மனம் போன போக்கில்

Archive for the ‘ட்விட்டுரை’ Category

வழக்கம்போல் இன்று(ம்) ட்விட்டரில் ஒரு விளையாட்டு. நாம் நன்கு அறிந்த பழமொழிகளை சாஃப்ட்வேர் ப்ரொக்ராம்களைப்போல் எழுதினால் எப்படி இருக்கும் என்று முயன்றோம். இதில் பங்கேற்ற எங்களுக்கு செம ஜாலியாகவும், மற்றவர்களுக்கு செம கடுப்பாகவும் இருந்தது 🙂

#ProverbsAsPrograms என்ற tag உடன் நான் எழுதிய ஒரு டஜன் ட்வீட்களின் தொகுப்பு இங்கே, சும்மா படித்துப் பாருங்கள், Syntax Error எல்லாம் சுட்டிக்காட்டி Compilation Error சொல்லக்கூடாது 🙂

என்னோடு இந்த விளையாட்டில் பங்கேற்ற நண்பர்கள் அவர்களுடைய ப்ரொக்ராம்(?)களையும் இங்கே பின்னூட்டத்தில் தந்தால், வருங்காலச் சந்ததிக்குப் பயன்படும். நன்றி!

***

என். சொக்கன் …

07 01 2013

if நெஞ்சம்.isகுற்றம்Exists() {

குறுகுறுப்பு();

}

*

if மடி.isEmpty() {

பயம்.stop();

}

*

{

உப்பிட்டவர்.நினை();

}

while (true)

*

for each (கரை) {

அக்கரை.color = “பச்சை”;

}

*

If (!(பண்டம்.contains(உப்பு))) {

Throw as குப்பை;

}

*

பெருவெள்ளம் += சிறுதுளி;

*
public class தாய் {

int பாய்ச்சல்;

பாய்ச்சல் = 8;

}

public class குட்டி extends தாய் {

பாய்ச்சல் = 16;

}

*

public class நல்லமாடு {

int சூடு;

சூடு = 1;

}

public class நல்லமனுஷன் {

int சொல்;

சொல் = 1;

}

*
தளும்புதல் = IIf(குடம்.isFull(), 0, 1);

*
switch (event) {

case பந்தி:

Position += 1;

break;

case படை:

Position -=1;

break;

}

*
select *

from ஊர்கள்

where கோயில்கள் > 0

*

if குடம்.உடைத்தவர்=மாமியார் {

குடம்.material=மண்;

}

else if குடம்.உடைத்தவர்=மருமகள் {

குடம்.material=பொன்;

}

  1. nchokkan
    ஒருத்தன் காதல்வயப்படுகிறான். அவளை நினைத்து ஏக்கப் பெருமூச்சுடன் விழுந்து கிடக்கிறான். அதைப் பார்த்த இன்னொருவன் இப்படிப் பாடுகிறான்: |1
  2. nchokkan
    என்னாச்சு இவனுக்கு? இவன் தன்னோட உயிரைப் பெருமூச்சுங்கற அம்மியில வெச்சு அரைக்கறானே! |2
  3. nchokkan
    ஆனா, அம்மியில் அரைக்கப் பொருள்மட்டும் போதுமா, அது குழையறதுக்கு அப்பப்போ நீர் விடணுமே? |3
  4. nchokkan
    அதுவும் உண்டு. பெருமூச்சு எனும் அம்மி, அதுல உயிர்தான் தேங்காய், பொட்டுக்கடலை, அதை அரைக்கறதுக்கு நீர், அவளோட நினைவு / காதல் |4
  5. nchokkan
    இத்தனையும், அரை விருத்தத்தில் சொல்லிவிடுகிறான் கம்பன். சுந்தர காண்டத்தில் சொல்லப்படும் ராவணனின் காதல் அது |5
  6. nchokkan
    காவிஅம் கண்ணி (சீதை) தன்பால் கண்ணிய காதல் நீரால், ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு (ராவணன்) அரைக்கின்றான்! #கம்பேன்டா |6/6
  1. nchokkan
    இந்த ’நளவெண்பா’வில் ஒவ்வொரு பாட்டுக்குள்ளும் ஒரு அசரடிக்கும் வரியாவது இருந்துவிடுகிறது, உம்: ‘வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கி’ 1/2

