மனம் போன போக்கில்

ஒருவர்

Posted on: June 20, 2013

இன்று காலை ‘இருவர்’ பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு விஷயம் சொல்லத் தோன்றியது.

வெளிப்படையாகச் சொல்லப்படாவிட்டாலும், ‘இருவர்’ என்பது உண்மையாக வாழ்ந்த இரு பிரபலங்களின் கதை. குறிப்பாக, எம். ஜி. ஆர். என்கிற நடிகர், அரசியல்வாதியின் வாழ்க்கையைப் பதிவு செய்கிற Unofficial Biopic.

எம். ஜி. ஆர். படங்கள் பாடல்களுக்காகப் புகழ் பெற்றவை, பாடல் வரிகளுக்காகவும்.

இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால், எம். ஜி. ஆரின் அரசியல் வளர்ச்சியே அவரது பாடல்கள், அவற்றில் சொல்லப்பட்ட கருத்துகளால் அமைந்ததுதான் என்று ஊகிக்கலாம். இன்றைக்கும் தேர்தல்களின்போது அவருடைய கட்சிக்கு ஓட்டுக் கேட்பது பிரபல சொற்பொழிவாளர்களோ, அவர்களது மேடைப் பேச்சுகளோ அல்ல, எப்போதோ எழுதப்பட்ட எம். ஜி. ஆர். திரைப் பாடல்கள்தாம்.

இவையெல்லாம் எதேச்சையாக அமைந்தவை என்று நான் நம்பவில்லை. எம். ஜி. ஆர். உடன் பழகியவர்கள், குறிப்பாகத் திரைக் கவிஞர்கள் அவரைப்பற்றி எழுதும் குறிப்புகளைக் கவனிக்கும்போது ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது, தான் “பாடும்” வரிகள் எப்படி இருக்கவேண்டும் என்பதில் எம். ஜி. ஆர். மிகவும் கவனமாக இருந்திருக்கிறார், அதைச் சேதி சொல்லும் கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

எம். ஜி. ஆர். பாட்டுகள், குறிப்பாக, அவரே பாடுகிற தனிப் பாடல்களுடைய வரிகளின் பொதுத்தன்மை, அவை எல்லாருக்கும் நேரடியாகப் புரியும், எழுதப் படிக்கத் தெரியாத, பேச்சுமொழியைமட்டுமே நம்பியுள்ளவர்களுக்குக்கூட மிக எளிதில் புரியும். விளக்கவுரை தேவைப்படாது. ஒரே ஒரு குழப்பமான வார்த்தையைக்கூட அவற்றில் பார்க்கமுடியாது.

உதாரணமாக, வாலி எழுதிய இந்தப் பிரபலமான வரி:

நான் ஆணையிட்டால்,
அது நடந்துவிட்டால்,
இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்!

இதே வரி, கிட்டத்தட்ட இதே சூழ்நிலையில் ‘இருவர்’ படத்திலும் இடம்பெறுகிறது. ஆனால் வைரமுத்து இதைச் சற்றே மாற்றி எழுதுகிறார்:

நீங்கள் ஆணையிட்டால் (நான்) படைத்தலைவன்,
நான் நினைத்தால், நினைத்தது நடக்கும்
நடந்தபின், ஏழையின் பூ முகம் சிரிக்கும்!

இதுவும் குழப்பமில்லாத, நேரடியான வரிதான். ஆனால், முந்தின வரிகளில் உள்ள எளிமை இதில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. முனைந்து எழுதிய வரிபோல் இது தொனிக்கிறது. இயல்பாக இல்லை.

இந்த ஒரு வரிமட்டுமல்ல, இந்தப் பாடலிலும், எம். ஜி. ஆர்.போல தொனிக்கும் கதாபாத்திரம் நேரடியாக மக்களைப் பார்த்துப் பாடுகிற இன்னொரு பாடலிலும்கூட இடம்பெற்றுள்ள பெரும்பாலான வரிகள் உண்மையில் எம். ஜி. ஆர். சென்றடைய விரும்பிய மக்களை அத்துணை எளிதாகச் சென்று சேர்ந்திருக்காது, அதே காரணத்தால், அவை எம். ஜி. ஆரால் அங்கீகரிக்கப்பட்டிருக்காது என்று நினைக்கிறேன்.

இது நிச்சயம் வைரமுத்துவின் பிழை அல்ல, இயக்குநர்தான் அவரிடம் பாடல் வரிகள் இப்படி இருக்கவேண்டும் என்று கேட்டு வாங்கியிருக்கவேண்டும், அது இயலாது எனில், அப்படி எழுதவல்ல ஒருவரைப் பயன்படுத்தியிருக்கவேண்டும்.

’இருவர்’ படத்தை நான் பார்க்கவில்லை. ஆகவே, இயக்குநர் மணி ரத்னம் இந்தக் கதாபாத்திரத்தை எப்படிச் சித்திரித்திருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், பாடல் வரிகள் என்கிற இந்த ஓர் அம்சத்தில் அவர் எம். ஜி. ஆரின் ஆளுமையைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

Of course, படைப்பாளி என்ற முறையில் அவருக்கு முழு Creative Freedom உண்டு. எம். ஜி. ஆர். எளிய பாடல் வரிகளைதான் பாடவேண்டும் என்று என்ன கட்டாயம்? படத்தின் இசை நவீனத்தைப் பிரதிபலிக்கும்போது, பாடல் வரிகளும் அவ்வண்ணமே மாறக்கூடாதா?

வரிகளில் புதுமை இருக்கலாம், ஆனால், அது அந்தக் கதாபாத்திரத்தின் அடிப்படையை மாற்றிவிடக்கூடாது என்பது என் கட்சி. தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த மறைமலை அடிகளாரின் வாழ்க்கையைப் படமாக எடுக்கும்போது, ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ என்று அவர் பாடுவதுபோல் எழுதமுடியுமா? நிஜத்தில் வாழ்ந்த அந்த ஆளுமையின் தன்மைக்கேற்பதான் பாடல் வரிகள் அமையவேண்டும் என்று நினைக்கிறேன்.

இதற்கு உதாரணம் வேண்டுமென்றால், ‘பாரதி’ படத்தில், பாரதியார் பாடுவதாக வரும் புதிய பாடல் ஒன்றை புலமைப்பித்தன் எழுதினார், ‘எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ’ என்ற அந்தப் பாடலைக் கேட்கலாம், பாரதி எழுதிய / பாடிய மற்ற வரிகளுடன் ஒப்பிட்டு, அந்த ஆளுமைக்குப் புலமைப்பித்தன் நியாயம் செய்துள்ளாரா என்று பார்க்கலாம்.

***

என். சொக்கன் …

20 06 2013

8 Responses to "ஒருவர்"

நீங்கள் சொல்வது போல வாலி அளவுக்கு எம்ஜிஆர் பாடல்களை – அதாவது அவர் சொல்ல நினைத்த செய்திகளை – வேறு எந்தக் கவிஞரும் சொல்லி இருக்க முடியாது. இருவர் படம் எம்ஜிஆர் பற்றி மட்டுமல்ல, மு.கருணாநிதி பற்றியும் சொல்லுகிறது. உங்களுக்கும் தெரிந்திருக்கும் இது.
சில இயக்குனர்களால் மட்டுமே கதாபாத்திரங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல படங்களைத் தர முடிகிறது. மணிரத்தினம் பெரிய இயக்குனர் ஆனாலும் இந்தப் படத்தில் அவர் வெற்றி பெறவில்லை. கதபாத்திரங்களையே அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று கூட தோன்றுகிறது. இல்லை நிறைய விட்டுக் கொடுக்க வேண்டி வந்ததோ, தெரியவில்லை. மொத்தத்தில் படம் ‘ஊத்திகிச்சு!’

நல்லதொரு அலசல் – பாராட்டுக்கள்!

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி 🙂 ஆயிரத்தில் நான் ஒருவன் என்று முதலில் எம்ஜியார் பாடவே மாட்டார். ஆயிரத்தில் நீ ஒருத்தி அல்லது நீ ஒருவன் என்று தான் சொல்லுவார். இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும் என்று சொல்வதாக வருவதும் அவர் காரக்டர் படி சரியாக வராது. அவரின் PRமுகமே பணிவு தான்.

நல்ல பதிவு 🙂

amas32

நான் படித்ததில் இருந்து, எம்.ஜி.ஆர் எப்பொழுதும் பாடல்களில் தனி கவனம் செலுத்துவார். இயக்குனருடன் அவரும் பாடல் உருவாகி பதியும் வரை அவருடைய அபிப்பிராயம் இருக்கும்.

நீங்கள் கூரியது, நானும் கவனித்தது, அதற்க்கு காரணம் வைரமுத்து மற்றும் இயக்குனர் நீங்கள் பார்க்கும் பார்வையில் பார்க்கவிலை. அவர்கள், கதை நடக்கும் காலகட்டத்தில் உள்ள இசை கருவிகளை கவனித்தார்கள், பாடல் மிக நேர்த்தியாக இருப்பதற்காக, பாடுபட்டுள்ளார்கள் ஆனால், அதன் எளிமையை கவனிக்க தவறிவிட்டார்கள்.

