Archive for October 9th, 2011
சேலம் புத்தகக் கண்காட்சி
Posted October 9, 2011
on:நேற்று சேலம் புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன். பொன்னுசாமி கவுண்டர் கல்யாண மண்டபம், புதிய பேருந்து நிலையம் அருகே. சுமார் 50 ஸ்டால்கள், அநேகமாக எல்லாப் பதிப்பகங்களும் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல் 10% தள்ளுபடி, அப்பள ஸ்டால், ஒரு மினி அபூர்வ நாணயங்கள் கண்காட்சி, ஓரமாக 50% விலையில் ஒரிஜினல் விசிடி, டிவிடிகள்.
கண்காட்சியில் பலரையும் ஈர்த்த விஷயம், வருகிற குழந்தைகளுக்கு இலவச உண்டியல் தருகிறார்கள். அதில் வருடம் முழுக்கக் காசு சேர்த்து புத்தகங்கள் வாங்கிக்கொள்ளும் நல்ல பழக்கத்தை ஊக்குவிக்க இந்த ஏற்பாடு.
கண்காட்சி இன்றே கடைசி. சேலத்தில் உள்ளவர்கள் அவசியம் ஒரு விசிட் அடிக்கலாம். அனுமதி இலவசம்.
***
என். சொக்கன் …
09 10 2011