வள்ளுவர் இல்லம்
Posted by: என். சொக்கன் on: August 12, 2013
- In: Announcements | Fiction | Kids | Magazines | Media | Poetry | Serial | Tamil | ViLambaram
- 3 Comments
‘பாசமலர்’ என்ற பெற்றோர் / குழந்தைகளுக்கான மாத இதழ், கோவையிலிருந்து வெளியாகிறது.
இந்தப் ‘பாசமலர்’ இதழில், இந்த மாதம் தொடங்கி, ‘வள்ளுவர் இல்லம்’ என்ற சிறுவர் தொடர் ஒன்றை எழுதுகிறேன். மாதம் ஒரு திருக்குறளை எடுத்துக்கொண்டு அதனைச் சிறிய கதை வடிவில் விவரிப்பதே இத்தொடரின் நோக்கம்.
உதாரணமாக, முதல் அத்தியாயத்தில் ‘கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம், அஃது இன்றேல் / புண் என்று உணரப் படும்!’ என்ற திருக்குறளின் விளக்கமாக ‘கண்ணுக்கு அலங்காரம்’ என்ற கதையை எழுதியுள்ளேன். வாய்ப்பிருந்தால் உங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்.
‘பாசமலர்’ இதழ் கோவை பகுதியில் பல கடைகளில் கிடைக்கும். மற்ற ஊர்களில் வாங்க விரும்புவோர் தபால்மூலம் பெறுவது வசதி. தனி இதழ் ரூ 10, ஆண்டு சந்தா ரூ 100 மட்டுமே. அதற்கு நீங்கள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண்: (0)9894772026. ஈமெயில் முகவரி paasamalarcbe@gmail.com
***
என். சொக்கன் …
12 08 2013
3 Responses to "வள்ளுவர் இல்லம்"

2 | Thilaga
August 12, 2013 at 7:52 pm
வெளிநாட்டுல இருக்கிறவர்கள் உங்கள் தொடரை எப்படி வாசிக்கலாம்? உதவி please


3 | என். சொக்கன்
August 12, 2013 at 8:25 pm
பாசமலர் விரைவில் இணையத்திலும் வரும் என்று சொன்னார்கள். என்ன சமாசாரம் என்று அவருக்கு ஃபோன் செய்து விசாரியுங்கள்.
அச்சில் வருவதை ப்ளாகில் இடுவதில் எனக்குச் சில சிரமங்கள் உள்ளன. அவர்களாக வெளியிட்டால் எனக்குச் சங்கடம் இல்லை.

1 | திண்டுக்கல் தனபாலன்
August 12, 2013 at 4:45 pm
“சிறக்க” வாழ்த்துக்கள்….