மனம் போன போக்கில்

கேடயம்

Posted on: October 20, 2012

நேற்று நண்பர் ஜிரா (இராகவன் கோபால்சாமி) வீட்டுக்கு வந்திருந்தார். நான்கு மணி நேரம் செம அரட்டை.

பேச்சின் நடுவே, புராணக் கதைகளை நிறைய அலசினோம். ஜிரா நங்கையிடம் ஒரு கேள்வி கேட்டார், ‘பீஷ்மர் அடி வாங்கி அம்புப் படுக்கைல விழுந்தார்தானே, அதுக்குக் காரணம் யாரு?’

‘அர்ஜுனன்.’

‘கரெக்ட், அர்ஜுனனைவிட பீஷ்மர் நல்ல வீரர், ஆனாலும் அவர் அர்ஜுனன்கிட்டே தோத்துடறார். ஏன் தெரியுமா?’

‘அப்போ அர்ஜுனன் முன்னாடி Shieldடா ஒருத்தர் நிக்கறார். அதனாலதான் பீஷ்மர் அவரை அடிக்கலை.’

‘கரெக்ட், அந்த Shield யாரு?’

‘சிகண்டி.’

அந்த பதில் சரியானதுதான். ஆனால் ஜிரா முகத்தில் குறும்புச் சிரிப்பு, ‘தப்பு நங்கை’ என்றார்.

’எப்படி? சிகண்டிதானே அர்ஜுனன் முன்னாடி Shieldடா நின்னது?’

‘ம்ஹூம், இல்லை’ என்றார் ஜிரா, ‘போரின்போது அர்ஜுனனும் சிகண்டியும் நின்ன அந்தத் தேரை ஓட்டினது யாரு?’

’கிருஷ்ணன்.’

‘அப்போ, கிருஷ்ணன்தானே பீஷ்மருக்கு நேர் முன்னாடி நின்னார்? அவர்தானே அவங்க ரெண்டு பேருக்கும் Shield?’

ஆஹா, லாஜிக்கலாக மடக்கிவிட்டாரே என்று நான் புளகாங்கிதம் அடைகையில், நங்கை ஒரு பதில் சொன்னாள் பாருங்கள்:

’ம்ஹூம், இல்லை, கிருஷ்ணர் ஃபர்ஸ்ட் உட்கார்ந்திருக்கார், அடுத்து சிகண்டி, அடுத்து அர்ஜுனன், நீங்க சொல்றபடி பார்த்தா கிருஷ்ணர் சிகண்டிக்கு Shield, சிகண்டி அர்ஜுனனுக்கு Shield. நீங்க கேட்ட கேள்வி, அர்ஜுனனுக்கு Shield யாருன்னுதானே? அப்போ நான் சொன்ன பதில்தான் கரெக்ட்.’

***

என். சொக்கன் …

20 10 2012

Advertisements

9 Responses to "கேடயம்"

Proved she is your daughter 200% 🙂 My best wishes to Nangai 🙂

amas32

செம்ம…. 😀

Logical reply இந்த வயசிலேயே இருக்கறது ஆச்சரியம்தான்.Good Nangai.

gud .. blessings to Nangai 🙂

குழந்தைகள் கதைகளை மிகுந்த கவனத்தோடு கேட்கிறார்கள்! சரியாக, சிறப்பாக வாதாடிய நங்கைக்கு வாழ்த்துக்கள்.பதிவுகளைத் தெரிவித்தால் நன்றி உடையவளாக இருப்பேன்.

கொஞ்சம் பழசுதான்…வேற தெரியல. புலிக்கு பிறந்தது பூனையாகுமா..?! 🙂

நாகாவின் வீட்டு விருந்தோம்பல் மிகச்சிறப்பு. வாழ்க வாழ்க 🙂

குழந்தைகளை விட்டுப் பிரிய மனமே இல்லை. குழந்தை வளர்ப்பு தெரிந்த பெற்றோரின் வளர்ப்பு. சொல்லப் போனால்… நாகாவைத்தான் பார்க்கப் போனேன் என்பதே எனக்கு மறந்துவிட்டது. 🙂

சகோதரியிடம் குழந்தைகளுக்குச் சுற்றிப் போடச் சொன்னேன். செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன். நாகா, செய்தியைக் கேட்டு உறுதி செய்யவும் 🙂

very nice

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 504 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 429,117 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

October 2012
M T W T F S S
« Aug   Nov »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
%d bloggers like this: