அக்பர் : A TwitReview By @iKaruppiah
என்.சொக்கன் எழுதிய அக்பர் படித்து முடித்தாயிற்று. படித்ததும் பக்கங்களின் எண்ணிக்கை தவறாக ப்ரிண்ட் செய்யப்பட்டுள்ளதோ என சந்தேகம் வந்துவிட்டது. அவ்வளவு சுவாரசியமாக செல்கிறது.
அக்பரைப்பற்றி ஆரம்பிக்காமல் அவர் தந்தை ஹூமாயூன் வீரதீரங்களில் ஆரம்பித்து மிக சுவாரஸ்யமாக நகர்கிறது.
விறுவிறுப்பான உரைநடையும், ஒரு சம்பவத்தைப்பற்றி சொல்லும் முன் சற்றே சிறிய முன் குறிப்பு கொடுத்தலும் ப்ளஸ் பாயிண்ட்ஸ்.
ஆனால் ராஜபுத்திரர்களில் ஒருவரான ஜோதா பாய் என்ற கதாபாத்திரம் பற்றி சொல்லாததும் சிற்சில ஓவியங்களை இணைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்குமோ?! என என்னளவில் யோசனை. மற்றபடி அசத்தல். 🙂
Leave a Reply