வரிசை
Posted October 19, 2011
on:- In: ஓசிப் பதிவு | நவீன அபத்தங்கள் | Chennai | Creativity | Photos | Uncategorized | Waiting
- 11 Comments
நண்பர் விக்கி (விக்னேஷ் அண்ணாமலை https://twitter.com/#!/VickyAnnap) ட்விட்டரில் ஒரு வித்தியாசமான படத்தைப் பிரசுரித்து ‘இது என்ன?’ என்று ஊகிக்கக் கேட்டிருந்தார்:
சிறிது நேரம் கழித்து அவரே விடையும் சொன்னார். சென்னை ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட படம் இது. மறுநாள் காலை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான க்யூவுக்காக முந்தின நாளே சிலர் தங்களுடைய பொருள்களை வரிசையாக அடுக்கி வைத்து முன்பதிவு செய்துள்ளனர். அதாவது, ரிஸர்வேஷன் க்யூவுக்கு ரிஸர்வேஷன்!
அந்தப் பொருள்களைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்: துணிக்கடை பை, பத்திரிகைகள், செய்தித்தாள்கள், போஸ்டர்கள், நோட்டீஸ்கள், அவை பறக்காமல் இருக்க மேலே ஒரு கல், காசித்துண்டு, ஷூ, செருப்பு, தண்ணீர் பாட்டில்… நம் மக்களுடைய க்ரியேட்டிவிட்டிக்கு அளவே இல்லை
இந்தப் படத்தைப் பிரசுரித்த விக்கியிடம் ‘இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஃபோட்டோ. உங்களுடைய Blogல் பதிவு செய்து வையுங்கள்’ என்றேன். ‘எனக்கேது ப்ளாக்?’ என்றார். அவர் அனுமதியுடன் இங்கே ஓசிப் பதிவாகப் பிரசுரிக்கிறேன் : >
***
என். சொக்கன் …
19 10 2011
11 Responses to "வரிசை"

காஞ்சில ரயில் ஷெட்டுக்குப் போகும்போது தண்டவாளத்திலிருந்து கல்லு புல்லு எடுத்து மறு நாளைக்கு இடம் போட்டுதான் போவாங்க.
இது தெரியாம, புல்ல தட்டிட்டு நான் உட்கார ஒரே ரகள சண்ட!!


திரு.சொக்கன், நம் நாடு முன்னேறிய நாடா, பின்தங்கிய நாடா என்று சந்தேகம். இதற்கெல்லாம் காரணம் ஜனத்தொகைப் பெருக்கம், அரசியல்வாதிகள் வளமான திட்டங்களைத் தராமல் இலவசத் திட்டங்களுக்கு அரசுப் பணத்தை செலவு செய்வது ஆகியவைகளும் ஆகும். அரசியலுக்கு வருபவர்கள் வசதியும், தகுந்த சுயதொழில் வருமானம் உடையவர்களாகவும் இருந்து தங்கள் வருமானத்திலிருந்து சேவை செய்பவர்களாக இருக்கவேண்டும். அரசியல் பதவிக்கு வரும்பொழுது காட்டிய கணக்கும், பதவி முடியும் போது உள்ள கணக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன், வ.க.கன்னியப்பன்


தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்
http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html


பஸ்ல ஜன்னல் வழியா குழந்தையத் தூக்கிப் போட்டு இடம் பிடிக்கிற புத்திசாலிங்க நம்மவங்க. கிரியேட்டிவிட்டிக்கு கேக்கணுமா…


சிரிப்பாகவும் இருக்கிறது,,சிந்திக்கவும் வைக்கிறநு


தூது தொடர் என்ன ஆச்சு?


ஹா ஹா ஹா . நிறைய இடங்களில் இதை பார்த்தது உண்டு.

1 | காஞ்சி ரகுராம்
October 19, 2011 at 11:39 am
//நம் மக்களுடைய க்ரியேட்டிவிட்டிக்கு அளவே இல்லை//
காஞ்சில ரயில் ஷெட்டுக்குப் போகும்போது தண்டவளத்திலிருந்து கல்லு புல்லு எடுத்து மறு நாளைக்கு இடம் போட்டுதான் போவாங்க.
இது தெரியாம, புல்ல தட்டிட்டு நான் உட்கார ஒரே ரகள சண்ட!!