மனம் போன போக்கில்

பார்வதீப ரமேஸ்வரௌ

Posted on: June 1, 2012

சில சமயங்களில், பதிவுகளைவிட, அவற்றில் எழுதப்படும் பின்னூட்டங்கள் மிகத் தரமானவையாக அமைந்துவிடும். மற்ற ஊடகங்களைவிட இணைய எழுத்தை அதிகச் சுவாரஸ்யமாக்குவதும் இவைதான்.

எனக்கு அப்படி ஓர் அனுபவம் இந்த வாரம்.

தமிழ் திரைப் பாடல்களில் வரும் சில Easter Egg Momentsஐக் குறிப்பிட்டு ‘பிரித்தலும் சேர்த்தலும்’ பதிவை நான் எழுதியபோதே, இதேபோன்ற இன்னும் பல ஆச்சர்யங்கள் பின்னூட்டத்தில் குவியும் என்று உறுதியாக நம்பினேன். அதற்கு ஏற்ப ஏகப்பட்ட ஈஸ்டர் முட்டைகள் (உடையாமல்) வந்து விழுந்தன.

அவற்றில் ஒன்று, என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. நானோ நீங்களோ ஜுவல்லரி விளம்பரத்தில் வருவதுபோல் ‘தலைகீழா நின்னாலும்’, ‘தவமே செஞ்சாலும்’, ‘குட்டிக்கரணமே போட்டாலும்’, ‘ஒத்தக்கால்ல நின்னாலும்’…. இந்த மேட்டரைக் கண்டுபிடித்திருக்கமுடியாது!

நான் பெற்ற பிரமிப்பு பெறுக இவ்வையகம் என்று அந்தப் பின்னூட்டத்தை ஒரு தனிப் பதிவாகவே இடுகிறேன். இதனை எழுதியவர் ’பாலா அறம்வளர்த்தான்’, வாசிக்க எளிதாகப் பத்தி பிரித்ததும் சில சிறு திருத்தங்கள் செய்ததும்மட்டுமே என் பங்களிப்பு:

சலங்கை ஒலி படத்தில் வரும் ‘நாத வினோதங்கள்’ பாடலைக் கேட்டிருப்பீர்கள்.

அந்தப் பாடல் ஆரம்பிக்கும்போது காளிதாசரின் ரகுவம்சத்தில் இருந்து ஒரு ஸ்லோகம் வரும். அதன் கடைசி வரி “வந்தே பார்வதி பரமேஸ்வரௌ.”

SPB அந்த வரியை இரண்டுமுறை பாடுவான், (SPB, KJY எல்லாம் எனக்கு அவன் இவன்தான் கண்டுக்காதீங்க, சொல்லடி சிவசக்தி மாதிரி :-)). முதன்முறை ‘வந்தே பார்வதி பரமேஸ்வரௌ’ என்று சரியாக வரும், இரண்டாவது முறையாக அதனைப் பாடும்போது “வந்தே பாரவதீப ரமேஸ்வரௌ” என்று பாடி இருப்பான்.

அதாவது, ‘பார்வதீப’ , குட்டி gap விட்டு ‘ரமேஸ்வரௌ’ என்று வரும். இப்படிப் பிரித்து உச்சரிப்பது தவறு. நன்றாகவே சமஸ்கிருதம் தெரிந்த இளையராஜா இதை எப்படி அனுமதித்தார் என்று ஆச்சர்யமாக இருந்தது.

சமீபத்தில் படித்தேன், அது வேண்டுமென்றே இளையராஜா செய்ததாம்.

முதலில் ‘பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் வந்தனம்’, இரண்டாவது ‘பார்வதீப’ (பார்வதியோட பதி : சிவன்) மற்றும் ’ரமேஸ்வரௌ’ (’ரமா’ என்பது மகாலக்ஷ்மியோட இன்னொரு பெயர் , அதனால் ரமாவின் ஈஸ்வரன் (கணவன்) விஷ்ணு). ஆகவே இளையராஜா SPB ஐ வேண்டுமென்றே ‘சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் வந்தனம்’ என்கிற அர்த்தம் வருமாறு பாடச் செய்திருக்கிறார்.

இந்தக் காட்சியில் நடித்த கமலும் இதை அற்புதமாக புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அபிநயம் பிடித்திருக்கிறார். கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள் : முதலில் பார்வதி மற்றும் சிவன் (0:22 முதல் 0:30). இரண்டாவது முறை வரும்போது ‘பார்வதீப’ என்பதற்கு அர்த்தநாரீஸ்வருடைய அபிநயம், ‘ரமேஸ்வரௌ’ என்பதற்கு மகாலக்ஷ்மியோடு பாற்கடலில் சயனம் கொண்டிருக்கும் விஷ்ணுவுடைய அபிநயம் (0:34 முதல் 0:40).

What a classic team work!

அற்புதம். பொதுவாகக் கவிஞர்கள்தான் வார்த்தைகளில் விளையாடுவார்கள். இங்கே இசையமைப்பாளரும் பாடகரும் நடிகரும் சேர்ந்து ஒரு வித்தியாசமான குறும்பு செய்து நம்மை அசரடிக்கிறார்கள். இதைக் கண்டுபிடித்துச் சொன்ன பாலா அறம்வளர்த்தான் அவர்களுக்கு மிக்க நன்றி.

UPDATES:

1. ’பார்வதிபரமேஸ்வரம்’ என்பது தவறு, ‘பார்வதிபரமேஸ்வரௌ’ என்பதுதான் சரி என்று ‘ஒருபக்கம்’ ஸ்ரீதர் சுட்டிக்காட்டினார், மன்னிக்கவும், திருத்திவிட்டேன்

2. ஸ்ரீதர், ஈரோடு நாகராஜ் இருவரும் இன்னொரு முக்கியமான திருத்தத்தையும் சொல்கிறார்கள். இங்கே இளையராஜாவோ SPBயோ, கமலோ எதையும் புதிதாகக் கண்டுபிடித்துவிடவில்லை. காளிதாசரின் இந்தப் பாடலை நாட்டியப் பள்ளிகளில் சொல்லித்தரும்போதே இப்படிச் சேர்த்து, பிரித்து வருகிற அர்த்தங்களையும் சொல்லி அபிநயிக்கக் கற்றுத்தருவார்கள், மரபு வழி வரும் விஷயம் அது, சினிமாவில் அதனைப் பயன்படுத்தியதற்காக இயக்குநருக்கோ இசையமைப்பாளருக்கோ லேசாகக் கை குலுக்கலாம், அவ்வளவுதான்

***

என். சொக்கன் …

01 06 2012

21 Responses to "பார்வதீப ரமேஸ்வரௌ"

பாடல் அடிக்கடி கேட்டது தான். ஆனால் இந்த விஷயம் இப்போ தான் கவனிக்கிறேன். சூப்பர். இளையராஜா எதை செய்தாலும், ஒரு அர்த்தம் இருக்கும் போலவே.

இந்த பாட்ட எப்ப கேட்டாலும் இந்த ‘பார்வதிப ராமேஸ்வரம்’ தப்பு-ன்னு தான் தோனும். சுத்தி இருக்கறவங்க கிட்ட கூட நிறைய தடவ சொல்லிருக்கேன். இனிமேல் சொல்ல மாட்டேன்! நன்றி! 🙂

’என்.டி.இராமராவ் தான் க்ருஷ்ணர் என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் இருந்துகொண்டு தான் இருப்பார்கள்’, என் நண்பன் திருவனந்தபுரம் ஹரிஹரன் சற்று முன் சொன்னான், இந்த “மிகையுணர்ச்சி” பதிவைப் பற்றிய அலைபேசி உரையாடலில்.

காளிதாசனின் இந்த் ஸ்லோகத்தை பள்ளிகளில் பயிற்றுவிக்கும் போதே, பிரித்தால் வருகின்ற பொருள், அழகு, வார்த்தை விளையாட்டு, காவிய ரஸம் எல்லாம் சேர்த்துத் தான் கற்றுக்கொடுப்பார்கள். சம்ஸ்க்ருதம் படிக்கும்போது மட்டுமல்ல, இந்த ஸ்லோகத்தை அபிநயிக்கும் நடனக் கலைஞர்களும் காலகாலமாக சேர்த்தும், பதம் பிரித்துமே காட்டி வந்திருக்கிறார்கள்.

இரசிகத்தன்மை வழிபாட்டு நிலைக்குச் சென்றுவிட்டால், கண்மண் தெரியாது போகிறது.

முதலில் இடுகையின் தலைப்பு. ‘பார்வதி பரமேஷ்வரௌ’ என்று இருக்க வேண்டும். காளிதாசனின் ரகுவச்மத்தில் இடம்பெறும் கடவுள் வணக்கம் பாடல் அது. சமஸ்கிருதத்தில் ஒருமை, பன்மை போல dual வகையும் உண்டு. எல்லா சொற்களுக்கும் இந்த ‘இரட்டிப்புத்தன்மை’யை சமஸ்கிருதம் அளிக்கிறது. அம்மா & அப்பா, இரவு & பகல் போன்ற dual பதங்களை சேர்த்தே சொல்லலாம். அதுதான் ‘பார்வதி பரமேஷ்வரௌ’.

