Archive for June 3rd, 2012
ஒரு கள், ஒரு கண்ணாடி (ட்விட்டுரை)
Posted by: என். சொக்கன் on: June 3, 2012
- In: இலக்கணம் | ட்விட்டுரை | Uncategorized
- 1 Comment
-
அரசியல் கூட்டங்களின் ஆரம்பப் புள்ளியான ‘தாய்மார்களே’ என்ற வாசகம், இலக்கணப்படி தப்பு :> |10
likes·
-
’பம்மார் இறுதிப் பண்டைப் பலர்பால்’ என்பது இலக்கண சூத்திரம், ‘தாய்மார்’ என்றாலே அது Pluralதான், ‘தாய்மார்களே’ அவசியமில்லை |20
likes·
0
comments -
இதேபோல் தம்பிமார், அண்ணன்மார், ஐயன்மார் … எல்லாம் Plural, ஐயன்மீர்கூட Pluralதான், இரண்டுக்கும் வித்தியாசம் தெரியலை |30
likes·
0
comments -
அபூர்வமாகச் சில சமயங்களில், Singular நபர்களை Pluralல் அழைப்பதுண்டு. மகனை ‘மிஸ்டர், இங்கே வா’ என்று அழைப்பதுபோல |40
likes·
0
comments -
உதாரணமாக, நளவெண்பாவில் ஒரு காட்சி தமயந்தி காட்டில் ஒரு பாம்பிடம் அகப்பட்டுக்கொள்கிறார், காப்பாற்ற ஒரு வேடன் வருகிறான் |50
likes·
0
comments -
அவனைப் பார்த்து, ‘ஐயன்மீர் உங்கட்கு அபயம்’ என்கிறாள் தமயந்தி |60
likes·
0
comments -
வந்தது ஒரு வேடன்தான், ஆனாலும் பன்மையில் ‘ஐயன்மீர்’ என அழைத்தது ஏன்? உயிர் காப்பவன் என்பதற்காக எக்ஸ்ட்ரா மரியாதை :> |60
likes·
0
comments -
இதுதொடர்பாக ஒரு வேடிக்கைக் கேள்வி பதில், ‘1330 பாக்கள் கொண்ட நூலைத் திருக்குறள் என்று Singularல் சொல்வது ஏன்? திருக்குறள்கள்தானே சரி?’ |70
likes·
0
comments -
இதற்கு சுஜாதா சொன்ன பதில், ‘திருக்குறள் கள்ளை அனுமதிப்பது இல்லை’ ;))))) |8/80
likes·
0
comments -
இந்த ட்வீட்களை எழுதி இரண்டு வாரம் கழித்து, மீண்டும் ஒரு கேள்வி, மீண்டும் ஒரு தேடல், ஆனால் இந்தமுறை தெளிவான விடை கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன் … கீழே படிக்கவும்
-
இன்று காலை @elavasam ஒரு கேள்வி கேட்டார். ’மன்னன்’ ஒருமை, ‘மன்னர்’ பன்மை… இங்கே ‘மன்னர்கள்’ என்று சொல்லவேண்டியதில்லை. ஆனால் |10
likes·
0
comments -
‘மன்னர்’ என்பது மரியாதையான ஒருமையும்கூட, இந்த இடத்தில் ‘மன்னர்கள்’, ‘தலைவர்கள்’ போன்றவை சரியா, தப்பா? |20
likes·
0
comments -
கொஞ்சம் தேடினேன், சூப்பரான ஒரு விஷயம் தெரிந்துகொண்டேன், ‘இரட்டைப் பன்மை’ (Dual Plural) என்று ஒன்று உள்ளது |30
likes·
0
comments -
’அர்’ விகுதி = பன்மை, ‘அர்கள்’ = இரட்டைப் பன்மை, இது எழுத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிப்படையான விதி இருப்பதாகத் தெரியலை |40
likes·
0
comments -
சங்க இலக்கியத்தில் ‘அர்கள்’ விகுதி அநேகமாக எங்குமே இல்லை, Except one place in கலித்தொகை (’உலகு ஏத்தும் அரசர்கள்’) என்று அறிகிறேன் |50
likes·
0
comments -
ஒரே ஓர் இடம்தான் எனினும், கலித்தொகையில் இருப்பதால், ’அர்கள்’ விகுதி (தலைவர்கள், மன்னர்கள் etc.,) ஓகே என்று எனக்குப் படுகிறது |6/60
likes·
0
comments
comments