கிண்டில் சிறுகதைகள்
கிண்டிலில் கிடைக்கும் என். சொக்கனுடைய சிறுகதைகள்
சாபர்மதி ஆசிரம வாசலில் ஓர் ஏமாற்றுத்தனத்தைச் சந்தித்தேன்.
ஏமாற்றுக்காரர்கள் நிறைந்த உலகம்தான் இது. என்றாலும், புனிதமான காந்தி ஆசிரமத்தின் வாசலில் ஒருவர் இப்படியொரு திருட்டுத்தனத்தைச் செய்யலாமா? அதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.
ஆனால், அவர் மெய்யாகவே திருடர்தானா? உண்மையில் கள்ளத்தனம் மண்டியிருப்பது யார் மனத்தில்?
வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டால், அதில் சிலரைமட்டும் தேர்ந்தெடுப்பதற்காக வடிகட்டும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் வடிகட்டப்பட்டு வெளியாகிறவர்களுக்குமட்டும்தான் அடுத்தகட்டச் சவால்களும் வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன.
ஆனால், அந்த வடிகட்டிகள் சரியானவைதானா? வடிகட்டப்படாமல் தங்கி நிற்கிற எல்லாரும் அசுத்தங்கள்தானா? வடிகட்டித் தடைகளைக் கடக்கவியலாமல் திகைத்துநிற்கும் ஒரு பெண்ணின் கதை.
கிரிக்கெட்டில் பணம் வரும் என்று அதை விளையாடுகிறவர்கள் சிலர். கிரிக்கெட் விளையாடினால் மகிழ்ச்சி என்பதற்காக அதை விளையாடுகிறவர்கள்தான் பலர்.
அப்படி மகிழ்ச்சிக்காக விளையாடிக்கொண்டிருந்தவர்கள்மத்தியில் ஒரு பெண் வருகிறார். ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றியமைத்துவிடுகிறார்.
விறுவிறுப்பான நடை, நுணுக்கமான விவரிப்புகளைக் கொண்ட இந்தக் கதை, ஆனந்த விகடன் இதழில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தெரியாமல் (அல்லது தெரிந்தே) ஒரு பொய்யைச் சொல்லிவிடுகிறான் அவன். அதைச் சமாளிப்பது இத்தனைக் கஷ்டமாக இருக்கும் என்று யார் கண்டார்கள்?
இப்போது அவன் என்ன செய்யப்போகிறான்? வாழ்நாள்முழுக்கப் பொய்யோடு வாழப்போகிறானா? அல்லது, உண்மையைச் சொல்லிக் கிடைத்தற்கரிய பொக்கிஷத்தைக் கைவிடப்போகிறானா? இந்தக் குழப்பத்துக்கு என்னதான் தீர்வு?
குழந்தையின் செருப்புகளைக் காணவில்லை. தந்தையும் மகளுமாக எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. இப்போது என்ன செய்வது?
வீட்டுக்குச் சென்றால் தாயிடம் திட்டுவாங்கவேண்டுமே என்று குழந்தைக்குக் கவலை. அவளைச் செருப்பில்லாமல் வீடுவரை அழைத்துச்செல்வது எப்படி என்று தந்தைக்குக் குழப்பம். சிறிதுநேரத் தடுமாற்றத்துக்குப்பிறகு, இருவருடைய பிரச்னைக்கும் கொண்டாட்டமான தீர்வுகள் கிடைக்கின்றன. தொலைத்ததைவிட மிகுதியாகத் திரும்பப்பெறுகிறார்கள் அவர்கள்!
சில வீட்டுப் பொருட்களை வாங்குவதற்காக வெளியில் கிளம்புகிறார் முதியவர் ஒருவர். வெய்யிலும் பேருந்துக்காகக் காத்திருத்தலும் அவரை வாட்டுகின்றன. ஆனால், சக மனிதர்களுடைய வாட்டுதல்களுடன் ஒப்பிடும்போது இவையெல்லாம் ஒரு பொருட்டா?
ஆனால், ஆங்காங்கே சிக்கல்கள் இருப்பினும், அவரவர் வாழ்க்கை அவரவர்க்குக் கசப்பதில்லை; பழகிய புளிப்பு மாங்காயாகவே ருசிக்கிறது.