ஒரு சட்னியின் கதை
Posted February 18, 2014
on:- In: (Auto)Biography | Bangalore | Food | Humor | Men | Uncategorized
- 8 Comments
’கொஞ்சம் பிஸியா இருக்கேன், ஒரு சின்ன ஹெல்ப் பண்றியா?’
‘என்னது?’
‘தேங்கா துருவி வெச்சுட்டேன், சட்டுன்னு ஒரு சட்னி செஞ்சுடறியா?’
‘எனக்கு சட்னி செய்யத் தெரியாதே!’
‘பரவால்ல, நான் இந்தப் பக்கம் பொங்கல் செஞ்சுகிட்டே உனக்கு ஒவ்வொரு ஸ்டெப்பாச் சொல்றேன், நீ அதை அப்படியே ஃபாலோ பண்ணு, அது போதும்!’
‘சரி, சொல்லு!’
‘மொதல்ல சின்ன மிக்ஸியை எடுத்துக்கோ!’
‘ஆச்சு!’
‘அதுல தேங்காய்த் துருவலைப் போடு!’
‘அப்புறம்?’
‘அந்த ப்ளூ டப்பால பொட்டுக்கடலை இருக்கு, அதை ஒரு கப் போடு!’
’அதுக்கப்புறம்?’
’மூணாவது டப்பால கொஞ்சம் பெருங்காயம். அதுல ஒரு சிட்டிகை.’
‘இது பெருங்காயம் மாதிரியே இல்லையே!’
’பொடி செஞ்சு வெச்சிருக்கேன், கேள்வி கேட்காம சொன்னதைச் செய்!’
‘ஆச்சு, அடுத்து?’
‘பச்சை மிளகாய் ஒண்ணைக் கழுவிக் கிள்ளிப் போடு!’
‘செஞ்சுட்டேன், இன்னும் இருக்கா?’
‘அரை ஸ்பூன் உப்புப் போட்டு அரைக்கவேண்டியதுதான்!’
‘தண்ணி?’
’அதை அப்புறமா ஊத்திக்கலாம், முதல்ல இதை அரை!’
ர்ர்ர்ர்ர்ர்ர்… டடக்!
’என்னது சத்தம்?’
‘எனக்குத் தெரியலையே!’
’மிக்ஸியைத் திற, பார்க்கலாம்!…. ஆ!’
‘என்னாச்சு?’
‘சட்னிக்கு நடுவுல ஒரு பிளாஸ்டிக் ஸ்பூன் உடைஞ்சு கிடக்கு, இது எப்படி இங்கே வந்தது?’
‘தெரியலையே!’
‘நீ மிக்ஸி ஜாரை எடுக்கும்போது அது காலியாதானே இருந்தது? உள்ளே ஒரு ஸ்பூன் கிடந்ததா?’
‘தெரியலையே!’
‘அடேய், அதைக்கூடப் பார்க்காமலா நான் சொன்னதையெல்லாம் வரிசையா எடுத்துப் போட்டே?’
‘அதெல்லாம் சொன்னே, சரி, மிக்ஸிக்குள்ளே ஸ்பூன் இருக்கான்னு பாருன்னு நீ சொல்லலையே!’
‘!@#@$!#$*&$^@&!^@’
***
என். சொக்கன் …
18 02 2014
8 Responses to "ஒரு சட்னியின் கதை"

அப்பா, ‘மூட் அவுட்’ ஆகி இருந்த என்னை சிரிக்க வெச்சு நல்லது செஞ்ச நீங்க நீடூழி வாழ்க.


I am in restaurant and couldn’t control, laugh out 🙂


எல்லாத்திலும் நீங்க லேட். நான் 4 பாராவிலேயெ திட்டு வாங்கிக்கிட்டு லாப் டாப் தேடிக்கிட்டு போயிட்டிருப்பேன்.
இவ்வளவு செய்துட்டு திட்டும் வாங்குனுமா ?


ஹா… ஹா… எல்லாத்தையும் சொல்லுனுமில்லே…!

1 | amas32
February 18, 2014 at 9:32 pm
:-))))
made my day!
amas32