பார்வதிப & ரமேஷ்வரௌ என்பது இளையராஜாவின் புதிய கண்டுபிடிப்பும் அல்ல. காளிதாசரின் பாடலுக்கான நடன அபிநயம் செய்வதில் அது ஒரு மரபாக பல காலம் இருக்கிறது. அதை தவிர்க்க வேண்டும் என்று சொல்பவர்களும் உண்டு.

சொல்லும் பொருளும் போல அம்மையும் அப்பனும் என்ற பொருள்வரும்படிதான் அந்தப் பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆர்வக்கோளாறால் சிலர் அதை ஹரியும் ஹரனுமாக பிரித்து பொருள் கொள்வதும் உண்டு. அப்படியான் பொருள் காளிதாசரின் நோக்கமாகவும் இருந்திருக்க முடியாது. இளையராஜாவின் சொந்த கண்டுபிடிப்பும் இல்லை. அது ஒரு பரதநாட்டிய அபிநயத்தில் ஒரு மரபு.

ஒருபக்கம் இப்படியும் மறுபக்கம் அப்படியும் சொன்னோமாக்கும் (இங்கேயும் மிருதங்கமா) 🙂

நன்றிகள் உரித்தாகுக.

எந்த ஊர் என்பவரே  இந்தப்பாடலிலும் இந்த அழகு உள்ளது.

நன்றி பாஸ்!!! பின்னூட்டத்திலேயே சொன்னது போல், இது நான் எங்கோ படித்தது 🙂

ஸ்ரீதர்/நாகராஜ் – தகவலுக்கு நன்றி. தெரிந்து கொண்டேன்.

BTW, ‘வாலி அழகாக எழுதி இருக்கிறார்’ என்றால், ‘கம்பர் எழுதியதைத்தான் வாலி சொல்கிறார்’ என பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறீர்கள் – ஆனால், ராஜா என்றவுடன் ‘அடி.. பின்னி எடுத்திவிடுகீர்களே” 🙂

I can understand Boss – Attributing something so common to celebrities, irritate the people who have knowledge on that subject. It is just a honest mistake based on what I read, and I dont have any knowledge on Sanskrit or Dance.

First of all, one of your previous post about splitting words is completely falwed. You better learn about Tamizh Sandhi Ilakkanam before commenting. The problem with internet is, evan venum naa yenna yezhudhinaalum adhu authority aagidudhu….
Second, about this song – The lyricisy Veturi Sundarrama Moorthy [who wrote the Telugu version, from where the thogaiyara is carried forward], had asked SPB to split it, as ramesh is also Eesan – so the meaning doesnt change. At least inime vishayam purinjuttu post pannu da vennai [SPB, KJY ellam avan ivan naa, nee yum avan dhaan da vennai]
Third, you have absolutely no claibre, knowledge, talent or stature to publicly say ‘Avan’, ‘Ivan’ for SPB, KJY etc.

I have read your ‘Piriththalum Serththalum’. Your premise is completely flawed on that too… like in this one. As someone has mentioned, you would be better off learning ‘Sandhi ilakkanam’. I understand you are a writer. What a shame. You do not know or understand basics of sandhi and otru ezhuththu, and with complete impunity you start writing about it as though you are an authority on the subject. This is the problem with internet. Anyone who writes becomes an authority on the subject. I guess, I cant blame you completely. What can one do, when people quote Wikipedia as reference. All I can do is pity on your arrogance and lack of proper knowledge. And even for a minute think, I dont know Tamizh as I am typing this in English. I may not be unquestionable, but most certainly better than you.

As about this song, as some one educated you, Veturi allowed the split as it denotes [the second time] Lakshmi & Vishnu. From what I have seen of your writing, I dont expect you to have intelligence, but at least seeing the video you should have understood. Or is it too much for your peanut sized brain to grasp?

Dear “Un Arivu latchanathukku per ellam solla thevai illai: & “Its immaterial to your post. sorry”,

Thanks for your comments.

முதலில், இந்த இரண்டு பின்னூட்டங்களையும் எழுதியது ஒருவர்தான் என்பது எனக்குத் தெரியும், முதல் நபரின் பின்னூட்டத்தை இரண்டாவது நபர் உறுதிப்படுத்துவதுபோல் நன்கு நடித்துள்ளீர்கள், ஆனால் அதற்கு நீங்கள் முதல் பின்னூட்டம் Approve ஆகும்வரையாவது பொறுத்திருந்திருக்கவேண்டும், அதற்குள் இரண்டாவது பின்னூட்டத்தை இட்டதன்மூலம் உங்கள் குட்டு வெளிப்பட்டுவிட்டது, ஐபி அட்ரஸ் பார்ப்பதெல்லாம் அதன்பிறகுதான் :>

’இது ஒரு பெரிய விஷயமா?’ என்று நீங்கள் கேட்கலாம். ஆரம்பத்திலேயே இப்படி ஒரு பெரிய பொய்யுடன் கமெண்ட் சொல்ல வருகிற ஒருவர் சொல்லும் விஷயங்கள் உள்நோக்கம் அற்றவை என்று நாங்கள் எப்படி நம்புவது?

//First of all, one of your previous post about splitting words is completely falwed. You better learn about Tamizh Sandhi Ilakkanam before commenting//

என்னை இலக்கணம் படிக்கச் சொல்கிற நீங்கள்கூட Flawedக்கு சரியாக ஸ்பெல்லிங் எழுதியிருக்கலாம். சரி விடுங்கள், தட்டச்சுப் பிழை என்று நம்புகிறேன் :>

நான் ஏற்கெனவே தமிழ் சந்தி இலக்கணம் படித்திருக்கிறேன், அதை என் எழுத்தில் ஒழுங்காகப் பின்பற்றியும் வருகிறேன், பிழைகள் இருக்கலாம், சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வேன், அதை விட்டுவிட்டு ‘சந்தி இலக்கணம் படி’ என்று பொத்தாம்பொதுவாகக் கருத்துச் சொல்வது உங்களுடைய கோபத்தைதான் காட்டுகிறது, வாதத்தின் நேர்மையை அல்ல,

//The problem with internet is, evan venum naa yenna yezhudhinaalum adhu authority aagidudhu….//

நான் என்னை அத்தாரிட்டி என்று எங்கேனும் சொல்லிக்கொண்டேனா? முடிந்தால் அப்படி ஒரே ஒரு பதிவைக் காட்டுங்களேன், பார்க்கலாம்.

//The lyricisy Veturi Sundarrama Moorthy [who wrote the Telugu version, from where the thogaiyara is carried forward], had asked SPB to split it, as ramesh is also Eesan – so the meaning doesnt change//

சரி. இந்தத் தகவல் எனக்கோ இந்தப் பதிவின் மையக் கருத்தை எழுதிய நண்பருக்கோ தெரியவில்லை என்பது உண்மைதான். இப்போது நீங்கள் சுட்டிக்காட்டியதால் தெரிந்துகொண்டோம். சகலத்தையும் தெரிந்துகொண்டபிறகுதான் பதிவு எழுதவேண்டும் என்றால், யாரும் எதையும் எழுதமுடியாது.

//Third, you have absolutely no claibre, knowledge, talent or stature to publicly say ‘Avan’, ‘Ivan’ for SPB, KJY etc.//

அப்படி எழுதியது நான் அல்ல. நண்பர் ’பாலா அறம்வளர்த்தான்’, அவர் அதற்குத் தெளிவான காரணமும் சொல்லியிருக்கிறார், அதை நீங்கள் ஏற்க மறுக்கலாம், அது வேறு விஷயம்.

//you would be better off learning ‘Sandhi ilakkanam’//

அந்தப் பதிவில், சந்தி இலக்கணத்தின்படி என்ன பிழை என்றுதான் கொஞ்சம் சொல்லுங்களேன், இப்படிப் பொதுவாகக் கல்லெறிய யாராலும் முடியும், நீங்கள் விஷயம் அறிந்தவர் என்றால், அதை நிரூபித்து நான் / நாங்கள் எழுதியது தவறு என்று நிறுவவேண்டியது உங்கள் பொறுப்பு,

//I understand you are a writer. What a shame. You do not know or understand basics of sandhi and otru ezhuththu, and with complete impunity you start writing about it as though you are an authority on the subject//

Again, நான் என்னை அத்தாரிட்டியாக எங்கே சொல்லிக்கொண்டேன் என்கிற விவரம் தெரிவிக்கவும், நான் சந்திப்பிழை தவறி எழுதிய இடங்களைச் சுட்டிக்காட்டவும், அதன்பிறகு நான் எழுத்தாளனாக இருப்பதன் அபத்தம் குறித்து அலசலாம்,

//it too much for your peanut sized brain to grasp?//

கற்றது கடலைக்காய் அளவு. நன்றி!

– என். சொக்கன்,
பெங்களூரு.

Mister Sokkan,

Does it occur to you, that from any given IP two different people could post? Or is it too much to comprehend.

I stand by my comment, you really do need to learn sandhi ilakkanam. You being a writer, it is of paramount importance. The fact that you are asking for proof/ substantiation for the comment that your post on ‘Piriththalum Serththalum’ is flawed [yes, I can have typos. That doesnt demean my credibility in anyway sir], shows that you really have not understood the fundamental flaw in your argument against ‘Poovaadidum’ and ‘Niraththavalai’. Suggest you read a bit more Tamizh sir.

I could give you a load of example, but somehow I think it would be lost on you. And I dont even know where to begin to help you understand. Anyway, here is a basic one to begin with: thirukkural: aakuzhaal thondum asaivinnmaik kaiporul… You see the word ‘Asaivinmaik’? Try splitting that sir. Hope you don’t have to argue Thiruvalluvar didn’t know Tamizh.

Thank God you didn’t claim to be an authority. It would have been a serious intellectual affront had you claimed so. And, I disagree with your point on researching on a subject before ‘claiming’ something. If you write, that would be ok, but you claim, my friend. That is wrong

Dont bother trying reply with a smartness you hardly posses. I wouldn’t be coming back here. From what I have seen, your rants are a waste of time on an ill-informed so-called ‘writer’. Thanks & bye

Thank you Sir / Madam, for your kind response. As you won’t be returning here anyway, let me not waste anybody’s time with a reply

Nice to know detail and meaning of the song./கற்றது கடலைக்காய் அளவு. நன்றி! / 🙂

Excellent. I did not note this in the song so far. However, this Parvathi Parameswarau and Parvathi Pa Ramaeswarau (Parvathi ka pa(thi) and Ramaeswarau, i.e. Shiva and Vishnu in the same word suggesting they are one and the same) is mentioned by Kanchi Paramacharya, in one of his lectures delivered around the 1950s and 1960s, which was later drafted as a series of books called Deivathin Kural by Ra. Ganapathi in the 70s and 80s. It is indeed wonderful that Ilayaraaja incorporated that aspect it in this song to make the dancer bow before Shiva and Vishnu 🙂

தல உங்க பதிவின் கேள்விக்கு இசை தெய்வத்தின் பதில்

சரியாக 5.00 தொடங்குது…பாருங்கள்

அடடே, சந்தோஷம் 🙂 நன்றி நண்பா

அன்புள்ள சொக்கன்,
உங்கள் இடுகை நன்றாக இருந்தது. யு ட்யூபில் சலங்கை ஒலி பாடலையும், கமல்ஹாசன், ஜயப்ரதாவின் நடனத்தையும் கண்டேன். நடனம் அற்புதம். முதலில் பார்வதி மற்றும் சிவன், இரண்டாவது முறை வரும்போது ‘பார்வதீப’ என்பதற்கு அர்த்தநாரீஸ்வருடைய அபிநயம், ‘ரமேஸ்வரம்’ என்பதற்கு மகாலக்ஷ்மியோடு பாற்கடலில் சயனம் கொண்டிருக்கும் விஷ்ணுவுடைய அபிநயம் நன்றாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அன்புடன்,
வ.க.கன்னியப்பன்

[…] பிரித்துப் பாடுவது பற்றிய செய்தியை இங்கே சென்று பார்த்துக் […]

[…] பிரித்துப் பாடுவது பற்றிய செய்தியை இங்கே சென்று பார்த்துக் […]

இந்தப் பாடலைப் பற்றிய இந்தத் தகவலை இன்றுதான் உங்கள் இடுகை மூலம் அறிந்து கொண்டேன். நன்றி!

ஆங்கிலத்தில் அநாகரிகமாக எழுதியிருக்கும் ஆசாமிகளுக்கெல்லாம் உங்கள் தளத்தில் இடம் அளிக்கத் தேவையில்லை. உங்களுடைய light hearted writings ஐப் புரிந்து கொள்ளமுடியாத இறுகிய மனமுடையவர்கள் இவர்கள்.

நானும் இளையராஜாவின் இசைக்கு அடிமைதான். ஆனால், அவருடைய பேச்சுக்கு அல்ல!

Leave a comment

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,666 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2012
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930