மனம் போன போக்கில்

சேமத்தேர்

Posted on: November 6, 2012

அன்றைய போர்களில் தலைவர்கள் தேரில் சென்றால், கூடவே சேமத்தேர்’ என்று இன்னும் சில தேர்களும் வருமாம். எதற்கு?

தலைவர் தன் தேர் உடைந்தால் தரையில் நின்று போரிடமுடியாது, ரிப்பேர் செய்யும்வரை சண்டையை Pause செய்யவும் முடியாது, சட்டென ஒரு சேமத்தேரில் ஏறிப் போரைத் தொடர்வார்

உதாரணமாக, ‘சேமத்தேர் மிசைப் போத ஏனைய பல் படைக் கலமும் செறிந்து’ என்று கந்தபுராணத்தில் வரும்!

ஆக, சேமத்தேர் என்பது, இப்போது நம் பைக், கார் டயர் பஞ்சரானால் மாற்று ஏற்பாடாக ஸ்டெப்னி டயர் இருப்பதுபோல, ஸ்டெப்னி தேர்!

என்ன? ‘ஸ்டெப்னி’ என்றால் ‘வேறு’ அர்த்தம் உண்டே என்று யோசிக்கிறீர்களா?

அதுவும் உண்மைதான். சேமத்தேருக்கு இன்னொரு தமிழ்ப்பெயர், வைப்புத்தேர்!

தமிழ்ப்பாடம் போரடிக்கும் என்று யார் சொன்னது? 😉

***

என். சொக்கன் …
06 11 2012

8 Responses to "சேமத்தேர்"

Interesting! 🙂 Parents may be grown up children’s safety net when they need financial help. While applying to colleges for admission you apply to a few mediocre colleges and call them your safety colleges.

வைப்பு நிதியைக் கூட உங்கள் பதிவை படித்தப் பின் வேறு மாதிரி தான் எண்ணுவேன் என்று நினைக்கிறேன் :-))

amas32

சுவாரசியமாக இருக்கிறது..

அதானே..யார் சொன்னது..?!

Unexpected. Super Naga.

வழக்கம் போல இந்த டாபிக் பேசப் பட்டதற்கான காரணத்தையும் சேர்த்து உங்க ஸ்டைலில் எழுதியிருக்கலாமே! அரம்பிகுறதுக்குள்ள முடிச்சிடிங்க. ஆனா சுவாரசியமா இருந்தது. 🙂

சுவாரஸ்யம்.. தமிழ் எப்பவுமே கலகலப்புதான் நண்பரே சிலநேரம் கைகலப்பாகிடும்

@amas32 வைப்புநிதிக்கு மாற்றாக சேமநலநிதி உண்டல்லோ….

சேம’க்கு மாற்று இங்ஙனயும் வைப்பு’தான் :)))))

உங்களைப் போன்றவர்கள் சொல்லிக் கொடுத்தால் தமிழ் எப்படி போரடிக்கும்?

பரீட்சைக்கு என்று படிக்காதவரை தமிழ் இனிமைதான்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 498 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 420,788 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

November 2012
M T W T F S S
« Oct   Dec »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
%d bloggers like this: