வந்தாளே ராக்கம்மா
Posted August 8, 2013
on:இன்று நங்கையைப் பரத நாட்டிய வகுப்பிலிருந்து அழைத்துவரும்போது, ஒரு பாடலைப் பாடிக்கொண்டுவந்தாள். மிகவும் எளிமையான கன்னடச் சொற்கள், லகுவான மெட்டு. சிறிது நேரத்தில் என்னையும் அறியாமல் நானும் அந்தப் பாடலை ஹம் செய்யத் தொடங்கிவிட்டேன்.
‘நங்கை, இந்தப் பாட்டு சூப்பரா இருக்கே, யார் சொல்லிக்கொடுத்தாங்க உனக்கு?’
‘எங்க மிஸ்’ என்றாள் மிகப் பெருமையுடன். ‘இதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?’
‘தெரியாதே, சொல்லு!’
அவள் விளக்கத் தொடங்கினாள், ‘ரத்னான்னு ஒரு பொண்ணு, கைக்கு, காலுக்கு, கண்ணுக்கெல்லாம் அழகா அலங்காரம் செஞ்சுகிட்டு வர்றா, அதை எல்லாருக்கும் பெருமையாக் காட்டறா, அதான் இந்தப் பாட்டு!’
‘பிரமாதமா இருக்கு நங்கை’ என்றேன், ‘வீட்டுக்குப் போய் நெட்ல தேடுவோம், இந்தப் பாட்டு கிடைச்சாலும் கிடைக்கும்!’
’ஆஹா அம்மகா’ என்று தொடங்கும் அந்தப் பாடலைத் தேடினோம், கிடைத்தது. கர்நாடக நாட்டுப்புறப் பாடல் அது. இந்த இணைப்பில் நாற்பத்தொன்பதாவது பாடலாக உள்ளது: http://mio.to/album/178-Kannada_Folk/27183-Koli_Koogithakka_Vol_26/#/album/178-Kannada_Folk/27183-Koli_Koogithakka_Vol_26/
இணையத்தில் கேட்ட வடிவத்துக்கும், நங்கை பாடியதற்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. அவளைத் திரும்பத் திரும்பப் பாடச் சொல்லிக் கேட்டேன். ரசித்தேன்.
சட்டென்று ஒரு யோசனை, ஜாலியான இந்தப் பாடலைத் தமிழில் உருமாற்றினால் என்ன?
நானும் நங்கையும் லாப்டாப்புடன் உட்கார்ந்தோம். ஒவ்வொரு வார்த்தையாக அவள் பொருள் சொல்ல, நான் மெட்டில் உட்காரவைத்தேன். பின்னர் அவளே சில சொற்களைச் சொல்லிப் பாடிப் பார்த்துத் தேர்ந்தெடுத்தாள். பொருத்தமான சொற்கள் அமைந்தபோது, ‘சூப்பர்ப்பா’ என்று கை தட்டிப் பாராட்டினாள்.
‘ஒட்டியாணம்’ என்ற ஒரு வார்த்தையைத்தவிர, மற்ற எல்லாம் சரியாகவே அமைந்தன. அதற்குப் பதில் ‘மேகலை’ என்ற அதிகம் புழக்கத்தில் இல்லாத சொல்லைப் போட எனக்கு விருப்பம் இல்லை. இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
பாடலை எழுதி முடித்தவுடன், நங்கை மெதுவாக எழுத்துக்கூட்டிப் படித்துக் கற்றுக்கொண்டாள். என்னுடைய ஃபோனில் துண்டு துண்டாகப் பாடினாள்.
ஆர்வமிருந்தால், நீங்களும் கேட்கலாம், வாசிக்கலாம் இதோ இங்கே:
ஒலி வடிவம்:
எழுத்து வடிவம்:
ஆஹா அம்மகா,
ஆஹா ஜும்மகா,
ஆஹா அம்மகா ஜும்மகா ஜும்மக என்றே
வந்தாளே ராக்கம்மா!கைகளிலே வளையலைத்தான் மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
அழகா ஆடுது அவ கைதான்!(ஆஹா அம்மகா
கால்களிலே கொலுசெல்லாம் போட்டுக்கிட்டா ராக்கம்மா,
போட்டுக்கிட்டா ராக்கம்மா,
ஆட்டம் போடுது அவ கால்தான்!(ஆஹா அம்மகா
கண்களிலே மையெழுதித் தீட்டிப்புட்டா ராக்கம்மா,
தீட்டிப்புட்டா ராக்கம்மா,
மீனாத் திரியிது அவ கண்ணாம்!(ஆஹா அம்மகா
காதினிலே தோடுகளைத் தொங்கவிட்டா ராக்கம்மா,
தொங்கவிட்டா ராக்கம்மா,
தானாத் துள்ளுது அவ காதும்!(ஆஹா அம்மகா
இடுப்புலதான் ஒட்டியாணம் தவழவிட்டா ராக்கம்மா,
தவழவிட்டா ராக்கம்மா,
காத்தாச் சுத்துது அவ இடுப்பும்!(ஆஹா அம்மகா
வெரலுலதான் மோதிரத்தை மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
வெள்ளரிப் பிஞ்சா அவ வெரலாம்!(ஆஹா அம்மகா
நகத்துலதான் செவ்வண்ணம் பூசிக்கிட்டா ராக்கம்மா,
பூசிக்கிட்டா ராக்கம்மா,
பூவா மலருது அவ நகமும்!(ஆஹா அம்மகா
கழுத்தினிலே மணிமாலை சூடிக்கிட்டா ராக்கம்மா,
சூடிக்கிட்டா ராக்கம்மா,
ஷோக்கா மின்னுது அவ கழுத்தும்!(ஆஹா அம்மகா
கூந்தலிலே பூக்களைத்தான் வெச்சுக்கிட்டா ராக்கம்மா,
வெச்சுக்கிட்டா ராக்கம்மா,
ஊஞ்சல் ஆடுது அவ கூந்தல்!(ஆஹா அம்மகா
***
என். சொக்கன் …
08 08 2013
20 Responses to "வந்தாளே ராக்கம்மா"

Nangai Rocks -நங்கை, நல்லா பாடினியா எனக்குக்கூட டான்ஸ் ஆடத்தோணிச்சு! உட்கார்ந்தே, கூடப்பாடி ஆடியும் விட்டேன்.வழிகாட்டும் தந்தையைப் பெற்றதும், வழிநடக்கும் மகளாய் நீ இருப்பதும் பெருமையாக இருக்கிறது. இறைவனுடைய திருவருள் எப்பொழுதும் நிலைத்து நிற்க வாழ்த்துகிறேன். வணக்கம்.


ரொம்ப நல்லா இருக்கு நங்கை..கங்க்ராட்ஸ்..இவ்ளோ பெரிய பாட்டைப் பாடினதுக்கு..கொஞ்சம் கூட மூச்சு வாங்காம.. நன்றாய் இருந்தது நாகாஸ் ட்ரான்ஸ்லேஷனும்..ம்ம் காத்தாச் சுத்துற இடுப்பா..எப்ப்டி இருக்கும்..:) ரத்னா எப்படி ராக்கம்மாவானா..


Really fantastic work…
நங்கை deserves standing aviation…
Hat’s off… !!!
Superb…!!!
நல்ல உச்சரிப்பு டா குட்டீ!!!
Keep it up!!!
உன் அண்ணா,
ArunsivA


சொக்கன் சார்!
நங்கையின் உச்சரிப்பு அருமையா இருக்கு… உச்சரிப்புக்காவே மீண்டும் ஒரு முறை கேட்டேன்..


Dear Chokkan,
This is a nice lullaby. I have translated into English.
Kindly comment. Instead of Rakkamma, I said my darling.
Hey mamma! Hey jumma!
Hey mamma! Hey jumma!
Hey mamma! Jumma! Jumma!
There comes my darling!
Wearing bangles in her forearms my darling,
Wearing bangles my darling,
Beautifully swinging her forearms! (Hey mamma)
Wearing anklets in her ankles my darling,
Wearing anklets my darling,
Beautifully dancing her legs! (Hey mamma)
Smearing eye paste in her eyelids my darling,
Smearing eye paste my darling,
Looks like twin fish in her face! (Hey mamma)
Ear-ring drops in her ears hanging my darling,
Permitted ear-ring drops to hang my darling,
Ear-ring drops jumping with joy happily! (Hey mamma)
Golden girdle-ornament glittering in her waist my darling,
Glittering in her waist, my darling,
Her waist is swirling in the air! (Hey mamma)
Wearing ring in her tender finger my darling,
Wearing snugly my darling,
Tender cucumber her finger! (Hey mamma)
Smearing red nail polish in her nails my darling,
Smearing nail polish my darling,
Blooms like red flowers her nails! (Hey mamma)
Wearing pearl necklace in her neck my darling,
Wearing necklace my darling,
Lightning grandeur her neck too! (Hey mamma)
Wearing flower garland in her hair-doing my darling,
Wearing in her hair-doing,
Swinging along the hair plait! (Hey mamma)


நங்கையின் குரலும் பாட்டும் மெட்டும் அடிக்கடி முணுமுணுக்கச் செய்கிறது.
Little Nangaiயோட soopper musicku liltingu liltingu!
ராக்கம்மா -வை ROCK amma -வாக ஆக்கி விட்டாள்.
ஒட்டியாணம் என்பதுதானே சரி?
பி எஸ் ஆர்


Great Father …! Great Daughter …! Great song…!


மிக அருமை
ஆடை ஆபரணங்கள் என்ற கருத்தை கற்பிக்க அருமையான பாடல். இதில் அம்மக்க.சும்மக்க என்னும் சொற்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நன்றி
இதில் வேறொரு நல்ல செயல்பாடும் கிடைத்து. வெள்ளரி பிஞ்சாம் அவ விரலும் என்னும் பகுதியை நா பிறழ் பயிற்சிக்காக கொடுக்கலாம், நங்கை படும் போதும் சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அப்பாவும் மகளுக்கும் பாராட்டுக்கள். மேலும் இத்தகைய ஒலிப்பதிவுகளை எதிர்பார்கிறேன்


Fantastic Sir!
Your daughter got some voice!


ரொம்ப பிடித்திருந்தது.
//தவழவிட்டா//
சுற்றிவிட்டா என்றால் மற்ற இடத்தோடு சந்தம் பொருந்தும் என நினைக்கிறேன்.


நலமிகு நண்பர் சொக்கனுக்கு
வணக்கம்!
அப்பாவும் மகளும் அசத்திவிட்டீர்கள!
எப்படிப் பாராட்டுவது என்று தெரியாமல்
நங்கையின் பாட்டில்
எங்களை மறந்துவிட்டோம்!
உங்கள் இருவருக்கும் எங்கள் உளங்கனிந்த பாராட்டுகள்!
அடுத்த ஆண்டு உங்களுராகிய பெங்களுருவுக்கு வரும்போது
கணடிப்பாக நங்கையைச் சந்திக்க வேண்டும்!
வாழ்க! வளர்க!
நலமே விளைக!
பெஞ்சமின் – திருமதி பெஞ்சமின்


ஆஹா .. ஆட்டமும் பாட்டுமாய் உற்சாகப் பகிர்வுகள் .. பாராட்டுக்கள்..!


Super sir

1 | amas32
August 8, 2013 at 9:25 pm
Please tell your daughter that we are very proud of her! Her diction is so good, a good example for all those Tamil film music singers 🙂
Congratulations on a splendid and sweet effort in making a song which is simple to learn for children Nanngai’s age!
amas32