி ஈஸ்வர்

நன்றி ரத்னவேல்!

நன்றி ராம்ஜி!

:))) நாங்க வெவரம்ல? 😉

நன்றி!

நன்றி அனுஷா

தெலுகு வெர்ஷன் இப்போதான் முதன்முறை கேட்கிறேன். நன்றி 🙂

இதுக்கெல்லாமா பிஹெச்டி கொடுப்பாங்க? போங்க பாஸ் :)))

எனக்கும் மிக பிடித்த பாடல்.அந்த படத்தில் “ஓ வெண்ணிலாவே” என்ற பாடலும் நல்லா இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 521 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 451,272 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

September 2011
M T W T F S S
« Aug   Oct »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Advertisements
%d bloggers like this: