மனம் போன போக்கில்

இசை எனும் கலை

Posted on: February 8, 2009

நண்பர் நெப்போலியன் (http://www.neps.in) இணைய தளத்திலிருந்து ஒரு செய்தி.

நம் ஊரில் இசை ரசிகர்கள் நிறைய. ஆனால் இசை எனும் கலையை, அதன் நுணுக்கங்களை நாம் எந்த அளவு புரிந்துவைத்திருக்கிறோம் என்பது கொஞ்சம் சந்தேகம்தான், ‘கேட்க நல்லா இருக்கு, அது போதும்’ என்கிற அளவில் என்னைப்போன்றோரின் இசை விருப்பங்கள் நின்றுவிடுகின்றன.

ரசிக்கவும் சரி, இசைக்கவும் சரி, அந்தக் கலைபற்றிய ஓர் அடிப்படைப் புரிதல் தேவைப்படுகிறது. ஆனால் அதை யார் நமக்குச் சொல்லித்தருவார்கள்? வெளிப்படையாகக் கேட்டால் மற்றவர்கள் சிரிப்பார்களோ, கேலி செய்வார்களோ என்கிற பயத்திலேயே பலர் வாய் திறப்பதில்லை.

இசைபற்றிய நமது கேள்விகள், சந்தேகங்களை அந்தத் துறை சார்ந்த நிபுணர் ஒருவரிடம் கேட்டுத் தெளிவுபெறுவதற்கு நண்பர் நெப்போலியன் ஒரு வாய்ப்புத் தருகிறார். மேல் விவரங்கள் இங்கே:

http://neps.in/2009/01/01/learning-art-of-music-howto-questions-invited/

***

என். சொக்கன் …

08 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

4 Responses to "இசை எனும் கலை"

இசையை இசையாக மட்டும் ரசிக்க ராகங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ள தேவையில்லை என்பது என் கருத்து.

ஒரு மென்பொருள் உபயோகிக்கும்போது, அதை உபயோகிக்க கற்கிறோமேயன்றி, அதை செய்யும் விதம் பற்றி அறிய முற்படுவதில்லையே நாம். அதை தயாரிக்கையில் பல நிபுணத்துவங்கள் அதில் உபயோகம் ஆகியிருக்கும் அல்லவா?

நாம் முதன்முதலில் சங்கீதம் கேட்க துவங்கியபோது என்ன புரிதல், அடிப்படையாகக்கூட, நம்மிடம் இருந்திருக்கும்?

R Sathyamurthy,

நன்றி!

இசையை ரசிக்க நுட்பங்கள் தேவையே இல்லை என்பதுதான் என்னுடைய எண்ணமும். எனக்கு ராகமோ, தாளமோ தெரியாது, ஆனால் நல்ல இசையைக் கேட்கப் பிடிக்கும். அதற்கு ரசனைமட்டும் போதுமானது என்றுதான் நினைக்கிறேன்.

எனினும், இதுபற்றிய சந்தேகங்களை நிபுணர்களிடம் விளக்கம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் தப்பில்லை, அவர்கள் சொல்வது புரியாவிட்டால் வருத்தப்படவும் வேண்டியதில்லை 🙂

சொக்கன்,

உண்மைதான். ஆயினும், இனிய கர்நாடக சங்கீதம் பொதுமக்களிடம் இருந்து அந்நியமாக இருக்கக் காரணமே அதை ரசிப்பவர்கள் ராகங்களை தெரிந்தவர்களாக இருக்கவேண்டும் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியிருப்பதுதான் என்று நினைக்கிறேன்.

R Sathyamurthy,

நன்றி 🙂

//இனிய கர்நாடக சங்கீதம் பொதுமக்களிடம் இருந்து அந்நியமாக இருக்கக் காரணமே அதை ரசிப்பவர்கள் ராகங்களை தெரிந்தவர்களாக இருக்கவேண்டும் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியிருப்பதுதான்//

உங்கள் ஆதங்கம் புரிகிறது. மிக உண்மையான கருத்து!

Leave a comment

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,148 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

February 2009
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728