மனம் போன போக்கில்

முதல் நூல்

Posted on: August 19, 2015

பல நண்பர்கள் என்னிடம் புத்தகம் எழுதுவதுபற்றிக் கேட்டுள்ளார்கள். அவரவர் தங்களுடைய துறையில் நிபுணர்கள், அல்லது அதற்கான நியாயமான முயற்சியில் இருப்பவர்கள், அதனை நூலாக எழுத என்ன வழி, நான் எதை எழுதலாம், நல்ல தலைப்பை எப்படித் தேர்வு செய்வது, பதிப்பகங்களை எப்படி அணுகுவது, அவர்கள் எப்போது நமக்குப் பதில் அனுப்புவார்கள், அதற்கு ஏதேனும் செலவு ஆகுமா, அல்லது அவர்கள் நமக்கு ராயல்டி தருவார்களா என்றெல்லாம் அவர்களுடைய கேள்விகள் இருக்கும்.

இந்நண்பர்களிடம் எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன். ஏற்றுக்கொண்டு முயன்று நூல் எழுதி வெளியிட்டவர்களும் உண்டு, எழுதாதவர்களும் உண்டு. அவரவர் வசதி, அவரவர் முயற்சி.

முதல் நூல் எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்காக, என்றைக்காவது இதுபற்றிப் பொதுவில் எழுதவேண்டும் என்று நினைப்பேன், அதற்கான நேரம் இதுவரை அமையவில்லை.

சமீபத்தில் நண்பர் மதன் நூல் எழுதுகிற ஆர்வத்துடன் இதே கேள்விகளைக் கேட்டபோது, ’நேரில் வாருங்கள் காஃபி சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்’ என்று சொன்னேன். அந்த உரையாடலை (அவரது அனுமதியுடன்தான்) பதிவு செய்து இங்கே வெளியிடுகிறேன். ஆர்வமிருக்கிறவர்கள் கேட்கலாம்.

முன்குறிப்புகள்:

1. இது முற்றிலும் Nonfiction எனப்படும் அபுனைவு நூல்களைப்பற்றிய உரையாடல், கதை, கவிதை, நாவல் போன்ற நூல்கள் எழுதுவோருக்கு இது பெரிதாகப் பயன்படாது

2. இது தமிழ்ப் பதிப்பகச்சூழல்பற்றிய ஓர் எழுதுபவனின் பார்வை, முழுமையாக இல்லாமலிருக்கலாம்

3. ஆங்கில நூல்கள் எழுதுவோருக்கு இது பொருந்தாமலிருக்கலாம்

4. எப்படி எழுதுவது என்பதுபற்றி இங்கே எதுவும் பேசப்படவில்லை

5. எழுதுதல்பற்றிய என் பார்வைகள் சில உங்களுக்கு உவப்பின்றி இருக்கலாம், என்னைப்பொறுத்தவரை அது ஒரு தொழில்நுட்பம்தான், அதில் கலை அமைந்தால் இறைவனருள்!

6. இதனைக் கேட்டபின் உங்களுக்கு ஏதும் கேள்விகள் இருப்பின் இங்கேயே எழுதலாம், அல்லது nchokkan@gmail.comக்கு

7. உங்கள் முதல் நூலுக்கு என் வாழ்த்துகள்!

Advertisements

3 Responses to "முதல் நூல்"

சொக்கன், உங்கள் மின்னஞ்சல் கொடுங்கள். தனி மடல் எழுதுகிறேன். ரெ,கா,

சார், வணக்கம், நலமா? 🙂

உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன், என் மின்னஞ்சல் முகவரி nchokkan@gmail.com

ஐயா, திரு சொக்கன் அவர்களக்கு

இந்த பதிவு மிக மிக பயனுள்ளதாக இருந்தது. நானும் பல நாட்களாக நூல் வெளியிடும் அறிவினை பெற பல தேடல் புரிந்துள்ளேன். தமிழில் இது போன்ற பதிவுகள் (அ) அறிவினை பகிர்வது மிக குறைவு.

உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 507 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 437,977 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

August 2015
M T W T F S S
« Jul   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
%d bloggers like this: