Archive for November 2015
மறுநுழைவு
Posted by: என். சொக்கன் on: November 12, 2015
- In: Announcements | Books | Uncategorized | ViLambaram
- 3 Comments
சில கசப்பான காரணங்களால், இனி பதிப்பகங்களுக்கு நேரடிப் புத்தகங்கள் எவற்றையும் எழுதுவதில்லை என்று தீர்மானித்து இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்றன!
2014 புத்தகக் கண்காட்சிக்கு எழுதிய ஒரு நூலுக்குப்பிறகு, என் புதிய நூல்கள் எவையும் வெளியாகவில்லை, பத்திரிகைத் தொடர்களைக்கூட நான் நூலாக்க முயற்சிகளை எடுக்கவில்லை.
என்னதான் பத்திரிகைகளில் எழுதினாலும், பிற மொழிபெயர்ப்புகள், எழுத்துப்பணிகளில் ஈடுபட்டாலும், ஒரு நூலில் நம் பெயரைப் பார்க்கும் சுகம் அலாதியானது. ஆகவே, ஒருகட்டத்தில் நான் என் வைராக்கியத்தைக் குறைத்துக்கொண்டு, எழுத்து சார்ந்த மற்ற வேலைகளைப் பாதிக்காதபடி வருடத்துக்கு ஒரு புத்தகமாவது எழுதலாம் என்று தீர்மானித்தேன்.
இந்த ஆண்டு நண்பர் ம.கா.சிவஞானம் அந்த வாய்ப்பை வழங்கினார். ‘பண்டிதத்தனம் இல்லாமல், அதேசமயம் பிழை மலிந்ததாகவும் இல்லாமல் ஆங்கிலம் பேசுவதற்கான அடிப்படை விதிகளை எழுதித் தாருங்கள்’ என்றார்.
‘யாருக்கு?’ என்றேன்.
‘மாணவர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும்’ என்றார்.
கொஞ்சம் விநோதமான காம்பினேஷன்தான் 🙂 என்றாலும், எனக்கு அவர் கேட்ட அடிப்படை புரிந்தது. அதிகம் நீர்த்துவிடாதபடி எழுதியிருக்கிறேன். இன்றுமுதல் தமிழகத்தின் பெரும்பாலான புத்தகக்கடைகளில் இந்நூல் கிடைக்கும். விலை ரூ 40.
வாய்ப்பு/ தேவை இருக்கிறவர்கள் வாங்கிப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.
2016க்கு இன்னொரு சுவாரஸ்யமான நூலை எழுதத் தொடங்கியிருக்கிறேன். பார்ப்போம் 🙂
***
என். சொக்கன் …
12 11 2015