5 Responses to "ஒரு புதுசு, சில பழசு"

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சொக்கன்..


I am happy. Congratulations.


Happy to see this Chokkan sir. Pls let me know when “adutha kattam” is available for sale on internet

Posted by: என். சொக்கன் on: October 22, 2012
தற்போது அச்சில் இல்லாத என்னுடைய புத்தகங்களை ’மதி நிலையம்’ பதிப்பகத்தார் மறுபதிப்பு செய்ய முன்வந்துள்ளனர். அந்த வரிசையில் நான்கு புத்தகங்கள் இப்போது வெளியாகியுள்ளன. இவற்றில் முதல் மூன்றிலும் முந்தைய பதிப்புக்குப்பின் நிகழ்ந்தவற்றை Update செய்து தந்துள்ளேன்.
இவற்றுடன், குங்குமம் வார இதழில் நான் தொடராக எழுதிய ‘அடுத்த கட்டம்’ நாவலும் நூல் வடிவம் பெறுகிறது. ஆங்கிலத்தில் பிரபலமாக உள்ள Business Novel வடிவத்தைத் தமிழில் முயற்சி செய்யலாமே என்று எழுதியது. ஓவியர் ஸ்யாமின் புதுமையான படங்களுடன் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. வாய்ப்பிருந்தால் புத்தக வடிவத்தில் வாசித்து எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.
ஐந்து புத்தகங்களும் இன்னும் என் கைக்குக் கிடைக்கவில்லை. வந்தவுடன் விலை விவரம் தெரியப்படுத்துகிறேன். இவற்றை வாங்க விரும்புவோர் mathinilayambooks@gmail. com என்ற முகவரிக்கு எழுதலாம், அல்லது 044 28111506 என்ற எண்ணை அழைக்கலாம். இணையத்தில் வாங்கும் வசதி இப்போது இல்லை. இனிமேல் வரலாம்.
***
என். சொக்கன் …
22 10 2012
2 | என். சொக்கன்
October 22, 2012 at 5:03 pm
ஓஜஸ்,
இணையத் தளம் உருவாகிக்கொண்டிருக்கிறது. புத்தகங்களின் விலை விவரம் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. தெரிந்ததும் அப்டேட் செய்கிறேன்.
5 | Ram
October 25, 2012 at 9:06 am
Happy to see this Chokkan sir. Pls let me know when “adutha kattam” is available for sale on internet
1 | ஓஜஸ்
October 22, 2012 at 4:55 pm
மதி நிலையம் – சமீபத்தில் பல முறை, அடிக்கடிக் கேள்விப்படும் பதிப்பகம். பாரா அவர்கள் புத்தங்களுக்கும் அவர்கள் மறுப்பதிப்பு செய்கிறார்கள் போலும். எனி-வே உங்களுக்கு என் நல்வாழ்த்துகள் !!! அவர்களுக்கு தனியே ஒரு இணையதளம் உள்ளதா ? புத்தங்களின் விலை என்ன என்ன ??