புது ரிலீஸ்
Posted by: என். சொக்கன் on: July 1, 2012
- In: Announcements | Books | Poster | Uncategorized | ViLambaram
- 3 Comments
ஆனந்த விகடன் இதழில் சில ஆண்டுகளுக்குமுன் நான் எழுதிய ‘வல்லினம், மெல்லினம், இடையினம்’ தொடரின் இரண்டாம் பாகத்தை எழுதவிருப்பதாக ஏற்கெனவே இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ’மென்னுலகம்’ என்று தலைப்பிடப்பட்ட அந்தத் தொடர் ‘சூரிய கதிர்’ பத்திரிகையில் வெளியானது. இப்போது புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.
ஏனோ, எனக்கு மிகவும் பிடித்த ‘மென்னுலகம்’ என்ற தலைப்பு, இதனை வெளியிட்டுள்ள ’மதி நிலையம்’ பதிப்பாளர்களுக்குப் பிடிக்கவில்லை, ’சாஃப்ட்வேர் துறையில் சாதிக்கலாம், வாங்க’ என்று ‘கவர்ச்சிகரமான’ ஒரு தலைப்பை வைத்துள்ளார்கள் 🙂
இந்தப் புத்தகம் நேற்றுமுதல் விற்பனைக்கு வந்துவிட்டதாக அறிகிறேன். விலை, மற்ற விவரங்கள் எனக்கு இன்னும் தெரியவில்லை. அவற்றைப் பின்னர் Update செய்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் இதனை வாங்க ‘மதி நிலைய’த்தைத் தொடர்புகொள்ளலாம். ஃபோன் 044 28111506. ஈமெயில் mathinilayambooks@gmail.com
***
என். சொக்கன் …
01 07 2012
3 Responses to "புது ரிலீஸ்"

3 | Jawahar
July 2, 2012 at 7:26 am
வாழ்க! One more feather to your cap. எளியவர்களுக்குப் புரிகிற மாதிரி தலைப்பு, நிச்சயம் அது வால்யூம் ஆஃப் சேல்ஸை உயர்த்தும்!
http://kgjawarlal.wordpress.com

1 | அனுஜன்யா
July 1, 2012 at 11:02 pm
பொதுவாகவே சொல்ல நினைத்து சொல்லாமலே இதுவரை சென்று விட்டது. உங்க எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். எளிமை, சுவாரஸ்யம், “playing to the gallery” தென்படாத எழுத்து உங்களுடையது. நிறைய எழுதுங்கள். உங்களின் இந்தப் புத்தகமும் விற்பனையில் வெற்றி பெற வாழ்த்துகள்.