பொதுவாக, வைரமுத்து வரிகள், இயல்பை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கும், வாலியின் வரிகள் இயல்புடனே இருக்கும், கேட்ப்பவர்கள் மனது உடனே அதனுடன் ஒன்றி போகும். வைரமுத்துவின் வரிகள், தனியாக கவனித்தால், எவ்வளவு கவி நயமாக உள்ளது என்று தோன்றும். இது முழுக்க முழுக்க அவரவர்கள் வகுத்துக் கொண்ட பாதை.

மனிரத்னம், கம்பி மேல் நடந்து படத்தை நகர்த்திருப்பார். நம் நாட்டில் அவ்வளவு எளிதாக real life ஐ திரையில் எடுத்து வர முடியாது. இன்னும் நாம் திரைப்படத்தை திரைப்படமாக பார்க்கும் பக்குவத்துக்கு வரவில்லை.

பாரதி பாடலில், புலமைப்பித்தன் பாரதியாக வாழ்ந்து எழுதிய மாதிரி இருக்கும், அவ்வளவு கனம். அதுவும், பாரதி, காசியில் வாழ்க்கையை பற்றி தெளிவடையும் போது வரும் இந்த பாடல். இந்த பாடலை கேட்ப்பவர்கள் பாரதி எழுதிய பாடலாகவே நினைப்பார்கள். புலமைப்பித்தன் என்று தெரியும் போது, புலமைப்பித்தனா? என்று ஆச்சர்யம் அடைவதுதான், புலமைப்பித்தன் திறமைக்கு பரிசு.

RANGAN : Lyrics like Aayirathil naan oruvan and the children harking back to the Chikumangu song sequence from Ulagam Suttrum Vaaliban are explicit MGR-film references. Did you worry that thiswould pull audiences outside the zone of the story, the film, and make them focus on exactly what you were trying to avoid— namely, ‘oh, he was never like this, he was like that’?

RATNAM : If it’s not blatant, if it just gives an indication of a few films of his through the length of this film, a few brush strokes, then I think it adds to the flavour of the film. It’s only when you start wearing it on your sleeve, converting it into a caricature, that it hurts. When all the elements— the visuals, the audio, the music, the drama— end up completely representing real life, you feel overloaded. But if only one of the elements is fleetingly touching upon a reference and going away, then it just gives a lingering flavour of the period it belongs to. Hopefully it will just evoke a smile, bring a sense of nostalgia to the visual.

Naga Chokkanathan Sudharsan Venkat ”all elements completely representing real life” : இதற்கு மிகுந்த உழைப்பு தேவை, அதை அவர் தவிர்த்திருப்பது எதனால் என்று யோசிக்கிறேன்

Sudharsan Venkat Even in Rangan book he never agreed its MGR story. For many reasons including one it creates lot of controversy if he openly said so (otherwise also everybody knew) then he needs to give explanation for his imagination element. In Hollywood, they used to take the Biopic based on some novels which sometimes authenticated by the person or family members. Here one died and few survivors, so… He is right taking film about famous individuals in India

Naga Chokkanathan Sudharsan Venkat அவரது விளக்கத்தை முழுமையாக ஏற்கிறேன், Totally Fair Answer to my question. அதேசமயம், நான் அதன் நோக்கத்தைச் சந்தேகப்படுகிறேன், அவ்வளவே

அப்படி என்றால் மணிரத்னம் வாலிவே எழுத வச்சிருக்கலாம் . அதுவல்ல அவருடைய முயற்சி.

Dear Mr. Chockan
You said It
There is no other actor who have understood the very pulse of movie going audience and made such a great, indelible impression through the songs. MGR has conveyed his thoughts and used the platform of fil\m songs.
Just listen to the song in Padagotti” koduthhathellam koduthan” MGR’s persopnal ambition & his deep sense of God worship would have been explicitly conveyed

வைரமுத்துவின் பாடல்கள் இயல்பை விட்டு விலகி மட்டுமல்ல, கண்ணதாசன் பாடல்களில் இருந்த நேர்மை/உண்மை வாலியின் பாடல்களில் இருக்கும் இனிமை, மற்ற கவிகர்களிடம் இருக்கும் இயற்கை தன்மை எதுவும் இருக்காது. வெகு சில பாடல்களை தவிர்த்து !!!!!

‘நான் ஆணையிட்டால்’ என்ற benevolent dictator ஐ ‘நீங்கள் ஆணையிட்டால் தலைவன்’ என்ற ஜனநாயகமாக’ மாற்றியது சரிதானே?அடுத்த வரியிலும் ஏழைகள் வேதனைப்படமாட்டார் என்ற negative பிரயோகம் ஏழையின் பூ முகம் சிரிக்கும் என்ற positive ஆக மாறியது சரிதானே?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,749 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2013
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
%d bloggers like this: