மனம் போன போக்கில்

கம்பன் களஞ்சியம்

Posted on: May 31, 2013

பேராசிரியர் திரு. பெஞ்சமின் லெபோ, ஃபிரான்ஸ் கம்பன் கழகத்தின் செயலர், கம்பன் காதலர், சிறந்த தமிழ் அறிஞர், அருமையான பேச்சாளர்.

பெங்களூருவில் நாங்கள் பங்கு பெறும் ‘கம்ப ராமாயண வகுப்பு’களுக்குச் சென்ற வாரம் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் அவர். சுமார் ஒரு மணி நேரம் அற்புதமான பேச்சில் எங்களை மகிழ்வித்தார். கம்பனின் வெவ்வேறு பாடல்களைச் சுட்டிக்காட்டி, அவற்றின் சிறப்பை எளிய முறையில், பொருத்தமான உதாரணங்களைச் சேர்த்து, மற்ற காவியங்களுடன் ஒப்பிட்டு விளக்கினார், சந்த இனிமை, கவிதை அழகு, இலக்கண நுட்பம், சமூகப் பின்னணி என்று பலவிதமான குறுக்குவெட்டுத் தோற்றங்களில் கம்பனை ரசிக்கமுடியும் என்று கற்றுக்கொடுத்தார். தெரிந்த விஷயங்களைக்கூட, ஒரு புதுக் கண்ணாடியின்வழியே பார்க்கும்போது எப்படிப்பட்ட ரசனை சாத்தியப்படுகிறது என்று புரியவைத்தார்.

ஆகவே, பேராசிரியர் பெஞ்சமின் லெபோ எழுதிய ‘கம்பன் களஞ்சியம் தொகுதி 1’ என்ற நூலை (சமீபத்தில் புதுவை கம்பன் விழாவில் வெளியிடப்பட்டது) மிகுந்த ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். அவரது பேச்சுக்குச் சற்றும் குறைபடாத எழுத்தில் அமைந்த சுவாரஸ்யமான நூல் இது.

எட்டே கட்டுரைகள்தாம். ஆனால், அவற்றுள் பேசுவதற்காக அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ள விஷயங்கள் எல்லாவிதமான வாசகர்களுக்கும் முழுத் திருப்தி தரும்வகையில் அமைந்துள்ளன.

உதாரணமாக, திரைப்பாடல் மேதையாகிய கண்ணதாசனின் பாடல் வரிகளில் கம்பனின் தாக்கம் எப்படி இருந்தது என்று ஒரு கட்டுரை, அதே வீச்சில் வீரமாமுனிவரையும் கம்பரையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை, கம்ப ராமாயணம் ஏன் காலம் கடந்து நிற்கிறது என்கிற விளக்கம், அதனை வாசிப்பது எப்படி என்கிற பாடம், வாலிவதைபற்றிய விவாதம், பரசுராமன் படலம் ராமாயணத்தில் எதற்காக என்கிற விளக்கம், இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் ஜான் மில்டனின் ‘Paradise Lost’ல் வரும் ஒரு பாத்திரத்தைக் கம்பனின் ஒரு பாத்திரத்தோடு ஒப்பிட்டு அழகுபடுத்தும் கட்டுரை ஒன்று… இப்படி எல்லாவிதமான கட்டுரைகளும் இங்கே உண்டு, அனைத்தும் சிறிய கட்டுரைகள்தான், ஆனால் மேலோட்டமாக அன்றி, நன்கு ஆராய்ந்து எழுதப்பட்டவை என்பது வாசிக்கும்போதே புரிகிறது.

பெஞ்சமின் லெபோவின் தமிழ் நடையில் கம்பன் நீக்கமற நிறைந்திருக்கிறார், பெரும்பாலும் கம்பன் பயன்படுத்திய அதே வார்த்தைகள், வாக்கிய அமைப்புகளை இவரும் பயன்படுத்துகிறார், உரைநடை வாக்கியங்களில்கூட எதுகையும் மோனையும் இயைபும் கச்சிதமாக அமைந்து இன்பம் தருகின்றன.

இந்தப் புத்தகத்தில் உள்ள சில கட்டுரைகள் மேடையில் வாசிக்கப்பட்டவை, வேறு சில கட்டுரைகள் எழுத்து வடிவில் உருவானவை, ஆனால் இவை எல்லாமே, யார் வேண்டுமானாலும் வாசிக்கக்கூடிய எளிய மொழியில் மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டுள்ளன, சும்மா வார்த்தைகளால் ஜாலம் காட்டும் விளையாட்டே கிடையாது, Content Rich கட்டுரைகள், கம்பனின் காப்பியத்தில் ஏதேனும் ஒரு பகுதியை வேறு கோணத்தில் பார்ப்பது எப்படி என்று எளிமையானமுறையில் சொல்கின்றன, ஒரு புதிய அனுபவத்தைத் திறந்துவைக்கின்றன.

பேராசிரியரின் ‘கம்பன் களஞ்சியம்’ அடுத்தடுத்த தொகுதிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!

(கம்பன் களஞ்சியம் : பேராசிரியர் பெஞ்சமின் லெபோ : வானதி பதிப்பகம் : விலை ரூ 60)

***

என். சொக்கன் …

31 05 2014

 

Advertisements

4 Responses to "கம்பன் களஞ்சியம்"

அன்புடையீர்
வணக்கம்

கம்பன் சேவையை மீண்டும் பாராட்டி மகிழ்றேன்
பேராசிரியர் S R K கம்பன் கழகத்தில் முதன் முதலாகப் பேசிய
கம்பனும் மில்டனும் என்ற தலைப்பையே டாக்டர் பட்டம்
பெறுவதற்கும் கருத்துருவாக எடுத்துக் கொண்டார்
அது மீனாக்ஷி புத்தக நிலையம் பதிப்பாக
கம்பனும் மில்டனும் என்று நூல் வடிவம் பெற்றுள்ளது

அன்புடன்
ச கம்பராமன்

2013/5/31 “மனம் போன போக்கில்”

> **
> என். சொக்கன் posted: “பேராசிரியர் திரு. பெஞ்சமின் லெபோ, ஃபிரான்ஸ்
> கம்பன் கழகத்தின் செயலர், கம்பன் காதலர், சிறந்த தமிழ் அறிஞர், அருமையான
> பேச்சாளர். பெங்களூருவில் நாங்கள் பங்கு பெறும் ‘கம்ப ராமாயண
> வகுப்பு’களுக்குச் சென்ற வாரம் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் அவர்.
> சுமார் ஒ”

Very resourceful info. Many thanks. Will go for the book and wait for its sequels.

அன்புள்ள சொக்கன்,
உங்கள் கட்டுரை அருமை. கம்பன் களஞ்சியம் தொகுதி 1 என்ற நூலை இரண்டொரு நாளில் வாங்கி விடுவேன்.
வ.க.கன்னியப்பன்

[…] கம்பன் களஞ்சியம். […]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 521 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 451,670 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2013
M T W T F S S
« Apr   Jun »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Advertisements
%d bloggers like this: