மனம் போன போக்கில்

சிறியன சிந்தியாதான்

Posted on: May 28, 2012

ட்விட்டரில் இன்று காலை எதேச்சையாக வாலி பற்றிப் பேச்சு வந்தது.

வாலி என்றால், சினி கவிஞர் வாலி அல்ல, ராமாயணக் ‘கவி’ஞர் வாலி, அதாவது குரங்குகளின் அரசர், சுக்ரீவனின் அண்ணாத்தே, பத்து தலை ராவணனை வாலில் கட்டி உலகமெல்லாம் இழுத்துச் சென்ற கில்லாடி, ராமனின் அம்பால் தாக்கப்பட்டு, பின்னர் அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்துத் தாக்கோ தாக்கென்று தாக்கியவர்.

இந்த வாலியைப் பற்றிப் பேச ஆரம்பித்தவுடன், ’வாலி வதை படலம்’ குறித்து நண்பர் ‘டகால்டி’ (அவரது நிஜப் பெயர் எனக்குத் தெரியவில்லை) நிகழ்த்திய ஒரு சிறிய உரை கிடைத்தது. ஆவலுடன் கேட்கத் தொடங்கினேன்.

உண்மையில் இது மேடைப்பேச்சோ, ஆழமான தத்துவ விசாரணைகளுடன் கூடிய அலசலோ இல்லை. இயல்பான மொழியில் தான் வாசித்த ராமாயண நுணுக்கங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிற ஒரு முயற்சி. அநாவசிய அலங்காரங்கள், வார்த்தை விளையாட்டுகள் எவையும் இல்லாமல் நம் பக்கத்தில் உட்கார்ந்து பேசுவதுபோன்ற விளக்கம், கம்பனின் பாடல்களைச் சந்தத்துடன் வாசிக்கும் அழகு, அதில் உள்ள நுட்பமான தகவல்களை விவரிக்கும் ஆர்வம் என்று நிஜமாகவே கிறங்கடித்துவிட்டார் மனிதர். கேட்டு முடித்தவுடன், இப்படி மொத்த ராமாயணத்தையும் யாராவது விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று ஏங்கதான் முடிந்தது.

இதற்குமுன் நான் இப்படி நினைத்தது, ஹரி கிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘அனுமன்: வார்ப்பும் வனப்பும்’ என்ற புத்தகத்தை வாசித்தபோது. அதன்பிறகு டிகேசியின் சில ராமாயணக் கட்டுரைகள் இப்படிப்பட்ட ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்கின. இப்போது டகால்டி. வாழ்க நீர் எம்மான், வணக்கங்கள்!

அந்த ஆடியோ பதிவைக் கீழே தந்துள்ளேன். கேளுங்கள், நண்பர் ‘டகால்டி’யின் வலைதளம் : http://dagalti.blogspot.in/ அவரது ட்விட்டர் இணைப்பு : https://twitter.com/#!/dagalti

***

என். சொக்கன் …

28 05 2012

Advertisements

8 Responses to "சிறியன சிந்தியாதான்"

// இப்படி மொத்த ராமாயணத்தையும் யாராவது விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று ஏங்கதான் முடிந்தது // எனக்கும் அப்படியே !!

Reblogged this on rathnavelnatarajan and commented:
மிக மிக அருமை. நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

மிக மிக அருமை.
நன்றி.

நன்றி.
ட்விட்டர்ல தெளிவுபடுத்தின மாதிரி, இதுல எந்த சொந்த சரக்கு எதுவுமே கிடையாது. ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூலைப் படிச்சு, பிடிச்சதைப் பகிர்ந்துகிட்டேன்.எழுதினா நீளமாயிடும், யாரும் படிக்கமாட்டாங்கன்னு, பேசினேன்.

என் டிஸ்கி’யை ஞாபகம் வச்சுக்குங்க.

உதாரணத்துக்கு: ‘பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ’ ‘ங்க்றதுக்காக ஹரிகிருஷ்ணன் ஒரு நல்ல விளக்கம் குடுத்திருந்தார். நான் (அதாவது ராமகிருஷ்ணன்) சொன்னது போல இல்லாமல்: “நீ பரதன் போன்ற உத்தமனைத் தான் கண்டிருக்கிறாய் (அதனால் உனக்கு இந்த விலங்குகளின் செய்கை விளங்காது)” என்று சொல்வதாக. உலகம் இப்படிப்பட்டது தான் தம்பி ‘ன்ற தொனியில. அது இன்னும் ஆழமான விளக்கம்.

I listened to it with my mom. Both of us enjoyed it very much. Thanks for sharing!

nicely done..kudos to dagalti and thanks for sharing!!

டகால்டி , வேறொரு தளத்தில் சிந்திக்க வைத்துள்ளது உங்கள்(அதாவது ராமகிருஷ்ணன்) பேச்சு.

சிறப்பாக அறிமகப்படுத்தியுள்ளீர்கள்
நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 521 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 451,617 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2012
M T W T F S S
« Apr   Jun »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Advertisements
%d bloggers like this: