மனம் போன போக்கில்

ரசிகரே, சிந்தியும்

Posted on: March 20, 2015

ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன், நான் போன ஜெனரேஷன், சச்சின் பிரியன், அவரோடு கிரிக்கெட் ஆர்வம் தீர்ந்துவிட்டது, ஆகவே, இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் எனக்கு ஆர்வமில்லை. அவ்வப்போது ஸ்கோர் பார்க்கிறேன், ஒருவேளை இந்தியா வென்றால் அரை இஞ்ச் கூடுதலாக மகிழ்வேன். அவ்வளவே.

ஆகவே, இது உலகக் கோப்பைபற்றிய பதிவு அல்ல. அதை நாம் எப்படிப் பார்க்கத் தொடங்கிவிட்டோம் என்பதுபற்றிய பதிவு.

இந்தப் போட்டி தொடங்கியதிலிருந்து, இந்தியாவுடன் மோதும் அணி எதுவானாலும் அதை மிகக் கேவலமாக விமர்சித்தே பல பதிவுகள் வந்துகொண்டிருந்தன. அதிலும் அந்த அணியில் யாராவது கொஞ்சம் தன்னம்பிக்கையோடு ஒரு வார்த்தை பேசிவிட்டால் போச்சு, அவர்களை மகா மோசமாக மட்டம் தட்டிப் பதிவுகளும் புகைப்படங்களும் அநாகரிகமான வசனங்களும்… திறமைசாலி அணியான தென் ஆப்பிரிக்கா தொடங்கி, கத்துக்குட்டி அணிகள், சுமாரான அணிகள்வரை யாரும் இதற்கு விதிவிலக்கில்லை.

அதிலும், யாராவது நாக்கவுட் ஸ்டேஜில் வெளியேறினால் அந்தத் தோல்வியைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். ‘ஊருக்குப் பார்த்துப் போ, வழியில தடுமாறி விழுந்து பல்லை உடைச்சுக்காதே’ என்கிற ரேஞ்சுக்கு.

இந்தியா இதுவரை ஏழு போட்டிகளில் வென்றுள்ளது. ஒவ்வொரு போட்டியையும் நாம் வெல்ல வெல்ல, ரசிகர்களின் arrogance படிப்படியாக அதிகரித்துக்கொண்டே சென்றதை வெளிப்படையாகப் பார்த்தேன்.

ஒருவேளை, வெளிநாட்டு ரசிகர்களும் அந்தந்த நாட்டின் வெற்றிகளை இப்படிதான் எதிராளிமீதான ஆவேசமாகப் பார்க்கிறார்களா என்று தெரியவில்லை.

வெற்றியின்மீது கண் இருக்கவேண்டியதுதான், விளையாட்டை விளையாட்டாகப் பார்க்கும் நம் புத்தி எங்கே போனது? தோற்றவன் நாளை ஜெயிக்கமாட்டானா? அதனால் அவனுக்கிருக்கும்/ இருந்த திறமையெல்லாம் இல்லாமல் போய்விடுமா? ஓரணி வெல்லவும் பத்து அணிகள் அசிங்கப்படவும்தானா உலகக்கோப்பை?

***

என். சொக்கன் …

20 03 2015

Advertisements

3 Responses to "ரசிகரே, சிந்தியும்"

ஒரு அடி வாங்கினா சரியாப் போகும்.. ரவி சாஸ்திரிக்கு செருப்பு மாலை போட்ட ஜெனரேசனில் பிறந்துவிட்டு இந்த ஓலைப் பாம்பைப் பார்த்து அஞ்சலாமா?

இந்தப் பதிவை எழுதிச் சில நாளில் (நேற்று) இந்தியா தோல்வியடைந்தபின் நடந்தவற்றைப் பார்த்திருப்பீர்கள். குறிப்பாக கோலியின் காதலிமீது வீசப்பட்ட சேறு Proves my point.

தோற்பவனைக் கேலி செய்வது மோசமான மனோபாவம் என்று நான் சொன்னபோது பலர் கோபப்பட்டார்கள். இது வெறும் Fun என்றார்கள். ‘நாளைக்கே எங்க டீம் தோத்தாலும் இப்படிதான் கிண்டலடிப்போம்’ என்றார்கள்.

நடப்பது அதுவல்ல. இந்திய அணியில் ஒவ்வொருவரும் வக்கிரமாகத் திட்டப்படுகிறார்கள். முன்பு நாம் உலகக் கோப்பைகளில் தோற்றபோதும் இதுதான் நடந்தது.

பத்து நாடுகள் விளையாடும் இடத்தில் ஒருவர் வெல்ல, மற்ற ஒன்பது பேரும் மதிப்பிழத்தல் விளையாட்டே அல்ல. மற்ற ஒன்பது பேரின் முயற்சிகளைப் (அவர்கள் நம் அணியோ, நம்மிடம் தோற்ற பிற அணிகளோ) பாராட்டத் தெரியாவிட்டால் அவர்கள் விளையாட்டு ரசிகர்களே அல்ல. இதில் Funனோ மண்ணாங்கட்டியோ கிடையாது, தோற்பவனைப் பார்த்துச் சிரிக்கும் உள்மன வக்கிரத்தைக் காட்டுகிறது. அவ்வளவுதான்!

எதார்த்தமாக யோசித்தால், தோற்காதவர்கள் யார்? நமக்கும் தோல்வி வரும், துடைத்துக்கொண்டு எழுந்து நடப்போம், அப்போது சுற்றியிருப்பவர்கள் சிரித்தால் நமக்கு வலிக்கும், பின்னர் ஜெயித்தாலும் மன நிறைவு இருக்காது. அதனால்தான் கிரிக்கெட்டில், அரசியலில் (உதா: ராகுல் காந்தி), சினிமாவில் (உதா: அஞ்சான்) என இந்த “Fun” பூச்சில் தோற்றவர்மீது வன்மத்தைப் பெருக்கும் மனோபாவம் தவறு என்கிறேன்.

இது வெறும் கத்தி அல்ல, பிடியிலா இருமுனைக் கத்தி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 508 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 433,105 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2015
M T W T F S S
« Feb   Apr »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
%d bloggers like this: