மனம் போன போக்கில்

ஓதி விளையாடு பாப்பா

இவ்வாண்டுமுழுக்க மாதம் 2 என 24 சிறுவர் நூல்களை மின்பதிப்பாக வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இவை ‘ஓதி விளையாடு பாப்பா’ என்ற பொதுத் தலைப்பில் வெளியாகும்.

இந்தக் கதைகள் அனைத்தும் பிரத்யேகமாக வரையப்பட்ட படங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும். ஆக, மாதம் 2 + 2 = 4 சிறுவர் கதை நூல்கள். மாதாமாதம் செய்ய இயலாவிட்டாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளியிட்டு டிசம்பருக்குள் 24 என்ற இலக்கை எட்டிவிட உத்தேசம், இறைவன் துணையிருப்பான்.

இதை ஏன் செய்கிறேன்?

இணையத்தில் மின்புத்தகம் என்ற வடிவம் எனக்கு மிகவும் வசீகரமாக இருக்கிறது. ஆனால் தமிழில் இது எப்படி வேலை செய்யும் என்று தெரியவில்லை. ஒரு முயற்சியாக, இவ்வாண்டு சில மணி நேரங்களையும் சில ஆயிரம் ரூபாய்களையும் (ஓவியங்களுக்காக) இதில் முதலீடு செய்து பார்க்கவுள்ளேன்.

முக்கியமாக, மாதம் இரண்டு குழந்தைக் கதைகள் எழுத இதுவும் ஒரு சாக்கு. மகாமோசமான ஒப்பீடு என்றாலும், பெப்ஸி, கொக்கக்கோலாபோல் குழந்தைப் பருவத்திலேயே புத்தகங்களால் குழந்தைகளை வளைத்துப்போட்டு அடிமைகளாக்கிவிடவேண்டும் என்பது என் எண்ணம். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து வெளியேறமாட்டார்கள், நல்ல நூல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

லௌகிக விஷயங்கள்?

படங்கள் + கதையுடன் தலா 16 பக்கங்கள் (ஒன்றிரண்டு கூடலாம், குறையலாம்) கொண்ட இந்நூல்களுக்கு தலா ரூ 20 (அல்லது $0.5) என்று விலை வைக்க எண்ணம். கூகுள் இதனை அனுமதிக்கிறது, அமேஸானில் குறைந்தபட்ச விலை $1 என்று நினைவு. (குறிப்பு: அமேஸானில் தமிழ் நூல்கள் வாரா, ஆங்கிலம்மட்டுமே)

அப்புறம் இந்தப் புத்தகங்கள் அச்சில் கிடைக்காது. இப்போதைக்கு மின்வடிவம்மட்டுமே.

உங்கள் குழந்தைகளிடம் சொல்லுங்கள்!

நூல் #1:

Dabbampoochi

டப்பாம்பூச்சி

ஒரு பட்டாம்பூச்சியும் தேனீயும் நண்பர்களாகின்றன. காட்டைச் சுற்றித் திரிகின்றன, பல விஷயங்களைத் தெரிந்துகொள்கின்றன!

வாசிப்பின் இரண்டாம் நிலையில் உள்ள (சுமார் 5 வயது முதல் 8 வயது வரையிலான) குழந்தைகளுக்கான எளிய, இனிய கதை இது. அருமையான படங்கள், கதையுடன் தொடர்புடைய அறிவியல் உண்மைகள், சுவையான விளையாட்டுகள் என அனைத்தும் உண்டு!

எழுத்து: என். சொக்கன், என். மங்கை
ஓவியங்கள்: சாம்ராட் சக்ரவர்த்தி

விலை: ரூ 20

மின்புத்தகத்தை வாங்க:

https://play.google.com/store/books/details?id=an5uBgAAQBAJ

அல்லது

http://books.google.co.in/books/about?id=an5uBgAAQBAJ&redir_esc=y

Mr Futterbly Wrapper

Mr. Futterbly

By N. Mangai & N. Chokkan

Illustrated By Samrat Chakraborthy

A butterfly meets a bee which insists on calling it a futterbly. Naturally, it makes the butterfly very upset, but the bee becomes his friend by giving him a tour of his interesting home. In turn, the butterfly explains his life-cycle to the bee.

Read on to know more about their little adventure!

This story is suitable for kids of age 5 to 8.

Purchase this story @ Google Play or Google Books or Amazon:

https://play.google.com/store/books/details?id=yfPEBgAAQBAJ

http://books.google.co.in/books/about?id=yfPEBgAAQBAJ&redir_esc=y

https://www.amazon.com/dp/B00TXMN77O

நூல் #2:

Ah!Range

ஆ!ரஞ்சு

பசு, ஹசு என்ற மாடுகள் நல்ல நண்பர்களாக இருந்தன. அவர்களைத் திருடுவதற்காக இரண்டு திருடர்கள் வந்தார்கள். அவர்களைப் பசுவும் ஹசுவும் எப்படி விரட்டி அடித்தன என்று தெரிந்துகொள்ள இந்தச் சுவாரஸ்யமான கதையைப் படியுங்கள்.

வாசிப்பின் இரண்டாம் நிலையில் உள்ள (சுமார் 5 வயது முதல் 8 வயது வரையிலான) குழந்தைகளுக்கான எளிய, இனிய கதை இது. அருமையான படங்கள், கதையுடன் தொடர்புடைய அறிவியல் உண்மைகள், சுவையான விளையாட்டுகள் என அனைத்தும் உண்டு!

‘ஓதி விளையாடு பாப்பா’ வரிசையில் இரண்டாவது நூல் இது!

எழுத்து: என். சொக்கன், என். நங்கை
ஓவியங்கள்: அனிர்பன் மஷியுர்

விலை: ரூ 20

மின்புத்தகத்தை வாங்க:

https://play.google.com/store/books/details?id=QDh0BgAAQBAJ

அல்லது

http://books.google.co.in/books/about?id=QDh0BgAAQBAJ&redir_esc=y

The Attacking Oranges

The Attacking Oranges

By N. Nangai, N. Chokkan

Illustrated By: Anirban Mashiur

Pasu and Hasu are two cows who dislike oranges. But, one fine day, they find a strange use for this wonderful fruit.

Read this story to know all about their latest adventure.

This story is suitable for kids of age 5 to 8.

Purchase this story @ Google Play or Google Books or Amazon:

https://play.google.com/store/books/details?id=tO_FBgAAQBAJ

http://books.google.co.in/books/about?id=tO_FBgAAQBAJ&redir_esc=y

http://www.amazon.com/dp/B00TXN292M

நூல் #3:

Pakirnthu ViLaiyaadu Wrapper

ப(கிர்)ந்து விளையாடு

ஒரு மான் குட்டிக்கு நான்கு பந்துகள் கிடைக்கின்றன. ஆனால், அவற்றை யாருக்கும் தராமல் தானே வைத்துக்கொள்கிறது.

அதன்பிறகு என்ன ஆனது? தெரிந்துகொள்ள இந்தக் கதையைப் படியுங்கள்.

எழுத்து: என். சொக்கன்

ஓவியங்கள்: சாம்ராட் சக்ரவர்த்தி

விலை: ரூ 20

மின்புத்தகத்தை வாங்க:

https://play.google.com/store/books/details?id=yDjYBgAAQBAJ

அல்லது

http://books.google.co.in/books/about?id=yDjYBgAAQBAJ&redir_esc=y

நூல் #4:

Kattabomman VaLarththa Kangaroo Wrapper

கட்டபொம்மன் வளர்த்த கங்காரு

பொம்மபுரி நாட்டின் அரசர் கட்டபொம்மன். அவருடைய மனைவி கட்டபொம்மி, மகன் குட்டிபொம்மன்.

கட்டபொம்மன் ஆசையாக ஒரு கங்காரு வளர்க்கிறார். திடீரென்று ஒருநாள், அந்தக் கங்காரு அவரைப் பார்த்துப் பயந்து ஓடுகிறது.

என்ன ஆச்சு? யார் செய்த சதி இது? இந்தக் கதை பதில் சொல்லும்!

எழுத்து: என். நங்கை, என். சொக்கன்

ஓவியங்கள்: சாம்ராட் சக்ரவர்த்தி

விலை: ரூ 20

மின்புத்தகத்தை வாங்க:

https://play.google.com/store/books/details?id=1TbaBgAAQBAJ

அல்லது

http://books.google.co.in/books/about?id=1TbaBgAAQBAJ&redir_esc=y

2 Responses to "ஓதி விளையாடு பாப்பா"

[…] ஓதி விளையாடு பாப்பா […]

It is wonderful attempt, it is realized to teach Tamil to children through pictures and animation via moral stories. Amazing work..I wish all success to your good thought….God bless you sir.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 531 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 594,854 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
%d bloggers like this: