Archive for August 2nd, 2013
வண்ண வண்ணப் பூக்கள்
Posted by: என். சொக்கன் on: August 2, 2013
- In: Announcements | Books | ViLambaram
- 1 Comment
என்னுடைய ‘வண்ண வண்ணப் பூக்கள்’ கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் நான் எழுதிய கட்டுரைகள், மற்றும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றின் தொகுப்பு இது. சொல், கவிநயம், இசையும் கவியும், இலக்கணம் என்ற நான்கு தலைப்புகளில் இவை தொகுக்கப்பட்டுள்ளன.
பொது இழை ஏதுமின்றி பலதரப்பட்ட அம்சங்களைக் கலந்து கட்டியிருப்பதால்தான் ‘வண்ண வண்ணப் பூக்கள்’ என்ற பெயரைத் தேர்வு செய்தோம். ஆனால், ஒவ்வொரு பக்கத்திலும் ரசிக்கக்கூடிய அம்சங்கள் ஏதேனும் இருக்கும் என்று நம்புகிறேன். வாய்ப்பிருந்தால் வாங்கிப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். நன்றி!
(வண்ண வண்ணப் பூக்கள் : மதி நிலையம் வெளியீடு : விலை ரூ 110 : தொலைபேசி எண் 04428111506 : மின்னஞ்சல் முகவரி mathinilayambooks@gmail.com)
***
என். சொக்கன் …
02 08 2013