மகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்
- இந்த புத்தகத்தை படிக்கும் முன் படித்தது குஷ்வந்த் சிங் எழுதிய “Train to Pakistan”, 1947இல் எல்லையில் நடைபெற்ற சம்பவங்கள் இப்பொழுது “தமிழில் படிக்கும் போது” மீண்டும் கண்முன்வந்ததுபோல் இருந்தது.
- மிக அருமையான நடை, உங்களின் குறுந்தொகையை பாடலின் விளக்கங்களை கேட்டபின் இந்த நடையை கண்டு வியக்க அவசியம் இல்லை, 🙂 சில கட்டத்தில் பரபரப்பாக தத்ரூபமாக காட்சி வரும்பொழுது இது க்ரைம் நாவல் அல்ல என நீங்களே சொல்லுவதை படித்தபின், படிப்பவர் மனம் தானாக ஒரு புன்னகை பூ கொடுத்து இதயத் துடிப்பை அமைதிபடுதிக்கொள்கிறது
- பொதுவாக நான் காந்தியின் கருத்தை மிகவும் ஆதரிப்பவன் , இருப்பினும் சில நண்பர்கள் கூறும் மற்றும் இணையத்தில் காணும் பகத் சிங், சுபாஷ் சந்திரபோஸ் போன்றோருக்கு ஆதரவாகவும் காந்திக்கு எதிராகவும் இருப்பதை பார்த்து சிறிது மனம் வருத்தப்படும் , ஆனால் இந்த புத்தகத்தில் காந்தி வன்முறையை எக்காரணம் கொண்டும் ஆதரிக்கமாட்டார் என்று தெள்ளதெளிவாக மீண்டும் மீண்டும் கூறியது மிக்க மகிழ்ச்சி. மேலும் காந்திக்கு எதிராக இப்பபொழுதும் உலவும் கருத்துக்களின் பின்புலத்தை இதை படித்தபின் நன்றாக யூகிக்க முடிகிறது.
- மேலும் நிறையபேர் காந்தியை கோட்சே சுட்டபின் அவனை மன்னியுங்கள் என்று காந்தி சொன்னதாக கேட்டிருக்கிறேன் மற்றும் இறக்கும் தருவாயில் “ஹேராம்” இவற்றை முடிந்தவரை விரிவாக ஆதாரத்துடன் விளக்கியது அபாரம்.
- படிக்கும்போது ஒவ்வரு தருணத்திலும் எழக்கூடிய சந்தேகங்களை படிப்பவரின் இடத்திலுருந்து நீங்கள் விளக்கியிருப்பது படிப்பவரின் மனநிலையை புரிதலின் உச்சம்.! (எ கா : இந்தியாவில் வன்முறையை நிறுத்தாமல் பாகிஸ்தானில் சென்று எந்த முகத்தை வைத்துகொண்டு கேட்பது )
- பாகிஸ்தானுக்கு பணம் கொடுப்பதை ஒரு அத்தியாயமாக எழுதியிருப்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை காட்டுகிறது.
- இறுதியில் குற்றவாளிகள், சாட்சிகள்,நீதிபதி,வழக்கறிங்கர்கள் என தொகுத்திருப்பது மிக மிக அருமை.
- நூலில் எழுத்துக்கள் சில இடங்களில் அச்சு தெளிவாக இல்லாமல் இருந்தது.
- கதை தொடங்கி 4ஆம் பகுதி வரை கோட்சேவை “அவன்” என்று அழைத்துவிட்டு பின் திடீர் என்று “அவர் ” தொடங்கி அதையே கடைசிவரை தொடர்ந்திருக்கிறீர்கள், அதற்கு ஏதேனும் காரணம் உண்டா ? கடைசி வரை “அவன்” என்றே அழைத்திருக்கலாம் :))
- ஒரு உரையாடலை தொடர்ந்து அதை முற்றுவிக்கும் விதமாக (சில இடங்களில்) “என்று சொன்னார்” போன்ற வார்த்தைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து 🙂
சென்ற வாரம் எனது ஊருக்கு(கோவை அருகில் உள்ள ஒரு கிராமம்) சென்றபோது இந்நூலை எனது தந்தைக்கு கொடுத்தேன்.,(அவர் 5ம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு விவசாயி) படிப்பதற்கு எளிமையாக இருந்ததால் விரும்பி தொடற்ச்சியாக படித்து முடித்ததாக கூறி மிகவும் பாராட்டினார். இதில் இந்தி பெயர்களை கவனமாக கையாண்டிருப்பதால் எந்த கடினத்தையும் உணரவில்லை என்றார். மேலும் என் அம்மாவும் பிர்லா ஹவுஸ் சுற்றுலா சென்றிருந்ததை நினைவுபடுத்தி அங்கு உள்ள காந்தியின் பாத சுவடுகளை இதில் வரும் காட்சிகளுடன் ஒப்பிட்டு வருந்தியதாக கூறினார். மேலும் அவர் இதில் கற்பனை இல்லாமல் உண்மை அடிப்படையில் உள்ளது போல் தங்களின் எழுத்து இருந்தது என்றார்.
சிறய விசயங்களையும் தெளிவாக ஆராய்ந்து எழுதியமைக்கு நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்,
கண்டிப்பாக ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் இல்லை ஒரு ஆவணம், இதை எனது நண்பர்களுக்கு பரிசாக கொடுக்கிறேன் .!
ஸ்ரீதரன்
இந்நூலை இணையத்தில் வாங்க: http://www.noolulagam.com/product/?pid=4042
3 Responses to "மகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்"

[…] இந்த கருத்துக்கள் பதிவான வலைதளத்தின் இணைப்பு : https://nchokkan.wordpress.com/reviews/mhgkvrvw […]


[…] இந்த கருத்துக்கள் பதிவான வலைதளத்தின் இணைப்பு : https://nchokkan.wordpress.com/reviews/mhgkvrvw […]

1 | மகாத்மா காந்தி கொலை வழக்கு — ஒரு நல்ல புத்தகம் | infosrig
September 15, 2014 at 2:59 pm
[…] இந்த கருத்துக்கள் பதிவான வலைதளத்தின் இணைப்பு : https://nchokkan.wordpress.com/reviews/mhgkvrvw […]