வருடமெல்லாம் வசந்தம்
Posted August 29, 2016
on:- In: Learning | Media | Reading | Uncategorized | Video
- 4 Comments
எழுத்து, வாசிப்பு தொடங்கி எந்தத் துறையிலும் ஒரு சிறு பணியை எடுத்துக்கொண்டு தினமும் செய்வது நல்ல பலன்களைத் தரும். இதை நான் அனுபவப்பூர்வமாகப் பார்த்திருக்கிறேன்.
உதாரணமாக, உங்களுக்குப் புத்தகம் படிக்கிற பழக்கம் வரவேண்டும் என விரும்புகிறீர்கள். அதற்கு எப்போதாவது கிடைக்கும் புத்தகங்களைப் படிப்பதைவிட, தினமும் 5 பக்கம் என்பதுபோல் வைத்துக்கொண்டால் ஓர் இலக்கு அமையும், உத்வேகம் அதிகரிக்கும். இதனை ஒருவருடம் அர்ப்பணிப்போடு செய்தால், ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் இருந்த நிலையிலிருந்து சிலமடங்கேனும் முன்னேறியிருப்பீர்கள். இதுதான் #365Projects என்பது.
இங்கே “தினமும் 5 பக்கம் வாசிப்பேன்” என்பது ஓர் உதாரணம்தான். இதை நீங்கள் விருப்பம்போல் மாற்றியமைக்கலாம்: “தினமும் 2 பத்தி எழுதுவேன்”, “தினமும் அரை மணிநேரம் நடப்பேன்”, “தினமும் ஒரு புதியவருடன் பேசுவேன்”… இப்படி.
நான் பல #365Projects செய்துள்ளேன், அவை எனக்கு மிக நல்ல பலனைத் தந்துள்ளன. ஆகவே, இதுபற்றிப் பல நண்பர்களுக்கும் சொன்னதுண்டு.
சமீபத்தில் நண்பர் மகேந்திரனைச் சந்தித்தபோது, இரவுணவோடு பல விஷயங்களைப் பேசினோம். அதில் #365Projectsபற்றியும், அதை வெற்றிபெறச்செய்ய எனக்குத் தெரிந்த நுட்பங்களைப்பற்றியும் பேசிய பகுதிமட்டும் இங்கே.
பின்குறிப்பு: உணவகத்து இரைச்சல் அதிகமாக இருக்கும். ஆர்வமுள்ளோர் அதைப் பொறுத்துக்கொண்டு கேட்கலாம் 🙂
***
என். சொக்கன் …
29 08 2016
4 Responses to "வருடமெல்லாம் வசந்தம்"

books are our real friends you can face any problem if you have friendship with books ji


Excellent suggestion..vaazhkayil munnera ,vetri pera!


நான் தேடிப் பிடித்து இதைப் படிக்கிறேன். கேட்கிறேன். எனக்கு உங்கள் புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். தவிர உங்களின் அனுபவஙகளை வெளிப்படையாகச் சொல்லி மற்றவர்களுக்கு வழிகாட்டுதல் செய்வதையும் மிகவும் ரசிப்பேன். பின்பற்ற முயற்சிக்கிறேன். நன்றி

1 | ATPU
August 29, 2016 at 11:37 pm
Thanks for sharing the idea. இவ்வாறு பலதடவைகள் முயன்றாலும் தோல்வியடைவது வழமையாகிவிட்டது!