  2. nchokkan
    காதல்வயப்பட்ட பொண்ணுக்கு ராத்திரி புழுக்கமா இருக்காம், ‘இரவே, நீ சூரியனை விழுங்கிட்டுப் பிறந்ததால் இப்படி வெக்கையா?’ங்கறா! 2/2
  3. nchokkan
    //நளவெண்பா// தமயந்தி உடம்பிலிருந்து வீசும் அனல் தாங்காமல், அவள் கூந்தல் பூக்களை மொய்த்துக்கொண்டிருந்த வண்டுகளின் சிறகுகள் தீய்ந்துடுதாம்!
  4. nchokkan
    //நளவெண்பா// தமயந்தி உடல் முழுக்க மன்மதன் அம்புகள் துளைத்து எரிக்க, அவள் நெருப்புக்கு நடுவே தவம் செய்வதுபோல் தெரிந்தாளாம்
  5. nchokkan
    //நளவெண்பா// ஊரே தூங்கிவிட்டது என்பதைச் சொல்வதற்கு, ‘யாழ் தாம் உள்ளுறை புகுத’ என்கிறார், யாழ்களைப் பொட்டிக்குள் வெச்சுப் பூட்டிடாங்களாம்
  6. nchokkan
    //நளவெண்பா// ‘இரவே, நீ தின்னும் இரையோ நான்?’ : தமயந்தி!
  7. nchokkan
    //நளவெண்பா// ஒரே புலம்பல்ஸா இருக்கு, ஜிவ்வுன்னு 50 பாட்டைத் தாண்டி நளன் : தமயந்தி முதலிரவுக்குப் போய்டுவோமா? :>
  8. nchokkan
    //நளதமயந்தி// முதலிரவுக் காட்சியின் முதல் பாடல், முதல் வரி ‘ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி’… என்னா வார்த்தைத் தேர்வுய்யா 😉
  9. nchokkan
    //நளவெண்பா// ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி, இருவர் எனும் தோற்றம் இன்றி, புனலுக்கே புனல் கலந்தார்ப்போல் வேலானும் காரிகையும் சேர்ந்தார்!
  10. nchokkan
    //நளவெண்பா// வல் ஓடும் : சூதாட உதவும் தாயக்கட்டைகள் வெட்கி ஓடும்படி… ம்ஹூம், சென்சார்ட், தேடிப் படிச்சுக்கோங்க 😉
  1. nchokkan
    அரசியல் கூட்டங்களின் ஆரம்பப் புள்ளியான ‘தாய்மார்களே’ என்ற வாசகம், இலக்கணப்படி தப்பு :> |1
    Sun, May 20 2012 03:13:34
  2. nchokkan
    ’பம்மார் இறுதிப் பண்டைப் பலர்பால்’ என்பது இலக்கண சூத்திரம், ‘தாய்மார்’ என்றாலே அது Pluralதான், ‘தாய்மார்களே’ அவசியமில்லை |2
    Sun, May 20 2012 03:14:03
  3. nchokkan
    இதேபோல் தம்பிமார், அண்ணன்மார், ஐயன்மார் … எல்லாம் Plural, ஐயன்மீர்கூட Pluralதான், இரண்டுக்கும் வித்தியாசம் தெரியலை |3
    Sun, May 20 2012 03:15:26
  4. nchokkan
    அபூர்வமாகச் சில சமயங்களில், Singular நபர்களை Pluralல் அழைப்பதுண்டு. மகனை ‘மிஸ்டர், இங்கே வா’ என்று அழைப்பதுபோல |4
    Sun, May 20 2012 03:16:12
  5. nchokkan
    உதாரணமாக, நளவெண்பாவில் ஒரு காட்சி தமயந்தி காட்டில் ஒரு பாம்பிடம் அகப்பட்டுக்கொள்கிறார், காப்பாற்ற ஒரு வேடன் வருகிறான் |5
    Sun, May 20 2012 03:17:31
  6. nchokkan
    அவனைப் பார்த்து, ‘ஐயன்மீர் உங்கட்கு அபயம்’ என்கிறாள் தமயந்தி |6
    Sun, May 20 2012 03:18:48
  7. nchokkan
    வந்தது ஒரு வேடன்தான், ஆனாலும் பன்மையில் ‘ஐயன்மீர்’ என அழைத்தது ஏன்? உயிர் காப்பவன் என்பதற்காக எக்ஸ்ட்ரா மரியாதை :> |6
    Sun, May 20 2012 03:19:15
  8. nchokkan
    இதுதொடர்பாக ஒரு வேடிக்கைக் கேள்வி பதில், ‘1330 பாக்கள் கொண்ட நூலைத் திருக்குறள் என்று Singularல் சொல்வது ஏன்? திருக்குறள்கள்தானே சரி?’ |7
    Sun, May 20 2012 03:20:54
  9. nchokkan
    இதற்கு சுஜாதா சொன்ன பதில், ‘திருக்குறள் கள்ளை அனுமதிப்பது இல்லை’ ;))))) |8/8
    Sun, May 20 2012 03:21:19
  10. இந்த ட்வீட்களை எழுதி இரண்டு வாரம் கழித்து, மீண்டும் ஒரு கேள்வி, மீண்டும் ஒரு தேடல், ஆனால் இந்தமுறை தெளிவான விடை கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன் … கீழே படிக்கவும்
  11. nchokkan
    இன்று காலை @elavasam ஒரு கேள்வி கேட்டார். ’மன்னன்’ ஒருமை, ‘மன்னர்’ பன்மை… இங்கே ‘மன்னர்கள்’ என்று சொல்லவேண்டியதில்லை. ஆனால் |1
    Sun, Jun 03 2012 11:20:58
  12. nchokkan
    ‘மன்னர்’ என்பது மரியாதையான ஒருமையும்கூட, இந்த இடத்தில் ‘மன்னர்கள்’, ‘தலைவர்கள்’ போன்றவை சரியா, தப்பா? |2
    Sun, Jun 03 2012 11:21:47
  13. nchokkan
    கொஞ்சம் தேடினேன், சூப்பரான ஒரு விஷயம் தெரிந்துகொண்டேன், ‘இரட்டைப் பன்மை’ (Dual Plural) என்று ஒன்று உள்ளது |3
    Sun, Jun 03 2012 11:22:27
  14. nchokkan
    ’அர்’ விகுதி = பன்மை, ‘அர்கள்’ = இரட்டைப் பன்மை, இது எழுத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிப்படையான விதி இருப்பதாகத் தெரியலை |4
    Sun, Jun 03 2012 11:23:56
  15. nchokkan
    சங்க இலக்கியத்தில் ‘அர்கள்’ விகுதி அநேகமாக எங்குமே இல்லை, Except one place in கலித்தொகை (’உலகு ஏத்தும் அரசர்கள்’) என்று அறிகிறேன் |5
    Sun, Jun 03 2012 11:24:55
  16. nchokkan
    ஒரே ஓர் இடம்தான் எனினும், கலித்தொகையில் இருப்பதால், ’அர்கள்’ விகுதி (தலைவர்கள், மன்னர்கள் etc.,) ஓகே என்று எனக்குப் படுகிறது |6/6
  1. nchokkan
    இன்று ஒரு கலீக் என்னுடன் பர்ஸனலாகப் பேச வந்தார்.கல்லூரி முடித்து சுமார் இரண்டு வருடங்களாகிறவர்,அவரை Team Leader ஆக்கப் பார்க்கிறார்கள் |1
    Tue, May 29 2012 11:30:58
  2. nchokkan
    இவருக்குத் தலைமை தாங்குவதில் ஆர்வம் இல்லை, என்னை ப்ரொக்ராமராகவே நிரந்தரமாக இருக்கவிடமாட்டீர்களா? என்றார் கெஞ்சலாக |2
    Tue, May 29 2012 11:31:30
  3. nchokkan
    ’பழைய நெனப்புடா பேராண்டி, பழைய நெனப்புடா’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன் |3
    Tue, May 29 2012 11:32:07
  4. nchokkan
    ‘நான் ப்ரொக்ராம் எழுதப் படித்திருக்கிறேன், தலைமை தாங்கப் படிக்கவில்லை, வேணும்னா 2வருஷம் லீவ் தாங்க,MBA படிச்சுட்டு வர்றேன்’ என்கிறார் |4
    Tue, May 29 2012 11:33:22
  5. nchokkan
    ’எம்பிஏவுக்கும் தலைமை தாங்குவதற்கும் சம்மந்தமே இல்லை தம்பி, இது உனக்குப் பிடிக்காட்டி உன் மேனேஜர்கிட்ட சொல்லு’ என்றேன், பயப்படுகிறார் |5
    Tue, May 29 2012 11:33:59
  6. nchokkan
    ’காலமெல்லாம் ப்ரொக்ராம் எழுதிகிட்டே இருந்துடலாம்ன்னு நினைச்சேன்,Just because I am senior to someone, doesn’t mean I have to lead them’ |6
    Tue, May 29 2012 11:34:58
  7. nchokkan
    ’நான் எதிர்பார்க்கறது தப்பா? இங்கே நாலஞ்சு வருஷம் குப்பை கொட்டின எல்லாரும், பிடிக்காட்டியும், திறமை இல்லாட்டியும் மேனேஜராகியே தீரணுமா?’|7
    Tue, May 29 2012 11:36:11
  8. nchokkan
    அப்புறம், ப்ராக்டிகல் பிரச்னைக்கு வருகிறார், ’ஒருவேளை நான் இப்போ இதை மறுத்துட்டா, என் சம்பளம் குறைஞ்சுடுமோ? காசுக்காக மேனேஜணுமா?’ |8
    Tue, May 29 2012 11:37:10
  9. nchokkan
    இப்படி வரிசையாகப் பல கவலைகளைச் சொன்னார், 24 வயதில் 60 வயதுவரை கற்பனை செய்துவைத்திருக்கிறார், அதுசார்ந்த பல குழப்பங்கள் |9
    Tue, May 29 2012 11:38:29
  10. nchokkan
    நான் எல்லாம் கேட்டுக்கொண்டேன். அவர் கேள்விகளில் நியாயம் உண்டு, அதேசமயம், தன் உரிமைகளை அறியாமலிருக்கிறார், கொஞ்சம் வழிகாட்டினேன் |10
    Tue, May 29 2012 11:40:34
  11. nchokkan
    அதற்குமேல் நான் பேசுவது தகாது. அவர் மேனேஜருக்கும் எனக்கும் அரசியலாகும். ‘மகனே, உன் சமர்த்து, போய் HRரிடம் பேசு’ என்று அனுப்பிவிட்டேன் |11
    Tue, May 29 2012 11:41:19
  12. nchokkan
    ஆனால் அப்போதிலிருந்து அவர் கேட்ட கேள்விகளின் நினைப்பாகவே இருக்கிறது.இந்த IT துறை உருவாக்கிய விருப்பற்ற, அரைகுறை மேனேஜர்கள்தான் எத்தனை!|12
    Tue, May 29 2012 11:42:08
  13. nchokkan
    எனக்குத் தெரிந்து பலர் இதை மறுப்பதில்லை, பயம் காரணமில்லை, எல்லாரும் இதையே செய்வதால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்கிற பயம் |13
    Tue, May 29 2012 11:43:44
  14. nchokkan
    எனக்கு யாரையும் மேய்க்கத் தெரியாது என்று சொல்வதில் என்ன வெட்கம்? தன்னை ஒழுங்காக மேய்க்கத் தெரிந்தாலே அது பெரும்திறமை அல்லவா? |14
    Tue, May 29 2012 11:44:56
  15. nchokkan
    ஐடி துறையில் இணைந்து 18 மாதம் கடந்த அனைவருக்கும் இதுகுறித்து ஒரு தெளிவான Counseling நடத்தினால் நன்றாயிருக்கும், யார் செய்வார்கள்? |15/15
  1. nchokkan
    சினிமாவில் ஒரு கதாநாயகனைப் பெரிய ஆள் என்று காட்சிப்படுத்தவேண்டுமென்றால், அவனோடு மோதும் வில்லன் பெரிய பலசாலி என்று காட்டவேண்டும் |1
    Wed, May 23 2012 00:18:05
  2. nchokkan
    அவன் நாலு பேரைப் போட்டுத் துவைப்பதுபோல் காட்சி செய்து, பின்னர் அந்த வில்லனை இந்த ஹீரோ துவைத்தால்தான் ‘நச்’ன்னு இருக்கும் |2
    Wed, May 23 2012 00:18:39
  3. nchokkan
    இதே டெக்னிக்கைக் கவிஞர்களும் நிறைய பயன்படுத்துவார்கள்.ராமனுடன் மோதும் ஒவ்வொரு அரக்கனையும் ‘வஞ்சனையில்லாமல் வர்ணிப்பது’ கம்பர் பழக்கம் |3
    Wed, May 23 2012 00:19:28
  4. nchokkan
    இன்றைக்குப் படித்த உதாரணம், ஆரணிய காண்டத்தில் வரும் கவந்தன். இவனுக்குத் தலை இல்லை வயிற்றுக்கு நடுவில் தலை, விநோதமான உருவம் |4
    Wed, May 23 2012 00:20:12
  5. nchokkan
    தலை இல்லாத அரக்கனைப் பொருத்தமா வர்ணிக்கணுமில்லையா? ‘மேக்கு உயர் கொடுமுடி இழந்த மேரு நேர்’ என்கிறார் கம்பர் |5
    Wed, May 23 2012 00:20:44
  6. nchokkan
    மேக்கு உயர் கொடுமுடி என்றால், மிக உயர்ந்த சிகரங்கள், அதாவது சிகரங்களை இழந்த மலைபோல கவந்தன் இருந்தானாம் |6
    Wed, May 23 2012 00:21:29
  7. nchokkan
    இந்த வரியைப் படித்தவுடன், எனக்கு ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ என்ற பாட்டுதான் காதுக்குள் கேட்டது. காரணம், ‘கொடுமுடி’ என்ற வார்த்தை |7
    Wed, May 23 2012 00:21:57
  8. nchokkan
    KB சுந்தராம்பாள் என்பதில் உள்ள K = கொடுமுடி, ஈரோடு அருகில் உள்ள ஊர், அங்கே பிறந்த அவருக்குக் ‘கொடுமுடி கோகிலம்’ என்று பட்டம் உண்டு |8
    Wed, May 23 2012 00:22:37
  9. nchokkan
    அந்தக் கொடுமுடிக்கும் இங்கே கம்பர் சொல்லும் கொடுமுடிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? கொஞ்சம் தேடினேன்,செம சுவாரஸ்யமான கதை சிக்கியது |9
    Wed, May 23 2012 00:23:16
  10. nchokkan
    அந்தக் காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் போட்டி, ‘நீ பலசாலியா? நான் பலசாலியா? பார்த்துவிடலாம்!’ |10
    Wed, May 23 2012 00:23:47
  11. nchokkan
    போட்டி இதுதான் : மேரு மலையை ஆதிசேஷன் பிடித்துக்கொள்ளவேண்டியது, வாயுதேவன் அதை ஊதித் தகர்க்கவேண்டியது, யார் ஜெயிப்பார்கள்? |11
    Wed, May 23 2012 00:24:22
  12. nchokkan
    மேரு மலையில் 1000 சிகரங்கள் உண்டாம். அவற்றை ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் பிடித்துக்கொள்ள, மிஸ்டர் வாயு ஊதுறார், ஊதுறார்… |12
    Wed, May 23 2012 00:25:01
  13. nchokkan
    ரொம்ப நேரம் ஊதியபின், மேருமலையில் இருந்த சில சிகரங்கள்மட்டும் பிய்ந்து சென்று தென் இந்தியாவில் விழுந்துவிட்டனவாம் |13
    Wed, May 23 2012 00:25:58
  14. nchokkan
    அப்படிப் பிய்ந்தவை நான்கு சிகரங்கள் என்கிறார்கள், ஐந்து சிகரங்கள் என்றும் சொல்கிறார்கள் |14
    Wed, May 23 2012 00:26:18
  15. nchokkan
    அப்படி விழுந்த சிகரங்களில் ஒன்றுதான், கொடுமுடி (மற்றவை: திருவண்ணாமலை, ரத்தினகிரி, ஈங்கோய் மலை, பொதிகை மலை) |15
    Wed, May 23 2012 00:27:44
  16. nchokkan
    தமிழகத்தில் உள்ள ஊர்ப் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் இதுமாதிரி சுவையான கதைகள் இருக்கும்போல. தேடணும்! |16/16ற்
  1. nchokkan
    இன்றைக்குக் கம்பன் காலை. முனிவரோடு வீதியில் நடந்த ராமனை சீதைமட்டுமா பார்த்தாள்? பலபேர் ஜொள்ளு,கம்பர் அதை அட்டகாசமாகப் பதிவு செய்கிறார் |1
    Mon, Feb 20 2012 22:50:52
  2. nchokkan
    ’இத்தனை பெண்களின் விழிகளெல்லாம் பட்டுப்பட்டுதான் ராமன் தேகம் கருத்துவிட்டதா? அல்லது அவனது கரிய நிறம் அவர்கள் கண்களில் ஒட்டிக்கொண்டதா? |2
    Mon, Feb 20 2012 22:51:50
  3. nchokkan
    இன்னொரு பாட்டில், பெண் ஒருத்தி தன் தோழியை அழைக்கிறாள், ‘என்னை அப்படியே கைத்தாங்கலாகப் படுக்கைக்குக் கொண்டுபோ’ என்கிறாள் |3
    Mon, Feb 20 2012 22:52:19
  4. nchokkan
    ’ஏண்டி? உனக்குக் கண் தெரியாதா?’ என்கிறாள் தோழி. ‘இல்லை, நான் என் கண்களை மூடிக்கொண்டுவிட்டேன், இனி திறக்கமாட்டேன்’ என்கிறாள் இவள் |4
    Mon, Feb 20 2012 22:52:53
  5. nchokkan
    ’ஏன் திறக்கமாட்டாய்?’ என்று விசாரிக்கிறாள் தோழி |5
    Mon, Feb 20 2012 22:53:12
  6. nchokkan
    ’ராமனைப் பார்த்தேன், அவன் என்னை விட்டுத் தப்பித்துப் போகமுடியாதபடி கண்களுக்குள் சிறை செய்துவிட்டேன்’ என்று பதில் வருகிறது |6
    Mon, Feb 20 2012 22:53:41
  7. nchokkan
    இன்னொரு பெண்ணின் புலம்பல், ‘ராமனும் தசரதனும் வாழும் தேசத்தில் ஒருவன் இந்த அப்பாவிப் பெண்ணைத் தாக்குகிறான், நியாயமா?’ |7
    Mon, Feb 20 2012 22:54:33
  8. nchokkan
    அப்பாவிப் பெண்ணைத் தாக்கிய அந்த ‘ஒருவன்’, மன்மதன். ராமனைப் பார்த்த அவள்மேல் மெல்லிய மேனி என்றும் பார்க்காமல் மலர் அம்பு விடுகிறானாம் |8
    Mon, Feb 20 2012 22:55:17
  9. nchokkan
    இன்னொருத்தி ‘இத்தனை பெரிய இளவரசன் ராமன், இவன் ஏன் வீதியில் தனி ஆளாக நடந்து வருகிறான்?’ என்கிறாள் |9
    Mon, Feb 20 2012 22:56:13
  10. nchokkan
    ’என்னடி பேத்தல் இது? ராமனோடு முனிவர் வர்றார், லட்சுமணன் வர்றான், நீ என்னடான்னா தனியா வர்றான்னு சொல்றியே?’ |10
    Mon, Feb 20 2012 22:56:47
  11. nchokkan
    ’அவங்களையெல்லாம் யார் பார்த்தாங்க? என் கண்ணுக்கு ராமன்மட்டும்தான் தெரிஞ்சான்’ என்கிறாள் இந்தப் பெண் |11
    Mon, Feb 20 2012 22:57:14
  12. nchokkan
    ராமனைப் பார்த்தவர்களும், முழுக்கப் பார்க்கலையாம், ’தோள் கண்டார், தோளே கண்டார்’ பாடல் எல்லாருக்கும் தெரியும், அதில் டாப் கடைசி வரி |12
    Mon, Feb 20 2012 22:57:48
  13. nchokkan
    எல்லாரும் ஒரு கடவுளைப் பார்த்துவிட்டு அவர்மட்டுமே உண்மை என்று நினைக்கிறார்கள், நிஜமான முழுக் கடவுளைப் பார்த்தவர்கள் யாருமில்லை |12a
    Mon, Feb 20 2012 22:58:38
  14. nchokkan
    ’ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்’ என்று முடிக்கிறார் கம்பர். நாம் யானை கண்ட குருடர்களை ஒப்பிடலாம் |14
    Mon, Feb 20 2012 22:59:30
  15. nchokkan
    இன்னொருத்தி ‘சிபிச் சக்கரவர்த்தி வம்சத்தில் வந்தவன்தானே இந்த ராமன், குலப் பெருமையில் கொஞ்சமும் இவனுக்கு இல்லையே’ என்று இகழ்கிறாள் |15
    Mon, Feb 20 2012 23:00:26
  16. nchokkan
    ஏன்? ராமனுக்கு என்ன குறை? ஏன் இகழணும்? |16
    Mon, Feb 20 2012 23:00:59
  17. nchokkan
    சிபி புறாவுக்காகத் தன் உயிரைக் கொடுத்தான்,ஆனால் இந்த ராமன் எங்களிடம் இருக்கும் உயிரைப் பறித்துக்கொள்கிறான், திருப்பித் தர மறுக்கிறான் |17
    Mon, Feb 20 2012 23:01:35
  18. nchokkan
    ’நயந்தார் உய்யத் தங்கள் இன்னுயிரும் கொடுத்தார் தமர், எங்கள் இன்னுயிர் எங்களுக்கு ஈகல் இவன்’ 🙂 |18/18
    Mon, Feb 20 2012 23:02:15
  19. nchokkan
    காலை நேரத்தில் கம்ப ராமாயணத்தில் எந்தப் பக்கத்தையும் பிரித்துப் படிக்க ஆரம்பிக்கக்கூடாது. ஆஃபீசுக்கு லீவ் போடத் தோன்றும்!
  1. nchokkan
    ஒரு வீட்டில் கி.வா.ஜ.க்கு விருந்து. முதலில் மாம்பழம், பின் சாப்பாடு, தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள மாவடு போட்டார்கள் |1
    Sat, May 05 2012 03:44:20
  2. nchokkan
    அதுபற்றி அவர் பாடிய வெண்பாவின் கடைசி வரிக் குறும்பு: ‘கனிக்கப்புறம் வருமாங் காய்’ (வரும் மாங்காய், வருமாம் காய் 🙂 |2
    Sat, May 05 2012 03:44:49
  3. nchokkan
    மன்னிக்க, அது ‘கனிக்கப்புறம்’ அல்ல ‘கனிக்குப்பின்’ |3
    Sat, May 05 2012 03:45:54
  4. nchokkan
    கிவாஜ கலந்துகொண்ட ஒரு கவியரங்கம். கவிஞர்களுக்குப் பொன்னாடை போர்த்தினார்கள், ‘மாலை இல்லையா?’ என்று கேட்டார் ஒருவர் |4
    Sat, May 05 2012 03:47:10
  5. nchokkan
    ’கவிகளுக்கு மாலை போட்டால் என்ன ஆகும் என்று தெரியாதா?’ என்று குறும்பாகக் கேட்டார் கிவாஜ (கவி = குரங்கு) |5
    Sat, May 05 2012 03:47:42
  6. nchokkan
    கிவாஜவைப் பேச அழைத்த ஒருவர் ‘என் கவனிப்பில் குற்றம் குறை இருந்தால் மன்னிக்க’ என்றார், இவர் பதிலுக்கு ‘குற்றம் குறைதான்’ என்றார் |6
    Sat, May 05 2012 03:48:59
  7. nchokkan
    ’தென்னைக்கும் மனிதனுக்கும் நேர் விரோதம்’ என்பார் கிவாஜ. காரணம், தென்னைக்கு இளமையில் வழுக்கை, மனிதனுக்கு முதுமையில் |7
    Sat, May 05 2012 03:49:41
  8. nchokkan
    கிவாஜ பெயரைச் சிலர் ‘ஜெகந்நாதன்’ என்று எழுதுவார்கள். ‘எனக்குக் கொம்பு இல்லை’ என்று நாசூக்காகத் திருத்துவார் |8
    Sat, May 05 2012 03:50:59
  9. nchokkan
    தன் டிரைவர்களுக்குக் கிவாஜ சூட்டிய செல்லப் பெயர்கள் ‘பார்த்தசாரதி’ (நான் பார்த்த சாரதி),’சக்கரபாணி’ (ஸ்டீயரிங் வீல் பிடித்திருப்பதால்) |9
    Sat, May 05 2012 03:53:04
  10. nchokkan
    ’ரயில் ரொம்ப சத்தம் போடுகிறது’ என்றார் நண்பர். ‘ஆமாம், இந்த ரயிலில் சத்தம் அதிகம்தான்’ என்றார் கிவாஜ (சத்தம் = sound / ticket price) |10
    Sat, May 05 2012 03:54:37
  11. nchokkan
    ’முருகன் தேவர்கள் படைக்குத் தலைவனாக, தேவ சேனாபதியாக இருந்தான், பின் தேவயானியை மணந்து தேவசேனா பதி ஆனான்’ : கிவாஜ |11
    Sat, May 05 2012 03:55:52
  12. nchokkan
    கணவன் மனைவி ஒருவரை நமஸ்கரிக்கும்போது, ஆணுக்கு வலப்புறம் பெண் நிற்பது ஏன்? காரணம் ‘பெண்ணுக்கு ஆண் இடம் தரமாட்டான்’ : கிவாஜ |12
    Sat, May 05 2012 03:56:56
  13. nchokkan
    ஒருவர் கிவாஜவுக்கு முந்திரிப் பழம் தந்தார்.‘முழுப்பழம் இல்லையா, முந்திரிப் பழம்தானா?’ என்று சிரித்தார் இவர். முந்திரி=1/32 in tamil |13
    Sat, May 05 2012 03:58:48
  14. nchokkan
    நண்பர் மகள் அவருக்கு மாதுளம்பழம் கொடுத்தார். ‘இந்த மாது உளங்கனிந்து கொடுத்த மாதுளங்கனி ரொம்ப இனிக்கிறது’ என்றார் கிவாஜ |14
    Sat, May 05 2012 03:59:34
  15. nchokkan
    கிவாஜ குள்ளம். அவரை ஒருவர் அகத்தியர் என்றார். ‘ஆமாம், நானும் கும்பத்தில்தான் பிறந்தேன்’ என்றார் இவர் கும்பம் = குடம் / ஒருவகை ராசி |15
    Sat, May 05 2012 04:01:02
  16. nchokkan
    முந்தைய 15 ட்வீட்களில் வந்த துணுக்குகள் அனைத்தும், ’சிரிக்க வைக்கிறார் கிவாஜ’ புத்தகத்திலிருந்து. அல்லயன்ஸ் பதிப்பகம், விலை ரூ 35/- |16
    Sat, May 05 2012 04:01:54
  17. nchokkan
    பாதிக்குப் பாதி அருமையான சிலேடைகள். கிவாஜ எந்நேரமும் வார்த்தைகளோடு செம ஜாலியாக விளையாடியபடி வாழ்ந்திருக்கிறார் |17
    Sat, May 05 2012 04:02:32
  18. nchokkan
    இந்தப் புத்தகத்தை இணையத்தில் இலவசமாகவும் டவுன்லோட் செய்து படிக்கலாம், Strongly recommended : http://tamilvu.org/library/nationalized/pdf/46.KI.VA.JA/SIRIKKAVAIKIRARKI.VA.JA(114).pdf |18
    Sat, May 05 2012 04:03:10
  19. nchokkan
    கிவாஜ எழுதிய நூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள், அனைத்தும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ள இங்கே : http://tamilvu.org/library/nationalized/html/naauthor-44.htm |19/19
    Sat, May 05 2012 04:04:49
  20. nchokkan
    கிவாஜ வாழ்க்கை வரலாறு : எங்க ஊர்க் காரர் 🙂 http://groups.google.com/group/minTamil/msg/6e33fa89f3f2b8dc?pli=1 |20/20
  1. nchokkan
    ராவணன் சபையை வர்ணிக்கும்போது கம்பரின் குறும்பு அபாரம், சில சமீபத்திய அரசியல் தலைவர்களை நினைவுபடுத்தக்கூடும், உதாரணமாகச் சிலது |1
    Sun, May 13 2012 01:48:40
  2. nchokkan
    ராவணனோட கால் கழல் தங்கம் இல்லை, ஆனா ஜொலிக்கும், ஏன்?அவன் கால்ல விழற மந்திரிகள் தலைக்கிரீடத்திலேர்ந்து டெய்லி அங்கே தங்கம் ஒட்டிஒட்டி.. |2
    Sun, May 13 2012 01:49:59
  3. nchokkan
    ராவணன் எப்ப நம்ம பக்கம் திரும்புவானோ தெரியாது, எதுக்கும் இருக்கட்டும்ன்னு மந்திரிமார்கள் எப்பவும் தலைல கை வெச்சுக் கும்பிட்டபடி… |2
    Sun, May 13 2012 01:50:22
  4. nchokkan
    ராவணன் ‘அந்த ஃபேனைப் போடு’ன்னு பணிப்பெண்கிட்ட சொன்னா, தங்கள்கிட்டே சொன்னதா நினைச்சு அமைச்சர்கள் எல்லாம் போட்டி போட்டுகிட்டு ஓடி… |4
    Sun, May 13 2012 01:51:18
  5. nchokkan
    ராவணன் யார்ட்டயாவது தணிஞ்ச குரல்ல பேசினாப் போச்சு, மத்த எல்லாரும் அவன் தங்களைப்பத்திதான் பேசறானோன்னு பயந்து நடுங்குவாங்களாம்… |5
    Sun, May 13 2012 01:51:52
  6. nchokkan
    சத்தியமா இதெல்லாம் பல நூறு வருஷங்களுக்கு முன்னால் எழுதப்பட்டது, நம்பணும் :> #கம்பன்டா |6/6
  1. nchokkan
    ராவணனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா (http://storify.com/nchokkan/-5) கம்பீரத்திலிருந்து சடாரென்று ட்ராக் மாறுகிறான் ராவணன், காரணம் சூர்ப்பணகை |1
    Mon, May 14 2012 22:32:05
  2. nchokkan
    சீதையின் அழகை அவள் புகழோ புகழென்று புகழ்ந்து தள்ள … (இவளைப் பற்றி உன்னிடம் சொன்னதால், உன் பெண்டாட்டிமார்களுக்கு நான் விரோதி) |2
    Mon, May 14 2012 22:32:51
  3. nchokkan
    ராவணன் காதல்வயப்படுகிறான். உடம்பெல்லாம் அனல் கொதிக்கிறது. படுக்கை நோகிறது (கருகுகிறது), காற்று வாங்கலாம் என்று சோலைக்குப் போகிறான் |3
    Mon, May 14 2012 22:33:26
  4. nchokkan
    பின்பனிக்காலம், ஆனால் இவன் உடம்பு கொதிக்கிறது,‘என்னடா வெதர் இது? Change This’ என்கிறான், இயற்கை பயந்து வேனிற்காலத்துக்கு switch ஆகிறது |4
    Mon, May 14 2012 22:34:43
  5. nchokkan
    ’ம்ஹூம், இது சரிப்படாது, எனக்குக் குளிர் காலம் வேணும்’ என்கிறான் ராவணன். உடனே Winter தொடங்கிவிடுகிறது :> |5
    Mon, May 14 2012 22:35:11
  6. nchokkan
    ’இது குளிர்காலமாடா? கொதிக்குது, இதுக்குக் கோடைகாலமே பரவாயில்லையே’ என்கிறான் ராவணன். என்ன செய்வது என்று புரியாமல் திகைக்கிறது இயற்கை |6
    Mon, May 14 2012 22:35:51
  7. nchokkan
    ’எனக்கு எந்தக் காலமும் வேணாம், Cancel All’ என்கிறான், எல்லாக் காலங்களும் பயந்து ஓடிவிடுகின்றன :))) |7
    Mon, May 14 2012 22:36:34
  8. nchokkan
    ’சீதையை நினைச்சு உடம்பு ரொம்ப கொதிக்குது, கொஞ்சம் இதமா ஏதாச்சும் வேணும், நிலவைக் கொண்டு வா, கட்டிலில் கட்டி வை’ என்கிறான் ராவணன் |8
    Mon, May 14 2012 22:37:08
  9. nchokkan
    அப்போது நிலா அந்தப் பக்கமே இல்லை, ராவணனுக்குப் பயந்து எங்கோ ஒளிந்துகொண்டிருக்கிறது, சேவகர்கள் ஓடிப்போய் அதை அழைக்கிறார்கள் |9
    Mon, May 14 2012 22:37:41
  10. nchokkan
    முன்பு இந்த நிலாவிடம் ராவணன் ஏதோ வம்பு செய்திருக்கிறான். ஆகவே நிலாவுக்கு அவன்மீது கடுப்பு, ஆனால் அதை வெளிக்காட்டமுடியாத நிலைமை |10
    Mon, May 14 2012 22:38:15
  11. nchokkan
    ஆகவே, இப்போது ‘நல்ல சான்ஸ்’ என்று முடிவு செய்கிறது நிலா. காதல் தாபத்தில் இருக்கும் அவன்மீது பனியைப் பொழிந்து இன்னும் வேகவைக்கிறது |11
    Mon, May 14 2012 22:38:55
  12. nchokkan
    ராவணன் கடுப்பாகிறான், ‘டேய் அப்ரெண்டிசுகளா, நிலாவைக் கூட்டிவரச் சொன்னா மறந்துபோய் சூரியனை இழுத்துகிட்டு வந்துட்டீங்களேடா’ என்கிறான் |12
    Mon, May 14 2012 22:39:36
  13. nchokkan
    வேலைக்காரர்கள் நடுங்கிப்போகிறார்கள், ‘ஐயா, நாங்க உங்க பேச்சை மீறுவோமா? இது நிலாதான், நம்புங்க’ என்கிறார்கள் |13
    Mon, May 14 2012 22:40:46
  14. nchokkan
    ராவணன் நம்பாமல் பார்க்கிறான், ‘ஏய் நிலா, உனக்கு என்னாச்சு? என்னைமாதிரி எவமேலயோ காதல்வயப்பட்டுப் புத்தி மாறிட்டியா?’ என்கிறான் :> |14
    Mon, May 14 2012 22:41:28
  15. nchokkan
    ’எனக்குத் தெரியும், நீ சீதையோட முக அழகுக்கு முன்னாடி தோத்துப்போய்ட்டே, அதான் உனக்குக் கடுப்பு’ என்று நிலாவிடம் சொல்கிறான் ராவணன் |15
    Mon, May 14 2012 22:43:55
  16. nchokkan
    இதில் காமெடி என்னவென்றால், ராவணன் சீதையைப் பார்த்ததே கிடையாது, சூர்ப்பணகையின் நேர்முக வர்ணனை effect :> |16
    Mon, May 14 2012 22:44:31
  17. nchokkan
    நடுவில் ஒரு பாட்டு, ‘சீதை ராவணனின் மனத்தில் கலந்துவிட்டாள், அவன் எப்படி அவளை மறப்பான்? அதற்கு இன்னொரு மனமா இருக்கு?’ என்கிறார் கம்பர் |17
    Mon, May 14 2012 22:45:46
  18. nchokkan
    இதை ’இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்டேன், நினைத்து வாழ ஒன்று, மறந்து வாழ ஒன்று’ என்று அட்டகாசமாக எளிமைப்படுத்தினார் கவியரசர் |18
    Mon, May 14 2012 22:46:23
  19. nchokkan
    பார்க்காத ஒரு பெண்ணை நினைத்து ராவணன் இந்தப் பாடு படுகிறான் என்றால், சூர்ப்பணகையின் சொல்திறனை வியக்கவேண்டும், அவள் செம intelligent |19
    Mon, May 14 2012 22:47:08
  20. nchokkan
    ராமன், லட்சுமணன், கரன், இப்போது ராவணன் என்று வரிசையாக ஒவ்வொருவரிடமும் அவள் பயன்படுத்தும் ‘தூண்டில்’கள் சைக்காலஜி தெரிந்தவை |20
    Mon, May 14 2012 22:47:43
  21. nchokkan
    ஒரு வில்லி பாத்திரத்தைக்கூட வெறுக்கமுடியாமல் ரசிக்கும்படி காட்சிப்படுத்துவது சாதாரண விஷயமில்லை #கம்பன்டா |21/21

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,749 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2023
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031