மனம் போன போக்கில்

இளையராஜா : சில கேள்விகள்

Posted on: March 20, 2013

இளையராஜா தரும் பாடல்களைதான் இயக்குநர்கள் வாங்கிக்கொள்ளவேண்டும், எதிர்த்துப் பேசக்கூடாது என்கிற கருத்து குறையாகவும் பெருமையாகவும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து எனக்குப் பல கேள்விகள் உள்ளன.

1. இதைக் குறையாகச் சொல்கிறவர்களில் பெரும்பாலானோர் ராஜாவுடன் ஒரு படம்கூடப் பணியாற்றாதவர்கள், அல்லது சில படங்களில்மட்டும் பணியாற்றியவர்கள். அவர்கள் யாரோ சொல்ல நம்பியதைச் சொல்கிறார்களா, அனுபவித்ததைச் சொல்கிறார்களா?

2. ஒருவேளை இது (’நான் தரும் பாடல்களைதான் வாங்கிக்கொள்ளவேண்டும், மாற்றித் தரமாட்டேன்’) உண்மை என்று வைத்துக்கொண்டாலும், அது தனது திறமையில், ரசிகர்களின் நாடித்துடிப்பைப் புரிந்துவைத்திருப்பதில் அவருக்கிருக்கும் தீவிர நம்பிக்கையைக் காட்டுகிறது, அவரது Hit Rate + Quality வைத்துப் பார்க்கும்போது, இதில் என்ன தவறு?

3. சும்மா ‘இங்கே டெம்போ குறையுது, அங்கே ஏறுது’ என்று சொல்லாமல், நிஜமாகவே இசை பற்றிக் கருத்துச் சொல்லத் தெரிந்த இயக்குநர்கள் எத்தனை பேர்? அலுவலகத்தில் நம்முடைய வேலைபற்றி Value Adding Comments வராதபோது நாம் எரிச்சலடைவதில்லையா? இயக்குநர் என்பதற்காக அவர்கள் சொல்வதையெல்லாம் இசையமைப்பாளர் கேட்டே தீரவேண்டுமா?

4. ‘அதெல்லாம் இல்லை, என்ன திறமை இருந்தாலும் அவர் இயக்குநரை மதிக்கவேண்டும்’ என்று நீங்கள் வாதிட்டாலும்கூட, அவரோடு பணியாற்றியவர்கள் திரும்பத் திரும்ப அவரிடம்தான் சென்றிருக்கிறார்கள், பல காரணங்களால் (May or May not be இசை related) எரிச்சலடைந்து விலகியவர்களும் மறுபடி வந்திருக்கிறார்கள், இது ஏன்? அவரது (In Media’s words, முரட்டுத்தனமான / சர்வாதிகாரமான) கணிப்பில் அவர்களுக்கு நம்பிக்கை இருப்பதைதானே இது காட்டுகிறது?

5. பல இயக்குநர்கள் ‘எனக்கு அவர் பலமுறை ட்யூன்களை மாற்றித் தந்தார்’ என்று பேட்டி தந்திருக்கிறார்கள், அவை மறைக்கப்பட்டு, ‘அவர் முசுடு, தாகம் என்று வந்தவருக்குக் குடிக்கத் தண்ணீர்கூடத் தரமாட்டார்’ என்பதுபோன்ற செய்திகளைமட்டும் தீவிரமாகப் பரப்புவது யார்? இதனால் இன்றைக்கும் புதிய / இளைய / அதிபுத்திசாலி இயக்குநர்கள் அவரை அணுகத் தயங்குகிறார்கள், இவர்களில் யாரேனும் மேற்சொன்ன ’நம்பிக்கை’கள் எந்த அளவு உண்மை என்று ஆராயத் துணிவரா?

6. ஒருவேளை இது உண்மை என்றால், அவருடன் பணியாற்றி, அவரது பிடிவாதத்தால் படுமோசமான பாடல்களைப் பெற்று, அதனால் தோல்வி அடைந்து, வெறுப்படைந்து வெளியேறி, தன் கருத்துகளை மதிக்கக்கூடிய வேறு இசையமைப்பாளருடன் இணைந்து சிறந்த பாடல்களைப் பெற்று மிகப் பிரமாதமாக வெற்றி அடைந்த இயக்குநர்கள் பலர் இருக்கவேண்டும். அப்படி ஒரே ஒருவராவது உண்டா?

பின்குறிப்பு: இந்தக் கேள்விக்கான பதில்களில் தயவுசெய்து மற்ற இசையமைப்பாளர்களைப்பற்றிப் பேசவேண்டாம். My intention is NOT to start a new Raja Vs Rahman Fight

***

என். சொக்கன் …
20 03 2013

16 Responses to "இளையராஜா : சில கேள்விகள்"

for the last question, can Maniratnam be an example? though he got good
songs with Ilayaraja, i guess he got better with ARR. And more importantly
what he wanted.

நல்ல காரசாரமாகக் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். பதில் தெரிந்தவர்கள் தான் சொலவேண்டும்.

amas32

//அவருடன் பணியாற்றி, படுமோசமான பாடல்களைப் பெற்று, அதனால் தோல்வி அடைந்து//

None of these fit to MaNi Ratnam

இளையராஜாவால் தோல்வியடைந்தவர்கள் யாருமே இல்லை. அவரது இசையால் பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், வெற்றியடைந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். முதல் மூன்று இயக்குனர்களே அதற்குப் பிரதான சாட்சிகள். தேவையில்லாமல் இளையராஜாவை அபாண்டமாக அவர் இப்படிப்பட்டவர், அப்படிப்பட்டவர் என்று விமர்சிப்பது மிகவும் தவறானதும் வருத்தத்திற்குரியதும் ஆகும். நன்றி.

@ Nambirajan:மணி சார் ராஜா சார விட்டு போன பின்பு உயிரோட்டமான சினிமா செய்யவில்லை என்று சொல்லலாம், கடைசியாக வந்த கடல் நல்ல உதாரணம். நாயகன், மௌன ராகம் மற்றும் தளபதி போல BGM Score வேறு ஏதாவது மணி சார் படத்தில வந்து இருக்குதா??? மணி சார்தான் ராஜா சார இழந்துவிட்டார்

@என். சொக்கன்:situation சொன்ன பிறகு கேட்காமலே tune கொடுப்பது ராஜா சார் வகை, கேட்டு கொடுப்பது( சரவண பவன் ) மற்றவர் வகை!

My 2 cents’ worth: Not about names of directors and MDs – but about some axioms.

A Tyre is sold off the shelf, an Audio System is sold off the shelf etc. But when they become OE components in a car, the Car manufacturer determines and demands what he wants in his car. He may or may not ‘publicize’ the ‘value add’ of these components or their source. Yet, as a part of the ‘bigger’ product, the component has to be as desired/ approved by the manufacturer. Yes, there are in deed, as ought to be, discussions, debates, pushing-pulling etc. But the final word is that of the Car Manufacturer. Right?

At a different level, the component – the Tyre or audio system is also sold separately – in retail, where the manufacturer of the Tyre or Audio System – establishes his own specs! His own creations. Because here it is not just a component – but a full fledged ‘complete product’.

As a CRM expert, you know how the market place is. So why not expect a Music Director to be working with a Director to meet his expectations; after all, the same Music Director can show his own special skills in ‘exclusive’ albums?

I am not an expert in music or film making, so, willing to learn!

@PVR,

While your comment is logically appealing, it does not lend well to the context. An audio system that goes into a car is not a deal-breaker/major point of differentiation. But music for a movie is. Music can make or break a movie. “Meeting director’s expectation” is a dicey thing. The director has to have clarity and good music sense to judge what a music director is giving. Barring a few, most directors do not have this ability. (Even Mani Ratnam does not, if we go by what Raja said in NEPV audio launch about Ninnu Kori Varnam). “Enakku oru love song venum”, “pathos song venum”, “fast beat venum” ……. this is the level most directors can talk. Nothing wrong, but this sets a very low bar. Expecting music director’s who are at a certain peak of creative productivity to adhere to such bland demands, what output are you expecting? This brings us to the question of defining “director’s expectations”.

I don’t know the truth behind illaiyarajah and how he is with directors. But when it comes to making music for a film, at the end of the day its the director’s film not illayarajah’s. The director always has a vision and there is nothing wrong is asking for changes when the artistic vision of the composer doesn’t sync with the director’s. This is true not of just the composer but all artists working in a film. Its like saying we can’t ask a re-take if the film has Kamal or Rajni or Sivaji as a hero. When it comes to film making, the director is the captain.

நூற்றுக்கு நூறு உண்மை.

இளையராஜா எனும் ஆத்மா தானாக இசை அமைக்க துடங்கி ஓர்/இரு ஆண்டுகளுக்குள் இசைவாழ் மனிதராக மாறிவிட்டார். அதற்க்கு பிறகு அவரிடம் டுயுன்(tune) வாங்குதல் எல்லாம் சும்மா…, இயற்கையாக ஒரு குழந்தை சந்தோஷத்தில் எப்படி சிரிக்குமோ , அல்லது கோபத்தில் எப்படி அழுவுமோ அதுபோல அன்றைய தினத்திற்கு அவர் மனதில் என்ன தோன்றுகிறதோ அது இசை வடிவில் வருகிறது …அதுவும் அது கதை சொல்லும் மனிதர்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு வியக்கத்தக்க இசை கணக்கு! MSV, GKV, SDB இவர்கள் கணக்கின் வாசனை இல்லாமலும் …Thyagarayar, Mozart, Beethoven, Schubert, Bach போன்றவர்களின் கணக்கிற்கு இணையாகவும் தோன்றும் கற்பனையில் அவர் அந்த நொடியில் எனென்ன பார்கிறாறோ அவை அனைத்தும் இசை உணர்வாக வெளிபடுகிறது இதை இசை கேட்க்கும் மனிதர்கள் தேர்வு செய்ய முயற்சிப்பது முடியாத காரியம் !
அவரிடம் இருந்து வருகின்ற டுயுனை சோகம், சந்தோஷம் , வெறுப்பு, உல்லாசம் என்று வகைபடுத்த மட்டுமே இயக்குனர்கள் கதை சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது, மற்றபடி ஒரு “ஏதோ மோகம் …” அல்லது “பொன் மாலைபொழுது ” இது போன்ற கற்பனைகளை எப்படி இயக்குனர் தேர்வுசெய்ய முடியும்?இதில் இயக்குனர் சிகரம் மட்டும் சிறிதளவு இசைஞானம் உள்ளவர், இந்த ராகத்தில், இந்த கீர்த்தனை மாதிரி என்று எடுத்துக்காட்ட தெரிந்தவர் (“மாதிரி தான்”).
தவிர, இளையராஜாவிடம் இதை நான்தான் மாற்ற சொன்னேன் என்ற பெருமைக்கு மட்டுமே சிலர் வேறு ட்டுயுங்களை கேட்பதுண்டு, அதற்க்கு இயக்குனர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய இந்த பாடல்களே உதாரணம் …(“அம்மா என்றழைகாத…”,”நிலவே முகம் காட்டு…”,”முத்து மணி மாலா…” ,” ஆயிரம் மலர்களே மலருங்கள் …”)
எந்த இயக்குனரோ, நடிகரோ கேட்ட ட்டுயுன் அமையவில்லை என்று பிரிந்ததாக தெரியவில்லை …
உச்ச நட்ச்சத்திர நடிகர், இயக்குனர் இமயம், இயக்குனர் சிகரம், ரத்தின இயக்குனர், வைர வரிகாரர், அனைவருமே இளையராஜாவை விட்டு சென்றது எந்த துறை முதன்மை வாய்ந்தது என்ற கருத்து வேறுபாட்டின் அடிப்படையில்தான் என்பது தமிழ் சினிமா வரலாறு காட்டுகிறது.
குறிப்பு: இது இசையமைப்பில் இசைதர்மத்தையும்/தார்மீகத்தை கடைபிடிக்கும் மற்ற இசையமைபாலர்களுக்கும் பொருந்துமென கருதுகிறேன்.

A director is the captain of the movie and a film song’s victory is not only in the hands of the music director . As often told by Mellisai Mannar , it is the victory of the joint efforts of the music director , lyricist , singers , musicians & recording technicians as well as the film’s director .

There are many winners who separate from I.R. such as Bakyaraj , Balachander , Bharathiraja .

I agree with your points, But my question was different:

//அவருடன் பணியாற்றி, படுமோசமான பாடல்களைப் பெற்று, அதனால் தோல்வி அடைந்து//

All 3 directors you quoted (Bagyaraj, Balachander, Bharathiraja) don’t fit to this description. Isn’t it?

////அவருடன் பணியாற்றி, படுமோசமான பாடல்களைப் பெற்று, அதனால் தோல்வி அடைந்து//

இது சரியான மெட்ரிக் அல்ல. அது படுமோசமா இவர் போட்டுட்டாலும் 🙂

நல்லா இருக்கு, ஹிட் ஆச்சு – ஆனா நான் நினைச்ச மாதிரி இல்லைன்னு நினைக்கிறவங்க இருக்கலாம் இல்லையா.

//இளையராஜா தரும் பாடல்களைதான் இயக்குநர்கள் வாங்கிக்கொள்ளவேண்டும், எதிர்த்துப் பேசக்கூடாது என்கிற கருத்து குறையாகவும் பெருமையாகவும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. //

நான் படித்த வரையில் இது உண்மை அல்ல.

கருவி இசையைப் பொறுத்த மட்டில் முழுக்க முழுக்க ராசா முடிவெடுத்திருக்கலாம்.

ஆனால் மெட்டு பெரும்பாலும் இயக்குனர் கேட்டுப் பெறலும் மாற்றித்தரலும் நடந்ததாக நாம் அடிக்கடி வாசிக்கிறோம்.

கருவி இசையினைப் பொறுத்த மட்டில் ராசாவை தாராளமாக உலகின் தலை சிறந்த வல்லுனர்களோடு ஒப்பிடலாம் (அதாவது பால் மரியா போன்றோர்). அவரது நிலையில் நின்று பேசவோ, விவாதிக்கவோ, மதிப்பிடவோ அசாதாரண அறிவு வேண்டும். இல்லாமல் வாதிப்பதும் குறை கூறுவதும் அறியாமை!

“ஒருவேளை இது (’நான் தரும் பாடல்களைதான் வாங்கிக்கொள்ளவேண்டும், மாற்றித் தரமாட்டேன்’) உண்மை என்று வைத்துக்கொண்டாலும், அது தனது திறமையில், ரசிகர்களின் நாடித்துடிப்பைப் புரிந்துவைத்திருப்பதில் அவருக்கிருக்கும் தீவிர நம்பிக்கையைக் காட்டுகிறது, அவரது Hit Rate + Quality வைத்துப் பார்க்கும்போது, இதில் என்ன தவறு?”

இளையராஜா சிறந்த இசை வல்லுனர் என்பதில் எனக்கு எனக்கு துளியும் ஐயம் இல்லை.

ஆனால், தாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள கருத்து எப்படி வலுவானதாக, சரியானதாக இருக்க முடியும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது.

இசை வல்லுனர் பரிந்துரை செய்யலாம் (அவரின் அனுபவம், மற்றும் துறை சார்ந்த அறிவு கொண்டு) ஆனால் இயக்குனரை எப்படி கட்டாயப்படுத்த முடியும்?

sir, please can you explain about in”thooral ninnu pochu”-“thanga sangli” song

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,070 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
%d bloggers like this: