மனம் போன போக்கில்

தனவந்தரின் பிளான் பி

Posted on: November 27, 2012

ஓர் ஆங்கிலப் புத்தகம், ‘There lived a rich man’ என்று தொடங்குகிறது. அதைத் தமிழில் ‘அங்கு ஒரு தனவந்தர் வாழ்ந்தார்’ என்று மொழிபெயர்த்துள்ளனர்.

’தனவந்தர்’ என்பது வடமொழிச் சொல் என்பது ஒருபக்கமிருக்க, இப்போது அது தமிழ்நாட்டில் பழக்கத்திலேயே இல்லை, பழைய்ய்ய மொழி அது. அதைப் பயன்படுத்தினால், <40 வயதுள்ள, தினசரிப் பேச்சால்மட்டுமே தமிழ் Vocabularyயை வளர்த்துக்கொண்டுள்ளவர்கள் யாருக்கும் புரியாது.

சில சமயங்களில் வேண்டுமென்றே பழைய நடையில் எழுதுவது உண்டு. உதாரணமாக, நான் அடிக்கடி ‘அன்பர்காள்’ என்று தொடங்கி ஈமெயில்கள் எழுதுவேன், ’உள்ளன’ என்பதற்குப் பதில் ‘உள’ என்று பயன்படுத்துவேன், ‘யார்’ என்பதற்குப் பதில் ‘ஆர்’ என்று எழுதுவேன், இவையெல்லாம் அதிகப் பேருக்குப் புரியாது என்று தெரியும், ஆனாலும் வாசிக்க வித்தியாசமான சுவையாக இருக்கும்.

அப்படிச் சிலர் தெரிந்தே கிறுக்குத்தனம் செய்வது வேறு விதம், இந்த மொழிபெயர்ப்பாளர் ‘Rich Man’க்கு இணையாகத் ‘தனவந்தர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பது அப்படி அல்ல என்று நம்புகிறேன்.

இன்னொரு விஷயம், மொழியை வார்த்தைக்கு வார்த்தை மொக்கையாகப் பெயர்க்காமல் உள்ளூர்க் கலாசார அம்சங்களையும் கொண்டுவரவேண்டும்.

உதாரணமாக, ’ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’ என்று கதை தொடங்கும் மரபு இங்கே தமிழில் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி, ‘There lived a rich man’ … ’ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரர்’ என்பதுபோல் மொழிபெயர்த்தால்தான் வாசிக்க லகுவாக இருக்கும்.

இன்னோர் உதாரணம், ஓர் இன்ஷூரன்ஸ் விளம்பரத்தில் ‘Your Plan B’ என்று இருக்கிறது. இதன் அர்த்தம் ஆங்கில மொழி அறிந்தவர்களுக்குதான் புரியும்.

இதையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்கள். எப்படி தெரியுமா? ‘உங்கள் திட்டம் பி’ என்று.

இந்தமட்டும் ‘B’ என்பதை ‘பி’ என்று மொழிபெயர்த்தார்களே, ‘திட்டம் ஆ’ என்று எழுதாமல்!

’திட்டம் பி’ என்பதில் என்ன தவறு? என்று நீங்கள் கேட்டால், உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்று அர்த்தம், ‘Plan B’ என்பதன் அர்த்தம் புரிந்த உங்களால், ‘திட்டம் பி’ என்பதையும் அர்த்தப்படுத்திக்கொள்ளமுடிகிறது.

ஆனால் இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், ‘Plan B’ என்பதை மொழிபெயர்ப்பதன் நோக்கம், ஆங்கிலம் தெரியாத, தமிழ்மட்டுமே தெரிந்த ஒருவருக்கு அது புரியவேண்டும். அல்லவா? ‘திட்டம் பி’ என்பது அவர்களுக்குப் புரியாது, ஆங்கிலமும் தெரிந்தவர்கள் அதை ஆங்கிலத்திலேயே படித்துவிடுவார்கள், தமிழ் மொழிபெயர்ப்பு அவர்களுக்கு அவசியம் இல்லை.

ஆக, ‘Plan B’ என்பதை, ‘உங்களது மாற்றுத் திட்டம்’ என்பதுபோல் மொழிபெயர்த்தால்தான் அது உரிய நபர்களுக்குச் சென்றுசேரும். காரணம் ‘Plan B’ (அல்லது) ‘திட்டம் பி’ (அல்லது) ‘திட்டம் ஆ’ என்று பேசும் கலாசாரம் / வழக்கம் நம்மிடையே இல்லை. இது மொழிபெயர்த்த நல்லவருக்குத் தெரியவில்லை.

Of course, நான் இங்கே சொல்லியிருப்பவைதான் சிறந்த மொழிபெயர்ப்புகள் என்பதல்ல. இவை சர்வசாதாரணமான உதாரணங்கள். நாம் எல்லாரும் தினந்தோறும் இதுமாதிரி எளிய, ஆனால் அபத்தமான மொழிபெயர்ப்புத் தவறுகளைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.

வருத்தமான விஷயம், ஒரு நல்ல மொழிபெயர்ப்பு எப்பேர்ப்பட்ட மேஜிக் செய்யக்கூடும், எப்படி ஒரு புதிய உலகத்தை அந்த மொழி தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடும் என்று நம் ஊரில் யாருக்கும் புரியவில்லை, அதன் முக்கியத்துவம் தெரியாமல் கடமைக்கு ஏதோ தட்டித் தள்ளுகிறார்கள். இழப்பு ஜாஸ்தி.

***

என். சொக்கன் …

27 11 2012

13 Responses to "தனவந்தரின் பிளான் பி"

உண்மை. ஆத்மார்த்தமாகவும் கரிசனத்தோடும் மொழிபெயர்ப்பு செய்யும்போதுதான் சரியாகச் செய்யமுடியும். மற்றபடி, குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்தாகவேண்டும் என்ற நெருக்குதலுக்கு இடையில், (விளம்பர ஏஜென்சிகளிடம் இந்தப் பிரச்னை உண்டு), தமிழ்ச் சூழல் சரியாகத் தெரியாத ஆட்கள் செய்யும் சொதப்பல்தான் இது.

விளையாட்டாக நாம் ஒன்றைச் செய்யலாம். தமிழ் அச்சு, தொலைக்காட்சி (மொழிமாற்றல்) விளம்பரங்களை எடுத்துக்கொண்டு அவற்றை எப்படி மேம்படுத்தலாம் என்று பார்க்கலாம். அதிலிருந்து அப்படியே தொழில்துறையின் சில கடினமான விஷயங்களை எடுத்துக்கொண்டு மொழிபெயர்க்க முற்படலாம்.

பிளான் பி == மாற்றுத் திட்டம் நன்றாக உள்ளது. உள்ளூர்ப் பழமொழிகளில் அழகான சொல்லாடல் ஏதேனும் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

I have a video where a lady says “ஒரு பத்து இருநூறு செஞ்சு வித்தோம்”. The subtitle says “We made and sold 10-200 “.

Beat that 🙂

Very Nice – Chenaa .Sarvannan, Chennai

நிறைய ஆங்கில விளம்பரங்களைத் தமிழ்ப் படுத்துவது கடினமாகதான் உள்ளது. பெரும்பாலும் ஆங்கிலத்தை அப்படியே தமிழ், கன்னட மொழிகளில் எழுதிவிடுகிறார்கள்.அதனால் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்துவிடுகிறது அல்லவா?

“மாற்றுத் திட்டம்” என்பது சரியான மொழிபெயர்ப்பாக இருக்கலாம், ஆனால் ஒரு விளம்பர வாசகத்தில் பொருந்தும் மொழிபெயர்ப்பாக இல்லை (ப்ளான் பி என்பது இன்னமும் மோசம் என்பது வேறு விஷயம்).

“உங்கள் வாழ்க்கைத் திட்டத்திற்கு ஒரு பாதுகாப்புத் திட்டம்” என்று விலாவாரியாகச் சொன்னால் தான் சரியாக அர்த்தம் புரிய வாய்ப்பிருக்கிறது என்று நினைக்கிறேன்…

Agreed, There may be a better translation fitting the requirement, My point is it can’t be a literal translation (except in some cases)

Good Idea Badri, We should try this!

Super. Good examples.

அருமை. அழுந்தக்குட்டி சொல்லவேண்டும் போலிருந்தது. 🙂

நான் கூட மிஸ் யூ என்பதை தமிழில் சொல்ல முடியாது என்ற விவாதம் என் நண்பர்களிடையே வந்த போது இவ்வாறு எழுதியிருந்தேன்.

‘In many occasions, my friends have wondered to translate the expression “I miss you”. I used to say them, miss you is nothing but saying, இங்க ரொம்ப நல்லா இருக்கு.. நாம அடிக்கடி பேசிப்போமே, அந்த மாதிரி ரெண்டு பக்கமும் நிறைய பூக்கள் இருக்கிற ரோடு, உயரமான மரங்கள், அங்க இருக்கற அந்த பெஞ்சு.. கொஞ்சம் இருட்டினதும் பேசீண்டே வந்து ஆர்டர் பண்ணி குடிக்கற டீ.. ஒண்ணு சொல்லட்டுமா.. நீ இல்லையேன்னு இருக்கு..”

Miss you is nothing but this ‘நீ இல்லையேன்னு இருக்கு’.

அன்புள்ள சொக்கன்,
தனவந்தர் என்பது உண்மையிலேயே ஒரு பழமையான சொல்தான். பணக்காரர் என்று மொழிபெயர்த்திருக்கலாம்.

இரண்டு நாட்களுக்கு முன் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் என் பேரனை ‘பல கவிஞர்களை சந்திக்கவும், போட்டியில் பங்கு பெறவும் ஓர் வாய்ப்பு. இன்னும் ஐந்து நாட்களே உள. சந்திப்போம்’ என்று தமிழில் தட்டச்சு செய்யச் சொன்னேன். முதலில் புரியாமல் விழித்தான், நான் உள என்பதற்கு உள்ளன என்று பொருள் என்று விளக்கினேன்.
நட்புடன்,
வ.க.கன்னியப்பன்

சார் வணக்கம்.

எனக்கு ’தனவந்தர்’ன்னா ’பணக்காரன்’னு ஒரே நொடியில் அறிந்துவிட்டதே…! 🙂 ஆனாலும் மொழிபெயர்ப்பைப் பற்றிய தங்கள் அபிப்பிராயங்கள் சரிதான். எல்லா இந்திய மொழிகளிலும் இதே நிலைமை என்று இக்கட்டுரை நினைக்க வைக்கும்.

Amith, That is because you know hindi? :))

இந்தியில் ’தனவந்த்’ என்றோர் வார்த்தையே கிடையாது, சார். 🙂 அது ஒரு சம்ஸ்கிருத வார்த்தை. மராட்டியிலும் பயன்படுத்துறாங்க. இந்தியில் ’தனவான்’ என்று சொல்வாங்க. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 528 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 609,225 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

November 2012
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
%d bloggers like this: