10 Responses to "’புக்’மார்க்ஸ்"

[…] அறிமுகம் […]


[…] அறிமுகம் […]


[…] அறிமுகம் […]


[…] அறிமுகம் […]


[…] அறிமுகம் […]


[…] அறிமுகம் […]


[…] அறிமுகம் […]


[…] அறிமுகம் […]


[…] அறிமுகம் […]

Posted by: என். சொக்கன் on: June 1, 2012
600024.com என்ற பொழுதுபோக்கு இணையதளம்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். நண்பர் விக்கியின் முயற்சி இது, ஆரம்பத்தில் சினிமாச் செய்திகளோடு களம் இறங்கியவர்கள் பின்னர் வேறு விஷயங்களில் கால் பதிக்கத் தொடங்கினார்கள். இப்போது ஒரு நல்ல புத்தக விற்பனைத் தளமாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்கள்.
இந்த ஆன்லைன் புத்தகக் கடையின் சார்பில் ஒரு ஃபேஸ்புக் பக்கமும் உள்ளது (https://www.facebook.com/600024books) இதனை வெறும் விற்பனை உத்தியாகமட்டும் பயன்படுத்தாமல், நல்ல வாசகர் குழுவாக வளர்த்தெடுக்க முனைந்துவருகிறது 600024 டீம்.
அந்த வரிசையில், ’புக்’மார்க்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய தினசரித் தொடரை நான் எழுதவிருக்கிறேன். தமிழ் / பிறமொழிப் புத்தகங்கள் / எழுத்தாளர்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பாக இது இருக்கும்.
‘மைக்ரோ’தொடர் என்று அறிவித்திருக்கிறார்கள். அதன் அர்த்தம், ட்விட்டர் / ஃபேஸ்புக் தலைமுறையின் Attention Spanக்குள் விஷயம் சொல்லப்படும் என்பதுதான். துணுக்குச் செய்தியைவிடக் கொஞ்சம் பெரியதாக, கட்டுரையைவிடக் கொஞ்சம் சிறியதாக, ஒரு நிமிடத்துக்குள் வாசித்துவிடக்கூடிய வகையில் இந்தக் குறுங்கட்டுரைகள் இருக்கும். புத்தகம், எழுத்து, வாசிப்பு பற்றிய ஒரு பொதுவான ஆர்வத்தை உண்டாக்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.
தினமும் மேற்சொன்ன ஃபேஸ்புக் பக்கத்தில் நீங்கள் இந்தத் தொடரை வாசிக்கலாம். இதுபற்றி உங்கள் கருத்துகளை அறியவும் யோசனைகளைக் கேட்கவும் ஆவலாக இருக்கிறேன்.
என்னைமாதிரியே நீங்களும் ‘ஃபேஸ்புக்’ என்றால் அலர்ஜியாகிறவரா? பிரச்னையில்லை, வாரக் கடைசியில் ஏழு குறுங்கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக இங்கேயும் அவற்றை Update செய்துவைப்பேன் :>
***
என். சொக்கன் …
01 06 2012
1 | ‘புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 1 « மனம் போன போக்கில்
June 11, 2012 at 8:25 pm
[…] அறிமுகம் […]