நளவெண்பாவிலிருந்து கொஞ்சம்… (ட்விட்டுரை)
Posted by: என். சொக்கன் on: June 22, 2012
- In: ட்விட்டுரை | Poetry | Uncategorized
- 2 Comments
-
இந்த ’நளவெண்பா’வில் ஒவ்வொரு பாட்டுக்குள்ளும் ஒரு அசரடிக்கும் வரியாவது இருந்துவிடுகிறது, உம்: ‘வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கி’ 1/2
0
likes·
-
காதல்வயப்பட்ட பொண்ணுக்கு ராத்திரி புழுக்கமா இருக்காம், ‘இரவே, நீ சூரியனை விழுங்கிட்டுப் பிறந்ததால் இப்படி வெக்கையா?’ங்கறா! 2/20
likes·
0
comments -
//நளவெண்பா// தமயந்தி உடம்பிலிருந்து வீசும் அனல் தாங்காமல், அவள் கூந்தல் பூக்களை மொய்த்துக்கொண்டிருந்த வண்டுகளின் சிறகுகள் தீய்ந்துடுதாம்!0
likes·
0
comments -
//நளவெண்பா// தமயந்தி உடல் முழுக்க மன்மதன் அம்புகள் துளைத்து எரிக்க, அவள் நெருப்புக்கு நடுவே தவம் செய்வதுபோல் தெரிந்தாளாம்0
likes·
0
comments -
//நளவெண்பா// ஊரே தூங்கிவிட்டது என்பதைச் சொல்வதற்கு, ‘யாழ் தாம் உள்ளுறை புகுத’ என்கிறார், யாழ்களைப் பொட்டிக்குள் வெச்சுப் பூட்டிடாங்களாம்0
likes·
0
comments -
//நளவெண்பா// ‘இரவே, நீ தின்னும் இரையோ நான்?’ : தமயந்தி!0
likes·
0
comments -
//நளவெண்பா// ஒரே புலம்பல்ஸா இருக்கு, ஜிவ்வுன்னு 50 பாட்டைத் தாண்டி நளன் : தமயந்தி முதலிரவுக்குப் போய்டுவோமா? :>0
likes·
0
comments -
//நளதமயந்தி// முதலிரவுக் காட்சியின் முதல் பாடல், முதல் வரி ‘ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி’… என்னா வார்த்தைத் தேர்வுய்யா 😉0
likes·
0
comments -
//நளவெண்பா// ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி, இருவர் எனும் தோற்றம் இன்றி, புனலுக்கே புனல் கலந்தார்ப்போல் வேலானும் காரிகையும் சேர்ந்தார்!0
likes·
0
comments -
//நளவெண்பா// வல் ஓடும் : சூதாட உதவும் தாயக்கட்டைகள் வெட்கி ஓடும்படி… ம்ஹூம், சென்சார்ட், தேடிப் படிச்சுக்கோங்க 😉0
likes·
0
comments
2 Responses to "நளவெண்பாவிலிருந்து கொஞ்சம்… (ட்விட்டுரை)"

1 | Jawahar
June 23, 2012 at 7:24 am
நளவெண்பாவை எளிய தமிழில் எழுதிப் பிரசுரியுங்கள். நிறைய பேருக்குப் படிக்க சுவாரஸ்யமாகவும், எளிதாகவும் இருக்கும்.
http://kgjawarlal.wordpress.com


2 | GiRa ஜிரா
June 24, 2012 at 9:36 am
வெண்பா மட்டும் வெச்சு ஒரு நூலை எழுதியிருக்காரு புகழேந்தி. அதான் வெண்பாவுக்கொரு புகழேந்தின்னு சொல்றாங்க.
மற்ற புலவர்களை விட இவருக்குப் பெயரும் அழகு. புகழேந்தி. பாண்டி நாட்டார்கள் பெயர் வைக்கும் அழகே அழகு. பெரும்பாலும் ஊர்ப்பெயர்களும் தமிழில்தான் இருக்கும்.
இந்த நளவெண்பாவை வெச்சி எதாவது செய்யனும்னு ரொம்ப நாள் ஆசை. என்ன செய்றதுன்னு யோசிக்கிறேன்.

comments