மனம் போன போக்கில்

பதினைந்தாயிரம் ரூபாயும் ஓர் அப்பாவி கோயிந்தும்

Posted on: February 3, 2014

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு தொலைபேசி அழைப்பு. நண்பர் ஒருவர், ட்விட்டரில் பழக்கம், ஓரிருமுறை சந்தித்துள்ளேன், பெங்களூர்க்காரர்தான்.

ஃபோனை எடுத்தவுடன், ’அரவிந்தன் (பொது நண்பர்) ஊர்ல இல்லைங்களா?’ என்றார்.

‘ஆமாங்க, அவர் இப்போ வெளிநாட்டுல இருக்கார்’ என்றேன்.

கொஞ்சம் தயங்கி, ‘ஒரு விஷயம் கேட்டாத் தப்பா நினைக்கமாட்டீங்களே’ என்றார்.

‘சொல்லுங்க.’

‘அவசரமா பத்தாயிரம் ரூபாய் பணம் வேணும்.’

நான் பேசுவதற்குள் அவரே, ‘எனக்கில்லை, என் மனைவிக்கு’ என்றார். ‘இப்ப நான் ஊர்ல இல்லை, அவங்களுக்குப் பணம் Withdraw செஞ்சு தரமுடியலை,அதான்.’

’நீங்க அவங்க அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சா, அவங்க எடுத்துக்குவாங்க, நான் வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்ததும் உங்களுக்குப் பணம் தந்துடறேன்.’

’அதை நீங்களே ட்ரான்ஸ்ஃபர் செய்யலாமே’ என்று கேட்டிருக்கலாம். கணவன் ஊரில் இல்லாதபோது மனைவிக்குப் பணத்தேவை என்ற செண்டிமெண்ட், விழுந்தேன்.

தவிர, நண்பர் பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவர், ஃபாரினில் வேலை பார்த்துத் திரும்பியவர், வெற்றுப் பத்தாயிரமா ஏமாற்றப்போகிறார்?

ஆகவே, அவரிடம் அக்கவுண்ட் நம்பர் வாங்கிக்கொண்டேன். அனுப்ப முயன்றபோது மறுபடி ஃபோன், ‘சார், பதினஞ்சாயிரமா அனுப்பமுடியுமா?’

அப்போதாவது சுதாரித்திருக்கலாம். நாந்தான் வள்ளலாச்சே, சரி என்று ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து ஃபோன் செய்தார். ‘பணம் வந்துடுச்சு சார், ரொம்ப தேங்க்ஸ், நாலு நாள்ல உங்க பணத்தை நேர்ல பார்த்துக் கொடுத்துடறேன்.’

அவ்வளவுதான். அதோடு அவர் என்னை அழைப்பது நின்றது. நானும் அதை மறந்துவிட்டேன். சில நாள் கழித்து ஏதோ சமயத்தில் ஞாபகம் வர, ஃபோன் செய்தேன்.

’பிஸியா இருக்கேன் சார், அப்புறம் கூப்பிடறேன்’ என்று வைத்தார். அதுதான் அவர் குரலைக் கேட்ட கடைசித் தருணம்.

அதன்பிறகு இன்றுவரை குறைந்தது 50 முறை அவருடைய எண்ணை அழைத்திருப்பேன். பதில் இல்லை, எடுக்கமாட்டார்.

’வேறு எண்ணிலிருந்து அழைக்கலாமே’ என்றார் மனைவி.

லாம்.ஆனால் அவர் இப்படி மௌனமாக இருக்க வேறு நியாயமான காரணம் இருக்கும் என்று நான் நம்பினேன்.

அது ஆச்சு மூன்று மாதங்கள், பலமுறை அழைத்தும் அவர் எடுக்கவில்லை, நானும் வேறு எண்ணிலிருந்து (பிடிவாதமாக) அழைக்கவில்லை.

இதுபற்றி ஒருநாள் நண்பர் நாகராஜனிடம் புலம்பினேன். ‘நீங்க லூஸா?’ என்றார். ‘லட்டுமாதிரி அக்கவுண்ட் நம்பர் இருக்கு, அதை வெச்சு அட்ரஸைப் பிடிங்க. நடவடிக்கை எடுங்க!’

செய்யலாம். ஆனால் இப்போதும் நான் கிறுக்கன்மாதிரி அவர் என் ஃபோன் காலை எடுத்துவிடுவார் என்றே நம்பினேன்.

ஆகவே, நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதுவரை.

என் கட்டுரை ஒன்றுக்குத் தரவேண்டிய ரூ 4000ஐ ஏமாற்றினார் ஒருவர். அவருக்கு (நீண்ட காத்திருப்புக்குப்பின்) இன்று ஒரு சூடான மெயில் எழுதினேன்.

அப்போது, அவர் ஞாபகம் வந்தது. ஃபாரினில் வேலை செய்தவர், இங்கேயும் நல்ல நிறுவனத்தில் வேலை. 15000 ரூபாய்க்காக ஓடி ஒளியும்படி என்ன பிரச்னையோ!

பதினைந்தாயிரம் ரூ எனக்கு அற்பக் காசு இல்லை, மூலையில் உட்கார்ந்து அழும் அளவு காசும் இல்லை.

நண்பர் என்று நம்பிக் கொடுத்தேன். நடவடிக்கை ஏதுமின்றி அவரே திருப்பித் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன், அது அசட்டுத்தனம் என்றாலும் நியாயம் அதுதானே?

ஆகவே, இதுகுறித்து எனக்கு எந்த டென்ஷனும் இல்லை. (என் மனைவிக்குதான் ஏக டென்ஷன்).

இக்கட்டுரைமூலம் அவரை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்துவிடுகிறேன். இனி யாருக்கும் கடன் தரக்கூடாது என்ற பாடத்துக்கான கட்டணம் ரூ 15000!

***

என். சொக்கன் …

03 02 2014

11 Responses to "பதினைந்தாயிரம் ரூபாயும் ஓர் அப்பாவி கோயிந்தும்"

நம்பிக்கை துரோகம்… காஸ்ட்லியான அனுபவம் தான்…

நண்பர் என்று நம்பிக் கொடுத்தேன். நடவடிக்கை ஏதுமின்றி அவரே திருப்பித் தரவேண்டும்//
இக்கட்டுரைமூலம் அவரை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்துவிடுகிறேன்.//
இப்படியானவரை நண்பர் என இத்தனை நாள் இருந்தோமோ என்ற ஊகா முள் உறுத்தல் தான்…

ரெம்ப இளிச்ச வாயான இருக்கீங்க நீங்க . அப்படியே எண்ணையா உரிச்சு வச்சு இருக்கீங்க 🙂

Unfortunately, the repercussion of this incident would be borne by those genuine friends and relatives.
This post reminds me of an incident that my boss shared with me. My boss (who is a German) told me that he had his experience in contracts at the age of 15. Apparently, his Dad borrowed some money (hundreds of Deutschmark) and they entered into a contract, which spelled the terms and conditions pertaining to the repayment. My boss told me he was so hesitant and confused of such a contracts and tried to avoid signing one by saying that he trusted his dad. His dad refused and convinced my boss that that the reason he wanted a contract was because of the trust between them and did not want it to be breached on any account. they finally entered a contract (drafted by themselves) and witnessed by some third party. My boss told that the experience taught him many lessons.
However, I do wonder how my friends and relatives would react if I wanted a contract when they borrowed money from me. Obviously, I would lose them, but is it worth to hold on to such folks is a question that haunts me.

Panam kaikku vandavudan, kodutthavarai marandu vidugirargal 🙂

உங்க பணத்தில் நாங்களும் பாடம் கற்றுக்கொண்டோம்.

Sir, you are not alone. நானும் இதே பாடத்தை நான்கு ஆண்டுகள் முன்பு கற்றுக் கொண்டேன். என்ன காமெடி என்றால் அந்த நண்பர்? இன்றும் பணம் தருகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். நான் கற்றுக்கொண்டது ஆன்லைன் நண்பர்களை நம்பி பணம் தர கூடாது என்பதுதான்.

எனது தாயார் எனக்குச் சொன்ன அறிவுரை – ஒருவர் நூறு ரூபாய் கேட்டால், உன்னால் கொடுக்க இயலுமென்றாலும் ஐம்பது ரூபாய் தான் உன்னால் முடியும் என்று கூறி அதைக் கொடு.
நானே எனக்குச் சொல்லும் அறிவுரை – எதை கொடுத்தாலும் அது திரும்பி வரும் என்று எதிர்பார்க்காதே! (வந்தால் bonus)
என்னிடம் ஆயிரக் கணக்கில் கடன் வாங்கிய ஒருவர் என்னைக் கண்டால் கூறுவார், “தேவையென்றால் கேள்; தருகிறேன்” (!!)

Cha, idai mudalil paditirundal en nanbanuku kadan koduthu tangalin adhe nilaiyay adandirukkamatten 😦

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,070 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
%d bloggers like this: