மனம் போன போக்கில்

ஐந்து பாடல்கள்

Posted on: November 30, 2012

இயக்குனர் வசந்தின் அடுத்த படம்பற்றி ஒரு செய்தி கேள்விப்பட்டேன். அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற ஐந்து நிலங்களை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் வருகின்றனவாம்.

இதைப் படித்தவுடன், இந்த ஐவகை நிலங்கள் பெயரைக் கேட்டதும் உடனே என்னுடைய நினைவுக்கு வரும் பாடல்கள் என்னென்ன என்று யோசித்தேன். உதாரணமாக, குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை, முல்லை மலர் மேலே, பாலைவனத்தில் ஒரு ரோஜா… இப்படி.

அதேசமயம், வசந்த் இப்படி மொக்கையாக யோசித்திருக்கமாட்டார் என்று தோன்றியது. அவர் ஐவகை நிலங்கள் / திணை ஒழுக்கங்களின் தன்மையை அடிப்படையாக வைத்துப் பாடல்களை வாங்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.

அந்த ஊகத்தின்படி, இந்த ஐந்து நிலங்களின் இலக்கணங்களுக்குப் பொருத்தமாக என்னென்ன பாடல்களைச் சொல்லலாம் என்று யோசிக்கிறேன். அதாவது, என்னுடைய புரிதலின்படி:

 • முல்லை: அவன்(ள்) வரவுக்காகக் காத்திருத்தல்
 • நெய்தல்: பிரிந்தவர் இன்னும் திரும்பவில்லையே என எண்ணி வருந்துதல்
 • பாலை: பிரிவை எண்ணி வாடுதல்
 • மருதம்: ஊடல்
 • குறிஞ்சி: கூடல்

Assuming this is right, என்னுடைய பட்டியல் இங்கே:

 • முல்லை: மாலையில் யாரோ மனதோடு பேச (சத்ரியன்)
 • நெய்தல்: ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு (வைதேகி காத்திருந்தாள்)
 • பாலை: எவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலை பாயுதே)
 • மருதம்: இதில் எனக்கு முழுத் திருப்தியான ஒரு பாடல் கிடைக்கவில்லை, அரைத் திருப்தி தந்தவை : பொன் மானே கோபம் ஏனோ (ஒரு கைதியின் டைரி) மற்றும் என் கண்மணியே கண்மணியே (சின்ன வாத்தியார்)
 • குறிஞ்சி: இசையில் தொடங்குதம்மா (ஹே ராம்)

உங்கள் பட்டியலைப் பின்னூட்டத்தில் தாருங்கள்.

***

என். சொக்கன் …

30 11 2012

10 Responses to "ஐந்து பாடல்கள்"

மருதம்: ஊடல்,இதற்கு காத்திருந்த கண்கள் படத்தில் வரும், வளர்ந்த கதை மறந்து விட்டால் கூரடா கண்ணா ,பாடல் மிக பொருத்தமாக இருக்கும்

பாலை: வானுயர்ந்த சோலையிலே.. நீ நடந்த பாதையெல்லாம்… from இதயக்கோவில்.

நிறைய யோசிக்காமல் சொல்வது

முல்லை: என்னைத் தாலாட்ட வருவாளோ, சொல்லாயோ வாய் திறந்து
நெய்தல்: நீ வருவாய் என நான் இருந்தேன்
பாலை: போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
மருதம்: ?
குறிஞ்சி: பூங்கதவே தாழ்திறவாய், தலையைக் குனியும் தாமரையே, ….

முல்லை: உயிரே உயிரே (பம்பாய்)
நெய்தல்: சங்கீத ஜாதி முல்லை (காதல் ஓவியம்)
பாலை: காதல் ரோஜாவே (ரோஜா)
மருதம்: வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா (காத்திருந்த கண்கள்)
குறிஞ்சி: என்னுள்ளே என்னுள்ளே (வள்ளி)

மருதம்: நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே ??

பாலை – நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு,தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…(ஈரமான ரோஜாவே) நாளை இந்த வேளை பார்த்து..(உயர்ந்த மனிதன்)

மருதம் – ஹலோ மிஸ் ஹலோமிஸ் எங்கே போறீங்க,பறந்தாலும் விட மாட்டேன்..(குரு)

நெய்தல் – சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்னை..(டவுன்பஸ்)

குறிஞ்சி – இளமை எனும் பூங்காற்று,கொல்லி மலை சாரலிலே(எங்க முதலாளி 🙂 புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…

முல்லை – செந்தூரப்பூவே செந்தூரப்பூவே…..(16 வயதினிலே)

என்னுயிர் தோழி கேளொரு சேதி
இது தானோ உங்கள் மன்னவன் நீதி

…..

அரண்மனை அறிவான் அரியணை அறிவான்
அந்தபுரம் ஒன்று இருப்பதை அறியான் …

இது எதில் வரும்?

கே.பி.யின் வாரிசு என்றால் அது இயக்குனர் வஸந்த் தான். ஒவ்வொரு படத்திலும் ஒரு புதுமையைப் புகுத்திவிடுவார். குறைந்தபட்சம் பாடல்களிலாவது. மூச்சு விடாமல் பாடிய மண்ணில் இந்தக் காதலன்றி, பெயரிலேயே பாடல் – நிவேதா, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு இசையமைப்பாளர், ரிதம் படத்தில் பஞ்ச பூதங்கள் (ஏதாவது விட்டுப் போயிருந்தா சொல்லுங்க) என ஏதாவது புதுமை இருக்கும். அவரது படங்கள் ஏமாற்றினாலும் பாடல்கள் ஏமாற்றாது. குருநாதரைப் எந்த இசையமைப்பாளராக இருந்தாலும் சிறந்த பாடல்களை வாங்கிவிடுவார். யுவன் ஷங்கர் இசையில் என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட் பூவெல்லாம் கேட்டுப்பார். அந்த அளவுக்கு சத்தம் போடாதே இல்லையென்றாலும் பேசுகிறேன் பேசுகிறேன் ஒன்றே போதும். அந்த காம்பினேஷன் இம்முறை மீண்டும் இணைவதால் மூன்று பேர் மூன்று காதல் இசை குறித்து மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறேன்.

பஞ்ச பபூதங்களைப் படமாக்கியது போல் இப்பாடல்களையும் அந்தந்த நிலத்தில் படமாக்குவார் என நினைக்கிறேன். ஏனென்றால் சிறுவயதில் குறிஞ்சி என்றால் மலையும் மலை சார்ந்த இடங்களும் என்று படித்தவர்களே அதிகம் உள்ளனர். ஆகவே
குறிஞ்சி – மலை மீது, முல்லை – காடுகளில், மருதம் – வயல் வெளியில் நெய்தல் – கடற்பகுதியில் பாலை – பாலை வனத்தில் (ஏற்கெனவே ‘காற்றே என் வாசல் வந்தாய்’ இருக்கே!) என்பது போல் படமாக்கப் பட்டிருக்கலாம்.

நீங்க சொன்ன மாதிரி பாடல்களில் எனது பட்டியல்

குறிஞ்சி – மீண்டும் மீண்டும் வா, என்னுள்ளே என்னுள்ளே
முல்லை – என்னைத் தாலாட்ட வருவாளோ, செந்தூரப் பூவே
மருதம் – உன்னைப் பார்த்த பிறகுதான் – திருட திருடி (ஊடல் என்பதை விட சண்டையே அதிகம் இருக்கும்)
நெய்தல் – காத்திருந்து காத்திருந்து,
பாலை – நான் பாடும் மௌன ராகம், பாடவா உன் பாடலை (சோகம்)

முல்லை: எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடி வா….
பாலை: இதயம் போகுதே.. எனையே பிரிந்தே../ இதய வானில் உதய நிலவே
மருதம்: வாராயோ வெண்ணிலாவே, கேளாயோ எங்கள் கதையே…
நெய்தல்: பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதை கேட்டாயோ..
குறிஞ்சி: இதழில் கதை எழுதும் நேரமிது….

நெய்தல் – நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
பாலை – என்னை மறந்ததேன் தென்றலே
குறிஞ்சி – இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேளை இதயத்தில் விழுந்த்து திருமண மாலை
மருதம் – ஊடல் சிறு மின்னல் குளிர் நிலவே வாடலாமா(ஹீரோவா எஸ்வி சேகர் நடிச்ச படம்னு புகையா நினைவிருக்கு..சம் கைவரிசை சம்திங்க் பேர்)
முல்லைக்கு இன்னும் யோசிக்கணும்..!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 521 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

 • 451,274 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

November 2012
M T W T F S S
« Oct   Dec »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Advertisements
%d bloggers like this: