ஓர் அறிவிப்பு
Posted March 27, 2016
on:முன்குறிப்பு: இது ஒரு தனிப்பட்ட மின்னஞ்சல், ஓர் அவசியம் கருதிப் பொதுவில் வைக்கிறேன்.
பெறுநர்: திரு. மெய்யப்பன், உரிமையாளர், மதி நிலையம், சென்னை
அன்புடையீர்,
நலம். நாடலும் அதுவே.
என்னுடைய புத்தகங்கள் விற்பனை/ ராயல்டி தொடர்பாக உங்களிடமிருந்து ஒரு மிக நீண்ட மௌனத்தை நன்கு அனுபவித்தபின் எழுதும் கடிதம் இது.
கடைசியாக நாம் பேசியது எந்த நூற்றாண்டு என்று நினைவில்லை, அப்போது நான் என் புத்தகங்களின் பதிப்புரிமையை உங்களிடமிருந்து திரும்பப் பெறுவதாகச் சொன்னேன், அதற்கு நீங்கள் எனக்குச் சொன்ன பதில்:
* கைவசம் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நூல்கள் உள்ளன, அவற்றை விற்க டிசம்பர் 2015வரை நேரம் தேவை, ஆகவே அதுவரை நூல்களை வேறு யாருக்கும் தரவேண்டாம்
எனக்கு நீங்கள் செய்த பச்சைத்துரோகத்துக்குப்பிறகு, இதை நான் ஏற்கவேண்டிய அவசியமே இல்லை, எனினும் ஏற்றுக்கொண்டேன், அத்துடன் நமது ஈமெயில் நாடகம் முடிந்து மௌன நாடகம் தொடங்கியது.
இன்றுவரை உங்களிடமிருந்து எந்தத் தகவலும் எனக்கு வரவில்லை. நாம் பேசியபிறகு விற்ற புத்தகங்களின் கணக்கோ ராயல்டியோ வரவில்லை,
எனினும், நீங்கள் கேட்ட டிசம்பர் 2015 முடிந்து பல மாதங்களாகிவிட்டதால், முறைப்படி என் நூல்களின் உரிமை எனக்குத் திரும்பிவிட்டது, இனி அவற்றை நீங்கள் அச்சிடவோ விற்பனை செய்யவோ வேண்டாம் என்பதைத் தெரிவிப்பதற்காகவே இந்த மின்னஞ்சல்,
ஒருவேளை இதற்குப்பிறகும் என் நூல்கள் உங்கள் பதிப்பகத்தின்மூலம் விற்பனையில் இருப்பதாகத் தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும்,
எல்லாவற்றுக்கும் நன்றி, இனியெந்தப் பிறப்பிலும் நும்மைக் காணாத, நும் குரல் கேளாதவொரு வரத்தை எம்பெருமான் எனக்கருள்வானாக,
என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூரு.
3 Responses to "ஓர் அறிவிப்பு"

பிரச்சினை தீர வாழ்த்துக்கள்.

1 | Paramasivam
March 28, 2016 at 2:00 pm
தமிழகத்தின் பல பல பதிப்பாளர்கள் இவ்வாறு தான் உள்ளனர். அவர்களின் அரசியல் பக்க பலமும் இந்த அடாவடி தனத்திற்கு ஒரு காரணம்.