Posted by: என். சொக்கன் on: நவம்பர் 19, 2010
இன்று காலை ட்விட்டரில் இப்படி இரண்டு வரிகள் கிறுக்கியிருந்தேன்:
இதைப் படித்துவிட்டு நண்பர் ப்ரியா கதிரவன் ஒரு மெயில் எழுதினார்:
‘I wish there is some similar book in tamil too’
It has to be – I wish there ‘was’ some…..:-)
நான் விடுவேனா? செம புத்திசாலித்தனமா ஓர் அபத்தக் கேள்வியைக் கேட்டேன்:
இங்கே ’there was’ ஏன் வருது? இப்ப ஏதாவது புக் இருந்தா
நல்லதுன்னுதானே சொல்றேன்? ப்ரெசென்ட் டென்ஸ் வரக்கூடாதா?
இதற்கு அவர் எழுதின பதில்:
ஆங்கிலத்தில் I wish என்பது இப்போதைக்கு நம்மிடம் இல்லாத ஒன்று இருந்து இருந்தா நல்லா இருக்கும் ன்னு சொல்லும்போது பயன்படுத்த வேண்டியது.
கமல் தசாவதாரத்தில் சொல்வாரே…
“நான் எங்க கடவுள் இல்லன்னு சொன்னேன்…இருந்தா நல்லா இருக்கும்ன்னு தானே சொன்னேன்?”…
that is I (அதாவது கமல்) wish there ‘was’ God.
இருந்து இருந்தா -> So we always use past tense followed by I wish.
The first example that I read for I wish was “I wish I were a bird”
Here again there is a big lesson when to use “I wish I was” and when to use “I wish I were”…
இந்த விளக்கம் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம், எனக்கு இப்போதுதான் தெரிந்தது – இன்னும் பலருக்குப் பயன்படலாம் என்று தோன்றியது. ப்ரியா கதிரவனுடைய அனுமதியுடன் இங்கே சேர்க்கிறேன். பொறுமையாகவும் தெளிவாகவும் விளக்கம் சொன்ன அவருக்கு நன்றி!
இன்னொரு விஷயம், இதே ட்வீட்களைப் படித்துவிட்டு நண்பர் உமா மகேஸ்வரனும் ஒரு நல்ல அடிப்படை ஆங்கிலப் புத்தகத்தைச் சிபாரிசு செய்திருந்தார். ”Basic English Usage” By Swan Michael. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக வெளியீடு. முழு வடிவம் அல்லது பாக்கெட் சைஸில் கிடைக்கிறது –> http://goo.gl/bnLT2 & http://goo.gl/p2LSr
***
Hi
Still not clear between when to use ‘were’ and when to use ‘was’.
I wish / I were -> பொதுவாக hypothetical சூழ்நிலைக்கு, அதாவது ”சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியப்படுத்த நினைக்கிறேன்’ – என்ற தொனியில் (Mood) சொல்வதற்கு I were உபயோகிக்கலாம். I was அதன் மருவிய பயன்பாடு.
I wish there were God – என்பது சரியானதாக இருக்கும்.
A small correction; It should be
I wish there were/was “A” God.
எதுக்கு புஸ்தகத்தை எல்லாம் படிச்சுகிட்டு? எது சரின்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஈசியான வழி, “I wish there is” & “I wish there was” ரெண்டுத்தையும் கூகிளிலே போடுங்க. எதுக்கு ரிசல்ட் அதிகம் இருக்கோ, அதான் சரியானது
1 | Karthikeyan
நவம்பர் 19, 2010 இல் 11:59 மு.பகல்
I wish I were a English Professor..!