ஒரு ‘சி’ன்ன குழப்பம்
Posted November 8, 2012
on:- In: இலக்கணம் | ஓசிப் பதிவு | Grammar | Language | Learning | Open Question | Rules | Tamil
- 21 Comments
இன்று ட்விட்டரில் ஒரு விவாதம். வழக்கம்போல் எங்கேயோ தொடங்கி எங்கேயோ சென்று நின்றது!
அக்னி நட்சத்திரம் படத்தில் வரும் ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாட்டைச் சிலாகித்து நான் எழுதினேன். நண்பர் @NattAnu அதற்குப் பதில் சொல்லும்போது, ‘இந்தப் பாட்டில் ஓர் இடத்தில் சின்னப் பெண் என்கிற வார்த்தை வரும், அதை சித்ரா ‘Sinna’ப் பெண் என்று பாடியிருப்பார், அது ஏன்? ‘Chinna’ப் பெண் என்பதுதானே சரி?’ என்று கேட்டார்.
நான் கொஞ்சமும் யோசிக்காமல் ‘Sinna’ என்பதும் சரிதான் என்று பதில் சொல்லிவிட்டேன்.
நண்பர் @elavasam அதை ஏற்கவில்லை. இங்கே ‘Chinna’தான் சரி என்றார்.
அப்போதும் எனக்குக் குழப்பம் தீரவில்லை. காரணம் ‘சின்னஞ்சிறு கிளியே’ என்ற பாரதியார் பாட்டை S, Ch கலந்த உச்சரிப்பில் பலர் பாடிக் கேட்டிருக்கிறேன் எது சரி?
இதேபோல், ‘சிங்காரச் சென்னை’யில் சிங்காரத்துக்கு S, ஆனால் சென்னைக்கு Ch. இது சரிதானா? ஆம் எனில் எப்படி சாத்தியம்?
இப்படியே விவாதம் நீண்டது, @psankar @mohandoss @anoosrini என்று பலர் பங்கேற்றார்கள். நிறைய மேற்கோள்கள் / தொல்காப்பியச் சூத்திரங்கள் காட்டப்பட்டன. ஆனால் அவை எல்லாச் சாத்தியங்களையும் தொட்டுச் சென்றதாக எனக்குத் தோன்றவில்லை. குழப்பம் நீடித்தது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், S, Ch இரண்டுமே வெவ்வேறு சூழ்நிலைகளில் பொருத்தம் என்றுதான் நாங்கள் யோசித்தோம், ஆனால் எப்போது எந்த உச்சரிப்பு என்று தெரியவில்லை.
அப்போது நண்பர் @madhankarky ஒரு தனிச்செய்தி அனுப்பி ஓர் எளிய விதிமுறையைச் சொன்னார்:
- ‘ச’ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் எழுத்து ஒரு வார்த்தையின் தொடக்கத்தில் வந்தால், அது ‘Cha’ என்று உச்சரிக்கப்படும் (Rule 1)
- ’ச’ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் எழுத்து ஒரு வார்த்தையின் மையத்தில் வந்தால் அதற்கு முன்னால் இருக்கும் எழுத்து என்ன என்று பார்க்கவேண்டும்:
- ‘ச’ குடும்ப எழுத்துக்கு முன்னால் ஒற்றெழுத்து இருந்தால், அதை ‘Cha’ என்று உச்சரிக்கவேண்டும் (Rule 2)
- ‘ச’ குடும்ப எழுத்துக்கு முன்னால் ஒற்றெழுத்து இல்லாவிட்டால் அதை ‘Sa’ என்று உச்சரிக்கவேண்டும் (Rule 3)
உதாரணமாக:
சந்திரன் வந்தான், யாரோ பாட்டுப் பாடினார்கள், உச்சரிப்பு சரியாக இருக்குமா என்று அச்சத்துடன் பார்த்தான், அட்சர சுத்தமான உச்சரிப்பைக் கேட்டு அசந்துபோனான்
இதில்:
- சந்திரன் = Chandiran (Rule 1)
- உச்சரிப்பு = Uchcharippu (Rule 2)
- சரியாக = Chariyaaga (Rule 1)
- அச்சத்துடன் = Achchaththudan (Rule 2)
- அட்சர = Atchara (Rule 2)
- சுத்தமான = Chuthamaana (Rule 1)
- அசந்து = Asanthu (Rule 3)
இந்த மூன்று ரூல்களில் எல்லாச் சாத்தியமும் அடங்கிவிடுமா? தெரியவில்லை. சில பெயர்களுக்கும் (உதாரணம்: Senthil), வடமொழி / வேற்று மொழிகளில் இருந்து இங்கே வந்த சொற்களுக்கும் (உதாரணம்: சிங்கம்) இவை பொருந்தாமல் போகலாம். இன்னும் சில விதிவிலக்குகளும் இருக்கலாம். இவற்றைத் தவிர்த்துப் பெரும்பாலான சொற்களுக்கு இந்த மூன்று விதிமுறைகள் போதும் என்று தோன்றுகிறது.
அதுமட்டுமில்லை, இதே விதிமுறையை க (Ka, Ga), த (Tha, Dha), ட (Ta, Da) போன்ற குடும்பங்களுக்கும் நீடிக்கமுடியும் என்றார் @madhankarky.
இதுகுறித்து உங்கள் கருத்துகளையும் இங்கே சேருங்கள். அதாவது, CheerungaL, Not SeerungaL 🙂
***
என். சொக்கன் …
08 11 2012
21 Responses to "ஒரு ‘சி’ன்ன குழப்பம்"

You seem to have omitted ‘ja’. Thanjavur. Manjam? Panjam?
Moreover, how do you pronounce Silappathikaaram? Sivappu? Pachchai. Pasai. Panju… Cotton, not short for Panchapakesan. All these words except Panchapakesan are pure Tamizh.
Suruttu? SeRukku?
We have lot of similarities with the English language in so far as pronunciation is concerned.
Phonetics purely depend on preceding, succeeding letters… Consonants or vowels.


ennai poruthavarai.. ellamae ‘cha’ endrae uchcharikka pattirukkum. samaskiritha kalappaal, pala vaarthaigal ‘sa’ ena thinithu uchchrithu, athuvae pazhagivittirukkum.
Nalla velaiyaai periyaar, anna pondror punniyathil ‘cha’, ‘sa’ vodu nidrathu. illaiyael ‘sha’ vum aagiyirukkum.
indrum bengalore thamil nanbargal ‘chollungo’ endru azhakkiraargal. Thanjavuril ‘sollunga’… vegu silar erichaloottum vagaiyil ‘shollungo’…


மொத்தமான விதிகளாகத் தெரியலையே.
சிங்கம் – விதி 1-ன் படி chingam என்றல்லவா சொல்ல வேண்டும் ஆனால் singam என்றுதானே சொல்கிறோம். அது போல சிங்காரம், சிகரம் எல்லாம் கூட singaram sigaram என்றுதானே சொல்கிறோம்.
மஞ்சம் தஞ்சம் பற்றி ஒருவர் கேட்டுவிட்டார்.
இதில் பெயர்களை சேர்க்கக் கூடாது என நினைக்கிறேன். இல்லையேல் நாராயணசாமி, அசாருதீன் என்ற பெயர்களைத் தவறாக உச்சரிக்க வேண்டியது வரும்! 🙂 Saidapettai என்பதை சைதாப்பேட்டை என எழுதினால் Chaidapettai ஆகும் அபாயமும் உண்டு.
செல்வது, செல்வம் என்பவற்றை selvadhu, selvam எனச் சொல்ல வேண்டுமா அல்லது Chelvadhu, Chelvam என்பது சரியா?
வசித்து – இதை Vachiththu என்றா உச்சரிக்கின்றோம்? Vasiththu
என்றல்லவா சொல்கிறோம்?
சிகிச்சை (Sikichchai not Chikichchai) போன்ற அந்நிய மொழியை வேர்சொல்லாகக் கொண்ட சொற்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது போல் தெரிகிறதே!
இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்விதிகள் முழுமையான விதிகளாகத் தெரியவில்லை.


ஆழி சூழ் உலகு – இது sooz / chooz?


நாராயணசாமி, அசாருதீன் என்ற உதாரணங்கள் தவறானவை. அவை மேற்குறிப்பிட்ட விதிகளின் படி சரியாகவே உச்சரிக்கப்படும். குழப்பத்திற்கு மன்னிக்கவும்.


சுத்தமாக – suddhamaaha – இதுதான் சரியான உச்சரிப்பு.


சோறு = Chooru not soru


Suddham…. Sanskrit word. In Tamizh, it is Thooymai.


[…] சில சந்தேங்களை திரு. சொக்கன் அவர்கள் பதிந்திருந்தார். அதைப்பற்றிய என் எண்ணங்கள் […]


நீங்கள் இவ்வளவு சிரமபட்டிருக்கவேண்டிய அவசியமே இல்லை.
க,ச,ட,த,ப ர எனும் மெய் எழுத்துக்கள் வல்லினமாகும்.இதில் ச என்பது cha என்றே உச்சரிக்கப்படவேண்டும்.
sa எனும் உச்சரிப்பிற்கு வடமொழி எழுத்தான ஸ என்பதை உபயோகிக்கவேண்டும்.
ஆனால் தி.மு.க வினர் ஸ என்ற எழுத்தை வைத்து அரசியல் செய்ததால் அது வழக்கொழிந்து அத்தனை குழப்பங்களுக்கும் வழி வகுத்தது.
ஸன்யாசி,சந்திரன்,ஸாவித்திரி,சக்கை,ஸரி போன்றவை உதாரணம்.
நாம் னை என்ற புது முறையை கொண்டுவந்தது போல ஷ,ஸ,ஜ,போன்ற எழுத்துக்களை மீண்டும் பயன்படுத்தவேண்டும்.


[…] நலம். ஏன் இப்படி சொல்கிறேன் என்பதை இந்தப் பதிவு உங்களுக்கு விளக்கும். சொல் முதலில் […]


மதன் கார்க்கி சொன்ன விதிகள் எல்லாச் சொற்களுக்கும் பொருந்தும். பொருந்தவில்லை என்று தோன்றும் சொற்களை நாம் தவறாக உச்சரித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம் ‘ஸ’வில் தொடங்கும் நிறைய திசைச்சொற்கள் தமிழுக்குள் புகுந்தது தான்.


பாராட்டுகள். எங்கள் தமிழாசிரியர் ரொம்பவும் எளிமையாகச்
சொல்லுவார் எந்த வல்லின எழுத்துக்களை முதல்
எழுத்தாக உச்சரிக்கும் போது வல்லின ஓசை வரவில்லையோ
அந்த வார்த்தையின் வேர்ச்சொல் தமிழல்ல என்று.


[…] சுருக்கமாக sinimaa என்ற சொல் chinimaa என மாறும் என்று கூறுகிறார். ஆனால் இன்று பிரச்சனையே sinimaa, shinimaa, chinimaa மூன்றையுமே இந்தக் குறியீட்டில்தான் குறிக்கிறோம் – ‘சினிமா’. இந்தப் பயன்பாடு சர்சைக்குரியது. இதைப் பற்றிய திரு. சொக்கன் பதிந்திருக்கிறார். […]

1 | Erode Nagaraj
November 8, 2012 at 11:22 pm
if ள் is L, why சே is not chE or sE? 🙂